எடை குறைப்பு முதல் மூட்டு வலிக்கான நிவாரணம் வரை உறுதியாக பலனளிக்கக்கூடிய மூலிகை, அதுமட்டுமல, 108 மூலிகைகள் செய்யக்கூடிய வேலையை இந்த ஒரு மூலிகை செய்யும் என்று டாக்டர் தீபா பரிந்துரைக்கிறார். அவர் என்ன மூலிகையைப் பரிந்துரைக்கிறார், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.
சத்குரு சாய் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் பிரபல ஓமியோபதி மருத்துவரான டாக்டர் தீபா கருஞ்சீரகத்தின் பயன்களைக் கூறியுள்ளார். மரணத்தைத் தவிர அனைத்து நோய்களையும் சரி செய்யக்கூடியது கருஞ்சீரகம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதாக டாக்டர் தீபா கூறுகிறார்.
கலோஞ்சி ஆயில், அதாவது கருஞ்சீரகம் எண்ணெய் ரொம்ப பிரபலம், தலைமுடிக் கொட்டுவதை நிறுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்கிறார். கருஞ்சீரகம் எண்ணெய் செய்வதற்கு 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் வாங்கிக்கொள்ளுங்கள், ஒரு அடி கனமான இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றுங்கள். அதில் 100 கிராம் கருஞ்சீரகம் போட்டு, ஸ்டவ்வில் தீயை சிம்மில் வைத்து பற்ற வையுங்கள். அரை மணி நேரம் அவ்வப்போது கிளறிவிடுங்கள். பிறகு ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடுங்கள். ஒரு 6 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். இப்போது கருஞ்சீரக எண்ணெய் தயார். இப்போது இந்த எண்ணெய்யைத் தொட்டு தலையில் லேசாக மசாஜ் செய்யுங்கள், கூலம் கூலமாக முடி கொட்டுவது நிற்கும், முடி வளமாக ஷைனிங்காக வளரும் என்கிறார் டாக்டர் தீபா.
அதே போல, கருஞ்சீரகம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்று டாக்டர் தீபா பரிந்துரைக்கிறார். இரவில் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில், அதில் இருக்கிற தண்ணீரை எல்லாம் உறிஞ்சப்பட்டிருக்கும். சிறிதளவு மட்டுமே தண்ணீர் இருக்கும். இதை எடுத்து, இதனுடன் சோற்றுக்கற்றாழை ஜெல் தயிர் அல்லது பச்சைப் பால் ஊற்றி நன்றாக அரைத்து கண் பகுதியை மட்டும் விட்டுவிட்டு முகத்தில் ஃபேஸ்மாஸ்க் போல போடலாம். அரை மணி நேரம் கழித்து தண்ணீர் தொட்டு முகம் கழுவிக் கொள்ளலாம். இப்படி செய்தால் முகம் சுருக்கங்கள் சரியாகும், சருமத்தின் அடத்தி அதிகரிக்கும், பொலிவுடன் இருக்கும் என்கிறார் டாக்டர் தீபா.
அதே போல, கர்ப்பப்பை கொழுப்புக்கட்டி, கர்ப்பப்பை தசைநார் கட்டி, கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்றவற்றை சரி செய்ய எல்லூட்டி என்று ஆயுஷ் மருத்துவர்கள் கருஞ்சீரகத்தை மருந்தாக அளிப்பதாக டாக்டர் தீபா கூறுகிறார்.
சன்ன லவங்கப்பட்டை 100 கிராம், சீரகம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் தனித்தனியாக தூளாக அரைத்து, 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
அதை ஒரு நாளைக்கு 2 முறை, 1 டீஸ்பூன் பவுடன் எடுத்து, 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து முக்காள் கிளாஸ் தண்ணீராக ஆன பிறகு, அதை இறக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு, காலையில் மாலையில் குடித்தால் எடை குறையும்.
இதுவே ஒல்லியாக இருக்கிறார்கள், அவர்கள் எடைபோட வேண்டும் என்றால், அதில் தேன் கலந்து காலையில் மாலையில் இரண்டு வேளையும் சூடாகக் குடிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் தீபா.
அதே போல, எடை குறைக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு ஒரு டீ மற்றும் யோகாசனம் பயிற்சி அளிப்பதாக டாக்டர் தீபா கூறுகிறார். எடை குறைக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு என்ன டீ தரப்படுகிறது என்பதை டாக்டர் தீபா விளக்கியுள்ளார்.
கருஞ்சீரகம் 100 கிராம், சோம்பு 100 கிராம் எடுத்துக்கொண்டு இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து தனித் தனியாக தூளாக அறைத்து, அதில் 3 டீஸ்பூன் மஞ்சள் போட்டு ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 முறை, 1 டீஸ்பூன் தூள் எடுத்து, 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து முக்கால் கிளாஸ் ஆன பிறகு, 1 சிட்டிகை உப்பு போட்டு குடித்தால், இதைக் குடிக்கும்போது, எடை குறைப்பதில் பலனளிக்கிறது என்று டாக்டர் தீபா கூறுகிறார்.
அதே போல, இந்த கருஞ்சீரகம், மூட்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி ஆகியவற்றுக்கும் கருஞ்சீரகம் கொடுப்பதாக டாக்டர் தீபா கூறுகிறார். மூட்டுவலி போன்றவற்றுக்கு, கருஞ்சீரகம் எப்படி கொடுக்கப்படுகிறது என்றால், பிரண்டையை, 5 இனுக்கு எடுத்துக்கொண்டு, மிக்ஸியில் போட்டு ஒன்னும் பாதியுமாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு சொம்பு தண்ணீரில் போட்டு, அதனுடன் 1 டீஸ்பூன் கருஞ்சீரகம் போட்டு, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும்போதே 2 பூண்டு பல்லை நசுக்கி போட்டு, 2 மிளகு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் சீரகம், போட வேண்டும், இதனுடன் சிறிதளவு உப்பு போட வேண்டும். நன்றாகக் கொதித்து முக்கால் சொம்பு தண்ணீராக ஆன பிறகு, அதை வடிகட்டி சூடாகக் குடிக்க வேண்டும். குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர் கலந்து குடிக்கலாம். இந்த பானம் எலும்பு சார்ந்த வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் என்று டாக்டர் தீபா பரிந்துரை செய்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.