சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி, சர்க்கரை நோயை உணவுமுறையால் கட்டுப்படுத்த முடியுமா, குணப்படுத்த முடியுமா என்பதுதான் பல சர்க்கரை நோயாளிகளின் கேள்வியாக உள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, டாக்டர் அருண்குமார் யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
சர்க்கரை நோயை உணவுமுறை மூலம் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து டாக்டர் அருண்குமார் கூறுவதை இங்கே பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவு பரிந்துரை செய்யும் டாக்டர்கள் உணவுகளில் உள்ள கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவை வைத்துதான் பரிந்துரை செய்கிறார்கள். அதாவது கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிக அளவில் உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது என்றும் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடலாம் என்றும் பரிந்துரை செய்கிறார்கள். இது சரியானதா, இல்லை வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
கிளைசெமிக் என்பது உணவில் உள்ள மாவுச்சத்து ஆகும். எந்த உணவில் எவ்வளவு மாவுச்சத்து உள்ளது என்று கணக்கிட்டு கூறப்படுகிறது.
சர்க்கரை நோ என்பது உடலில் இன்சுலின் எதிர்ப்பு தன்மையினாலும், அல்லது இன்லின் பற்றாக்குறையினாலும் நாம் சாப்பிடுகிற சாப்பாடு குளுகோசாக மாறி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. அந்த குளுகோசை உடலில் உள்ள செல்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதனால், ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது.
அதாவது, எந்தெந்த உணவில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதோ அது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்று கூறுகிறார்கள். அதாவது, கிளைசெமிக் இண்டெக்ஸ் 55க்கு குறைவாக உள்ள உணவுகளை சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவு என்று கூறுகிறார்கள். கிளைசெமிக் இண்டெக்ஸ் 55 - 70 இருந்தால் மிதமான உணவு, கிளைசெமிக் இண்டெக்ஸ் 70-க்கு மேல் இருந்தால் கடினமான உணவு என்கிறார்கள்.
ஆனால், கிளைசெமிக் இண்டெக்ஸைவிட, கிளைசெமிக் லோட் பற்றி டாக்டர் அருண்குமார் கூறுகிரார். அதாவது,
ஒரு உணவின் கிளைசெமிக் இண்டெக்ஸ் எண்ணிக்கையை, அதாவது அந்த பொருளில் 100 கிராமில் எவ்வளவு மாவுச்சத்து இருக்கிறது என்பதை கார்போஹைட்ரேட் அளவு மூலம் பெருக்கி அதை 100 ஆல் வகுத்தால், அதில் வரக்கூடிய எண்ணிக்கைதான் கிளைசெமிக் லோட் ஆகும்.
பொதுவாக நாம் சாப்பிடுகிற பொருட்களில் உள்ள கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு தெரிந்துகொள்வோம், இட்லி - 60, சோறு - 72, சப்பாத்தி - 60, மைதா - 72, ராகி - 70, சிறுதானியங்கள் - 60 என கிளைசெமிக் இண்டெக்ஸ் எண்ணிக்கை உள்ளது.
ஆனால், ஐஸ்கிரிமில் 36-50 கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. ஆனால், அதில் உள்ள சர்க்கரை ஆபத்தானது. கேரட்டில் கிளைசெமிக் இண்டெக்ஸ் 92 உள்ளது. தர்பூசணியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் 80 உள்ளது.
அதனால்தான், உணவில் கிளைசெமிக் லோட் குறைவாக இருக்க வேண்டும். கிளைசெமிக் லோட் 10 வரை இருந்தால் சாப்பிடலாம். கிளைசெமிக் லோட் 11-19 இருந்தால் மிதமானது. கிளைசெமிக் லோட் 20-க்கு மேல் இருதால் கடினமானது, சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
அதனால், கிளைசெமிக் இண்டெக்ஸை மட்டும் கணக்கில் கொள்ளாமல் கிளைசெமிக் லோட் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, எந்தெந்த உணவில் கிளைசெமிக் லோட் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்போம்.
கிளைசெமிக் லோட் கேரட்டில் 8, கிளைசெமிக் லோட் தர்பூசணியில் 4, ஐஸ்கிரீமில் கிளைசெமிக் லோட் 9, சுண்டலில் 9 உள்ளது.
அதே போல, இட்லியில் கிளைசெமிக் லோட் 30, சோறு 33, ராகி 23, சப்பாத்தி 20 என கிளைசெமிக் லோட் எண்ணிக்கை உள்ளது.
அதனால், சர்க்கரை நோயாளிகள், கிளைசெமிக் இண்டெக்ஸை மட்டும் கணக்கில் கொள்ளாமல் கிளைசெமிக் லோட் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சிக்கனில் கிளைசெமிக் லோட் 0, முட்டையில் கிளைசெமிக் லோட் 0, பாதாம் போன்ற பருப்பு வகைகளில் கிளைசெமிக் லோட் 0, எனவே ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம் என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.