சிறுநீரக தொற்றுக்கு மாத்திரை, மருந்து வேணாம்... இந்த சூப் இருந்தால் போதும்: மருத்துவர் சிவராமன்!
"இன்றைக்கு நகர்ப்புறங்களில் பெருகி வரக்கூடிய சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக நீர் எரிச்சல் என அத்தனைக்கும் வாழைத்தண்டு மிகச் சிறந்த மருத்துவ உணவு வாழைத்தண்டு எனலாம்." என்கிறார் மருத்துவர் சிவராமன்.
"இன்றைக்கு நகர்ப்புறங்களில் பெருகி வரக்கூடிய சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக நீர் எரிச்சல் என அத்தனைக்கும் வாழைத்தண்டு மிகச் சிறந்த மருத்துவ உணவு வாழைத்தண்டு எனலாம்." என்கிறார் மருத்துவர் சிவராமன்.
"இன்றைக்கு நகர்ப்புறங்களில் பெருகி வரக்கூடிய சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக நீர் எரிச்சல் என அத்தனைக்கும் வாழைத்தண்டு மிகச் சிறந்த மருத்துவ உணவு வாழைத்தண்டு எனலாம்." என்கிறார் மருத்துவர் சிவராமன்.
பொதுவாக வாழைமரத்தில் இலை, காய், பூ, தண்டு என அனைத்தும் எதாவது ஒரு வகையில் நமக்கு பயனளித்து வருகிறது. அதன் காய், பூ, தண்டு என மூன்றையும் தனித்தனியாக கூட்டு, பொரியல், அவியல் என சமைத்து வாழை இலையில் போட்டு சாப்பிடலாம். இப்படி சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான மருத்துவ பயன்கள் கிடைக்கிறது.
Advertisment
அந்த வகையில், வாழைத்தண்டு மற்றும் அதில் தயார் செய்யப்படும் சூப்பை நாம் அன்றாட சாப்பிட்டு வருவதன் பயன்களை சித்த மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக யூடியூப் வீடியோ ஒன்றில் அவர் பேசுகையில், "வாழைத்தண்டு நாம் அன்றாட சாப்பிட வேண்டிய மிக முக்கிய உணவுப் பொருள். இன்றைக்கு நகர்ப்புறங்களில் பெருகி வரக்கூடிய சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக நீர் எரிச்சல் என அத்தனைக்கும் வாழைத்தண்டு மிகச் சிறந்த மருத்துவ உணவு எனலாம்.
இந்த மருத்துவ உணவு என்பது, வெறும் பசிக்காகவும், ருசிக்காகவும் மட்டுமல்லாது உடல்நலத்திற்கும் பயனளிக்கக் கூடியவை. அவ்வகையில், வாழைத்தண்டு உடல் நலத்தை பேணக்கூடிய ஒன்று. வாழைத்தண்டை நாம் சாறு, பொரியல் என பல வழிகளில் சாப்பிட்டு வரலாம். அவற்றை எப்படி சாப்பிட்டாலும் அவை நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
வாழைத்தண்டு சூப் - தேவையான பொருட்கள்:
வாழைத் தண்டு - 1 பாசிப்பருப்பு - 200 கிராம் பச்சை மிளகாய் - 5 காய்ந்த மிளகாய் - 2 தக்காளி - 1 சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - பெரிய துண்டு பூண்டு - 5 பல் சீரகம் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கடுகு - சிறிது உளுந்தம்பருப்பு - சிறிது நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் தேங்காய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
வாழைத்தண்டை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். சமைக்கும் வரை மோர் கலந்த நீரில் போட்டால் கறுத்துப் போகாமல் இருக்கும். இப்போது ஒரு அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்புடன், மஞ்சள் தூள், சீரகம், எண்ணெய் சேர்த்து வேகவிடவும். பருப்பு கொஞ்சும் வெந்ததும் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
இப்போது வாழைத்தண்டு நன்கு வெந்ததும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். அடுத்ததாக மற்றொரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து தாளித்து வாழைத் தண்டு கலவையில் சேர்க்கவும். அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். இவற்றுடன் இஞ்சி, பூண்டு அதிகமாக சேர்த்தால் நல்ல மணமாகவும், ஆரோக்கியத்திற்கு நன்றாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க மக்களே!!!