/indian-express-tamil/media/media_files/2025/05/06/trsvlPMfnmyxJDzhQ0GB.jpg)
வாயுத்தொல்லைக்கு ஸ்வசி ஹெல்த் ஸ்பாட் (Swasi Health Spot) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் அக்ஷயன் ஒரு தேநீர் ஒன்றைப் பரிந்துரைக்கிறார். அது என்ன தேநீர் எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
எதை சாப்பிட்டாலும், எதுக்களிக்கிறது, ஏப்பம் வருகிறது, அபான வாயுவாகப் பிரிகிறது, இப்படி நீண்டநாள் வாயுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா, உங்களுக்கு ஒரே ஒரு தேநீர் போதும் பல நாள் வாயுத்தொல்லை போகும் என்று டாக்டர் அக்ஷயன் ஆலோசனை கூறுகிறார்.
வாயுத்தொல்லைக்கு ஸ்வசி ஹெல்த் ஸ்பாட் (Swasi Health Spot) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் அக்ஷயன் ஒரு தேநீர் ஒன்றைப் பரிந்துரைக்கிறார். அது என்ன தேநீர் எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
சிலருக்கு எதை சாப்பிட்டாலும், எதுக்களிக்கும், ஏப்பம் வரும், அபான வாயுவாகப் பிரியும், இப்படி நீண்டநாள் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள், ஒரே ஒரு தேநீர் குடித்தால் பல நாள் வாயுத்தொல்லை போகும் என்று டாக்டர் அக்ஷயன் ஆலோசனை வழங்குகிறார்.
வாயுத் தொல்லை குறித்து டாக்டர் அக்ஷயன் கூறுகையில், “வாயுத்தொல்லை என்பது வேறு ஒன்றும் இல்லை. செரிமான மண்டலம் சீராக வேலை செய்யாதபோது, வாயுத்தொல்லை ஏற்படுகிறது. வாயுத்தொல்லை ஏற்பட்டால், மலச்சிக்கல் ஏற்படும். வாயுத்தொல்லை ஒரு நோயா என்றால் இல்லை, ஆனால், இது நோயின் அறிகுறி என்று கூறுகிறார்.
மேலும், இந்த வாயுத்தொல்லையை சரி செய்ய நாம் செரிமான மண்டலத்தை சரி செய்ய வேண்டும். பல நாள் வாயுத்தொல்லைகூட இந்த ஒரே ஒரு தேநீர் குடித்தால் சரியாகிவிடும் என்று டாக்டர் அக்ஷயன் கூறுகிறார். இந்த தேநீர் எப்படி செய்ய வேண்டும் என்றால், ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் ஓமம், அரை ஸ்பூன் பெருங்காயம் போட்டு ஒன்றரை டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி முக்கால் டம்ப்ளராக வரும் வரை கொதிக்க வைத்து அந்த கஷாயத்தை தேநீராகக் குடித்தால் வாயுத்தொல்லை சரியாகும். இது எவ்வளவு நாளில் பலன் தெரியும் என்றால், சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அதனுடைய பலனை உணரமுடியும் என்று டாக்டர் அக்ஷயன் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.