சர்க்கரை நோய் தேசிய வியாதி என்று சொல்கிற அளவுக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் 45 வயது, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த காலம் போய், இப்போது இளைஞர்களுக்கு சிறுவர்களுக்கு எல்லாம் சர்க்கரை நோய் வருவது அதிர்ச்சியாக உள்ளது.
இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சுகர் கில்லர் என்று அழைக்கப்படும் ஒரு மூலிகையை நாட்டு மருந்துக் கடையில் வாங்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரையை முழுவதுமாகக் குறைக்கலாம் என்று டாக்டர் தீபா அருளாளன் பரிந்துரைக்கிறார். அது என்ன மூலிகை என்று பார்ப்போம்.
சத்குரு சாய் கிரியேசன்ஸ் யூடியூப் சேனலில் மருத்துவக் குறிப்புகளை வழங்கி ஓமியோபதி மருத்துவர் டாக்டர் தீபா அருளாளன் பேசுகையில், “இப்போதெல்லாம் சர்க்கரை வியாதி என்பது ஒரு பொதுவான நோயாகி விட்டது. சின்ன பிள்ளைங்க, நடுத்தர வயதினர், எல்லாருக்குமே சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய் இருக்கத்தான் செய்கிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பெரும்பாலானோர் வேதிப்பொருள் கலவை உள்ள (கெமிக்கல் காம்பினேஷன்) மாத்திரைகளை எடுத்துக்கொள்ள ரொம்பவே பயப்படுகிறார்கள். அந்த மாத்திரைகளை சாப்பிட்டால் சிறுநீரகப் பிரச்னை வருமாமே என்று அச்சப்படுகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல” என்று கூறுகிறார்.
இருந்தாலும், சர்க்கரை நோய்க்கு கெமிக்கல் காம்பினேஷன் மாத்திரை எடுத்துக்கொள்ள பயப்படுபவர்களுக்கு, சில மூலிகைக் கலவையை மருந்தாக எங்களைப் போன்ற டாக்டர்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு வீட்டு வைத்தியமாக சிறுகுறிஞ்சான் மூலிகையை பரிந்துரை செய்யும் டாக்டர் தீபா அருளாளன், “இந்த மூலிகையை நிறைய ஆராய்ச்சிகள் செய்து இதை சுகர் கில்லர் என்று சொல்லியிருக்கிறார்கள், அது என்ன மூலிகை என்றால், சிறுகுறிஞ்சான் என்ற மூலிகைதான் அது. இதை இந்தி குர்மார் என்று சொல்கிறார்கள். சிறுகுறிஞ்சான், குர்மார் என்றால் சுகர் கில்லர் ஆகும். இந்த மூலிகை எதனால் சர்க்கரையைக் குறைக்கிறது என்றால், இதில் இருக்கும் ஜிம்னெமிக் அமிலம், சபோனின்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ், குர்மாரின் ஆகிய பொருட்கள், சர்க்கரையை ரத்தத்தில் பெருமளவு குறைக்கிறத என்று பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டிருக்கிறார்கள்.” என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
ஓமியோபதியில், சர்க்கரை நோய் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்றால், ஜிம்னெமா சில்வெஸ்ட்ரி க்யூ, சைஜியம் ஜம்போலினம் க்யூ ஆகிய மருந்துகளை நான் அடிக்கடி சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து என்கிறார் டாக்டர் தீபா அருளாளன்.
ஆனால், இந்த எல்லா மருந்து முறையிலும் இந்த சிறுகுறிஞ்சானை பயன்படுத்தவே செய்கிறார்கள் என்று கூறும் டாக்டர் தீபா அருளாளன், “இந்த சிறுகுறிஞ்சான் மூலிகை பவுடர் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. ஆன்லைனில் கிடைக்கிறது. நேரடியாக சிறுகுறிஞ்சான் மூலிகையே கிடைக்கிறது என்றால் வாங்கிக்கொள்ளலாம். பச்சையாக சிறுகுறிஞ்சானை வாங்கினால், நன்றாகக் காய வைத்து பவுடன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், நாட்டு மருந்துக் கடையில் சிறுகுறிஞ்சான் பவுடர் வாங்கிக்கொள்ளலாம்.” என்று கூறுகிறார்.
மேலும், இந்த சிறுகுறிஞ்சான் பவுடரை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை டாக்டர் தீபா அருளாளன் கூறுகையில், “காலையில், மாலையில் தினமும் 2 வேளை, இந்த சிறுகுறிஞ்சான் பவுடரில் அரை டீஸ்பூன் பவுடர் எடுத்து, 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, அது முக்கால் கிளாஸ் ஆன பிறகு, அதை வடிகட்டி அப்படியே குடித்துக்கொள்ளலாம்.” என்கிறார்.
இந்த சிறுகுறிஞ்சான் பவுடரை இப்படி குடிக்கும்போது, உங்களுடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாகக் குறையும். காலை, மாலை இன்சுலின் 30 யுனிட் எடுத்துக்கொள்கிறேன் ஆனால், சர்க்கரை அளவு குறையவே மாட்டங்கிறது என்று கஷ்டப்படுபவர்கள், இந்த சிறுகுறிஞ்சான் பவுடரை தினமும் 48 நாள் தொடர்ந்து குடித்தால், உங்களுடைய சர்க்கரை அளவு குறையும். பிறகு, உங்களுடைய நீரிழிவு நோய் மருத்துவர் இன்சுலின் அளவை படிப்படியாக குறைத்து ஒரு நேரம் இன்சுலின் போதும் என்று சொல்வார். இந்த சிறுகுறிஞ்சான் பவுடரை நீங்கள் தொடர்ந்து குடிக்கும்போது, இன்சுலினே வேண்டாம், மாத்திரை போதும் என்பார். பின்னர் மாத்திரையையும் குறைத்து ஒரு கட்டத்தில் உணவு முறையிலேயே கட்டுப்படுத்தலாம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு, இந்த சிறுகுறிஞ்சான் பவுடரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சுகருக்கு குட்பை சொல்லலா என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.