அப்பட்டமான பொய்... பாதாமை இப்படியும் சாப்பிடலாம்: விளக்கும் டாக்டர் அருண்குமார்
த்துகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பாதாம் பருப்பை உறவைத்து சாப்பிட வேண்டுமா, அப்படியே சாப்பிட வேண்டுமா என்று பலருக்கும் ஐயம் இருக்கிறது. பாதம் குறித்த ஆய்வு ஒன்றை டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
பாதாமை ஊறவைத்து சாப்பிட வேண்டுமா, அப்படியே சாப்பிட வேண்டுமா எது நல்லது என்றால், யுரோப்பியன் ஜோர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் என்று சொல்லக்கூடிய என்ற நேச்சர் பப்ளிஷிங் ஆய்விதழில், ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.
பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடலுக்கு சத்துகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பாதாம் பருப்பை உறவைத்து சாப்பிட வேண்டுமா, அப்படியே சாப்பிட வேண்டுமா என்று பலருக்கும் ஐயம் இருக்கிறது. பாதம் குறித்த ஆய்வு ஒன்றை டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
Advertisment
பாதாமை ஊறவைத்து சாப்பிட வேண்டுமா, அப்படியே சாப்பிட வேண்டுமா எது நல்லது என்றால், யுரோப்பியன் ஜோர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் என்று சொல்லக்கூடிய என்ற நேச்சர் பப்ளிஷிங் ஆய்விதழில், ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள். பாதாமை 4 வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
பாதாமை நிறைய பேருக்கு அப்படியே கொடுத்து பார்த்திருக்கிறார்கள். அதே போல, ஒரு குழுவினருக்கு முழு பாதாமை ஊறவைத்து கொடுத்திருக்கிறார்கள். அதே போல, பாதாமை ஸ்லைஸ் பண்ணி எப்படி சாப்பிட முடியுமோ அப்படி பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு ஷாக்கிங்கான முடிவு வந்துள்ளதாக டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
Advertisment
Advertisements
ஊற வைக்காத 100 கிராம் பாதாமில், பைடிக் அமிலம் (Phytic Acid) 531 மி.கி இருந்துள்ளது.
ஊறவைத்து பின் கொஞ்சம் உலரவைத்த பாதாமில் பைடிக் அமிலம் (Phytic Acid) 30 மி.கி அதிகரித்து 563 மி.கி இருந்துள்ளது.
ஸ்லைஸ் பண்ணி ஊற வைத்த 100 கிராம் பாதாமில் பைடிக் அமிலம் 548 மி.கி அதிகரித்திருக்கிறது.
அதற்கு காரணம் என்ன என்று சொல்கிறார்கள் என்றால், அப்படியே ஊறவைத்து காய வைத்தாலோ, ஸ்லைஸ் பண்ணி ஊறவைத்து காயவைத்தாலோ, அதனால், அதனுடைய நீர்த்தன்மை குறைவதால் அதனுடைய நியூட்ரிஷன் அதிகமாவது போல இருக்கிறது. காய்ந்த பொருள் கொஞ்சம் அதனுடைய நியூட்ரிஷன் அதிகமாகும்.
அதனால், ஊறவைத்தால் பைடிக் அமிலம் தண்ணீரில் எங்கும் போவதில்லை. பாதாமை ஊற வைத்தால் வயிறு நல்லா இருக்கும் என்பதோ, டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்பதோ, அல்லது பைடிக் அமிலம் குறையும் என்பதோ எல்லாமே ஒரு அப்பட்டமான பொய் என்று ஆய்வுகள் கூறுவதாக டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.