ஒரு கப் பால், 10 மிளகு... வருடக் கணக்கில் தீராத தொண்டைச் சளிக்கு டாக்டர் தீபா ரெமடி
"தொண்டை கவ்வும்போது மிதமான சூடு இருக்கும் தண்ணீரை அவ்வப்போது பருகி வர வேண்டும். நிறைய குடிக்காமல் 30 மில்லி அளவு பருகலாம்." என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
"தொண்டை கவ்வும்போது மிதமான சூடு இருக்கும் தண்ணீரை அவ்வப்போது பருகி வர வேண்டும். நிறைய குடிக்காமல் 30 மில்லி அளவு பருகலாம்." என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
எல்லாக் காலத்திலும் பெரும் தொல்லை கொடுப்பதாக தொண்டைச் சளி இருந்து வருகிறது. அதனை சரி செய்ய டாக்டர் தீபா சில எளிமையான குறிப்புகளை வழங்கி இருக்கிறார். இதுகுறித்து டாக்டர் தீபா அருளாளன் மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் பேசியது வருமாறு:-
Advertisment
என்னிடம் வரும் நோயாளிகளில் பலருக்கு தொண்டைச் சளி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சளிப் பிரச்சனை சில நாட்களில் சரியாகி விட்டாலும், மீண்டும் அந்தத் தொல்லை வந்து விடுவதாக கூறுகிறார்கள். பொதுவாக, தொண்டையில் சளி என்பது வராது. அது சுவாசக் குழலில் தான் வரும்.
தொடர்ந்து பேசுபவர்கள், சொற்பொழிவாளர்கள், பாடல் பாடும் மக்கள் போன்றவர்களுக்கு தொண்டையில் ரணம் ஏற்படும். இதனை வீக்கம் என்று கூறுவார்கள். இந்த வீக்கத்தில் இருந்து ஒருவித திரவம் வரும். இதனைத் தான் நோயாளிகள் பலரும் தொண்டைச் சளி என்கிறார்கள்.
இதற்கு தீர்வு என்னவென்றால், நாம் அடிக்கடி காருவதை நிறுத்த வேண்டும் இப்படி செய்யும் போது, தொண்டையில் இருக்கும் அந்த ரணம் குறையும். தொண்டை கவ்வும்போது மிதமான சூடு இருக்கும் தண்ணீரை அவ்வப்போது பருகி வர வேண்டும். நிறைய குடிக்காமல் 30 மில்லி அளவு பருகலாம்.
Advertisment
Advertisement
அடுத்த தீர்வு, சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, கால் டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை கொண்டு வாய் கொப்பளித்து வர வேண்டும். வாய் கொப்பளிக்கும் போது வெறுமனே தண்ணீரை வாய்க்குள் வைத்திருக்கக் கூடாது. தண்ணீரை வாய்க்குள் ஊற்றிய பிறகு, அப்படி மேலே பார்க்கும்படி அண்ணாரா வேண்டும். தண்ணீர் அப்படி தொண்டைக்குள் இறங்கிய பிறகு தலையை கீழே இறக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பவர்கள், தொண்டையில் வலி இருக்கும் மவுன விரதம் போல் இருக்கலாம். அல்லது மெதுவாக பேசலாம். இந்தப் பிரச்சனை நீண்ட நாளாக இருப்பவராக இருந்தால், முக்கால் டம்பளர் பால், அதில் கால் பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதிக்கும் 10 மிளகுகளை நுணுக்கி சேர்க்கவும். அத்துடன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இவை நன்கு கொதித்து வந்த பிறகு வடிக்கட்டிக் கொள்ளவும். பிறகு அதனை பருகி வர வேண்டும்.இதேபோல் தொடர்ந்து ஒருவாரம் பருகி வர வேண்டும்.
மற்றொரு முறை தேவை என்பவர்களுக்கு, அதேபோல் பால் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் பாலில் 3 பல் பூண்டு சேர்க்க வேண்டும். அதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்க்க வேண்டும். இதனை வடிகட்டிய பிறகு அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒருவாரம் பருகி வந்தால் தொண்டை சளி தீரும்.