45 நிமிட நடை, 3 லிட்டர் தண்ணீர்... மாரடைப்பை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க: டாக்டர் அன்பரசு
மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய 5 உணவுகள் மற்றும் 45 நிமிட நடை, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்று டாக்டர் அன்பரசு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய 5 உணவுகள் மற்றும் 45 நிமிட நடை, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்று டாக்டர் அன்பரசு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாரடைப்பைத் தடுக்கக்கூடிய 5 உணவுகள் மற்றும் 45 நிமிட நடை, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என்று டாக்டர் அன்பரசு ஆலோசனை வழங்கியுள்ளார். Image: YouTube/ @SUGAM_DIABETES_HOSPITAL
மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய 5 உணவுகள் மற்றும் 45 நிமிட நடை, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்று டாக்டர் அன்பரசு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Advertisment
தற்போது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதனால், இந்த மாரடைப்பு வருமுன் தடுப்பது நல்லது. அதற்காக, சுகம் டயாபட்ஸ் ஹாஸ்பிடல் (@SUGAM_DIABETES_HOSPITAL) என்ற யூடியூப் சேனலில் சர்க்கரை நோய் மற்றும் குடும்ப நல மருத்துவர் டாக்டர் அன்பரசு வழங்கியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போம்.
டாக்டர் அன்பரசு கூறுகிறார்: “மாரடைப்பைத் தடுக்கக்கூடிய 5 உணவுகளை சொல்கிறேன் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது இருதய நோயாளிகள் இருந்தால் அவர்களுக்கு ஷேர் பண்ணி விடுங்கள். முதலில் பூண்டு, இதில் இருக்கக்கூடிய சல்பர் கண்டெய்னிங் மூலக்கூறு உங்கள் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது.
Advertisment
Advertisements
இரண்டாவது பாதாம், இதில் இருக்கக்கூடிய ஃபிளேவனாய்ட்ஸ் உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இருதயம் சீராக இயங்க உதவுகிறது.
மூன்றாவது லவங்கப்பட்டை, இதில் இருக்கக்கூடிய டேனிங்ஸ் இதயத்திற்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது.
நான்காவது இஞ்சி, இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்ஸ் ரத்தம் உறைதலைத் தடுக்க உதவுகிறது. ஐந்தாவது ஆப்பிள் சிடர் வினிகர் உங்களுடைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயம் சீராக இயங்க உதவுகிறது.” என்று கூறியுள்ளார்.
மாரடைப்பைத் தடுக்கும் இந்த 5 உணவுப் பொருட்களுடன், தினமும் 45 நிமிடம் நடைபயிற்சி, 8 மணி நேரம் நல்ல தூக்கம் , சீரான இடைவெளியில் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்று சர்க்கரை நோய் மற்றும் குடும்ப நல மருத்துவர் டாக்டர் அன்பரசு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.