கேன்சரை தடுக்கும் ஜிங்க் சத்து... இந்தக் கீரையில் அதிகம் இருக்கு; இப்படி வடை தட்டி சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன் யோசனை
"ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், புற்றுநோய் வருவதையும் தடுக்கும். அதனால், தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும்." என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
"ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், புற்றுநோய் வருவதையும் தடுக்கும். அதனால், தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும்." என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
ஜிங்க் சத்து நிறைந்து காணப்படும் கீரைகளில் ஒன்றான அரைக்கீரையில் எப்படி மொறுமொறு வடை தட்டலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
சித்த மருத்துவர் சிவராமன் உடல் ஆரோக்கியம் குறித்த பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறார். அவர் உடல் நலத்தை எப்படி பேண வேண்டும், என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? நவீன வாழ்க்கை முறையில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள், இயற்கை மருத்துவம் மூலம் நோய்களை எப்படி தடுக்கலாம்? என்பது போன்ற பல்வேறு ஆலோசனை வழங்கி வருகிறார்.
Advertisment
அப்படி அவர் வழங்கும் ஆலோசனை தொடர்பான வீடியோக்கள் யூடியூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், மருத்துவர் சிவராமன் கீரைகள் குறித்து ஒரு வீடியோவில் பேசும் போது, "கீரைகளில் தான் அதிகப்படியான ஜிங்க் சத்து நிறைந்து இருக்கிறது. இந்த சத்து இயற்கையாகவே நிறைந்து இருப்பது இரண்டு பொருட்களில் தான். அது வேர்க்கடலை மற்றும் கீரை.
ஜிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே சமயம், புற்றுநோய் வருவதையும் தடுக்கும். அதனால், தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை (பாலக்கீரை), அரைக்கீரை, முருங்கைக் கீரை என இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் சாப்பிட வேண்டும். அதனை, நல்ல அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஸ்பூனில் வைத்து சாப்பிடுவதை தவிர்த்து, சோறு அள்ளும் அகப்பை வைத்துக் கொள்ளவும்." என்று அவர் கூறுகிறார்.
இந்நிலையில், ஜிங்க் சத்து நிறைந்து காணப்படும் கீரைகளில் ஒன்றான அரைக்கீரையில் எப்படி மொறுமொறு வடை தட்டலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
அரைக்கீரை எண்ணெய் கடலை பருப்பு வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் சோம்பு பூண்டு கடலை மாவு உப்பு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் கடலை பருப்பு எடுத்து அதனை 2 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நொறுநொறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு, நன்கு அலசிய அரைக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனை அரைத்த கடலை பருப்புடன் சேர்க்கவும். அவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு (பெருஞ்சீரகம்), பொடியாக நறுக்கிய பூண்டு, கடலை மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும்.
இதனை உங்கள் கையால் நன்கு கலந்து கொள்ளவும். பிறகு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, உள்ளங்கையில் வைத்து வடையாக தட்டிக் கொள்ளவும். இதனை, கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தால் மொறு மொறு கீரை வடை ரெடி.