தமிழகத்தில் இந்தப் பகுதி பெண்களுக்கு எலும்பு பலம் அதிகம்; காரணம், இந்த மீன்..! டாக்டர் ஆஷா லெனின்
கேரளா பார்டர் பக்கம் இருக்கிற தமிழக கடலோர பகுதிகளான நாகர்கோவில், திருநெல்வேலி பகுதி பெண்களுக்கு எலும்பு பலம் அதிகம் அதற்கு காரணம் இந்த மீன் தான், இந்த மீனை வாரத்திற்கு 3 நாளாவது சமைத்து சாப்பிடுங்கள் என்று டாக்டர் ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார்.
கேரளா பார்டர் பக்கம் இருக்கிற தமிழக கடலோர பகுதிகளான நாகர்கோவில், திருநெல்வேலி பகுதி பெண்களுக்கு எலும்பு பலம் அதிகம் அதற்கு காரணம் இந்த மீன் தான், இந்த மீனை வாரத்திற்கு 3 நாளாவது சமைத்து சாப்பிடுங்கள் என்று டாக்டர் ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார்.
இந்த மீனில் உள்ள சத்துக்கள், அதை சமைத்து சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார். (YouTube/ Dr Asha Lenin)
கேரளா பார்டர் பக்கம் இருக்கிற தமிழக கடலோர பகுதிகளான கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி பகுதி பெண்களுக்கு எலும்பு பலம் அதிகம் அதற்கு காரணம் இந்த மீன் தான், இந்த மீனை வாரத்திற்கு 3 நாளாவது சமைத்து சாப்பிடுங்கள் என்று டாக்டர் ஆஷா லெனின் பரிந்துரைக்கிறார். அது என்ன மீன் அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதைப் பார்ப்போம்.
Advertisment
மத்தி மீனில் உள்ள சத்துக்கள், அதை சமைத்து சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து தனது யூடியுப் சேனலில் டாக்டர் ஆஷா லெனின் பேசியுள்ளார்.
டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்: இன்று காலை ஒரு சிறப்பு குழந்தையின் அம்மா வந்திருந்தார். அவர் எனது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு என்ன உணவு கொடுப்பீகள் என்று கேட்டார். சூப்பர் பிரைன் ஃபூட் என்று சொன்னால் எல்லாரும் மீன் சொல்வார்கள். பெரும்பாலும், சால்மன் மீன் என்று சொல்வார்கள். ஆழ்கடலில் இருக்கக்கூடிய மீன்களில் இதுவும் ஒரு மீன்.
Advertisment
Advertisements
ஆழ்கடலில் இருக்கக்கூடிய மீன்களில் மெர்குரி இருக்கும் என்பதால் பயப்படுவார்கள். ஆழ்கடலில் இருக்கக்கூடிய சுறா வகையான் மீன்கள் சின்ன சின்ன மீன்களை நிறைய சாப்பிடும் என்பதால் நிறைய டாக்சின்ஸ் காரணமாக அதில் மெர்குரி இருக்கும். ஆனால், மெர்குரி ரொம்ப கம்மியாக இருக்கும் மீன் இந்த மத்தி மீன்.
பொதுவாக மீனில் ஒமேகா கொழுப்புகள் இருக்கும் என்பார்கள். ஆனால், இந்த மத்தி மீனில் ஒமேகா கொழுப்புகள் மட்டுமில்லாமல், வைட்டமின் டி, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, செரிலினியம் என நிறைய சத்துக்கள் இருக்கிறது.
கேரளாவில் அதிகம் மத்தி மீன் சாப்பிடுவார்கள். இதனால், கேரளாவில் வைட்டமின் டி பற்றாக்குறை இருக்காது. ரத்தப் பரிசோதனை சர்வேயில், தமிழ்நாட்டில் வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கும். இதற்கு காரணம் கேரளாவில் அதிகம் மத்தி மீன் சாப்பிடுவார்கள். தமிழககத்தின் கேரளா எல்லையோர பகுதிகளான நாகர்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் உள்ள பெண்களுக்கு எலும்பு உறுதியாக இருக்கும், முகம் பளபளப்பாக இருக்கும். இதற்கு காரணம் இந்த மத்தி மீன்கள் அதிகம் சாப்பிடுவதால்தான்.
அதுமட்டுமில்லை, சிலர் இந்த மத்தி மீனை முள்ளுடன் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும்போது, வைட்டமின் டி, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, செரிலினியம் மட்டுமில்லாமல், பாஸ்பரஸ், கால்சியம் கிடைக்கிறது. இந்த மத்தி மீனில் கால்சியம், பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கிறது.
எனக்கு ஏன் இந்த மத்தி மீனை ரொம்ப பிடிக்கும், ஆட்டிசம் குழந்தைகள், ஸ்பெஷல் குழந்தைகளுக்கு மத்தி மீனை பரிந்துரைக்கிறேன். வீட்டில் தினமும் 2 துண்டு மத்தி மீன் குழந்தைகளுக்கு கொடுங்கள் என்று சொல்வேன். இந்த மத்தி மீனை ஆங்கிலத்தில் சார்டைன் (Sardine) மீன் என்று சொல்வார்கள். இந்த மத்தி மீனில் உள்ள மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ்ட் பகுதியை செயல்படத் தூண்டுகிறது.
மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ்ட் பகுதி செயல்பட்டால் குழந்தைகளின், கற்றல், சிந்தனை, கவனம், பேச்சு வரும் என்பது ஆராய்ச்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. மிகவும் மலிவான விலை கொண்ட இந்த மத்தி மீனை அனைவரும் வாரத்தில் 3 நாளாவது சமைத்து சாப்பிடுங்கள்.” என்று டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.