பனிக் காலம் என்றாலே பலருக்கும் இருமல், ஜலதோஷம் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக இரவில் தூங்குகிற நேரத்தில் இருமல் பாடாய்படுத்துகிறது என்ற பிரசனை பலருக்க்ம் உள்ளது. இப்படி இரவு தூங்குகிற நேரத்தில் இருமல் தொல்லை இருந்தால், அவர்களுக்கு மிளகை வறுத்து இப்படி பயன்படுத்தினால் இருமல் தொல்லைக்கும் சளிக்கும் தீர்வு கிடைக்கும் என்று டாக்டர் ஜெயரூபா பரிந்துரைத்துள்ளார்.
இரவு தூங்கப்போகும் நேரத்தில், படுத்தவுடனே தொடர் இருமல் தொந்தரவு இருப்பவர்களுக்கு இருமல் தொல்லையைப் போக்க தீர்வு என்ன என்பதை நியூஸ் 7 யூடியூப் சேனலில் டாக்டர் ஜெயரூபா கூறியுள்ளார்.
தொடர் இருமலுக்கான தீர்வு குறித்து டாகர் ஜெயரூபாய் கூறியதை அப்படியே இங்கே தருகிறோம்: “இரவில் தூங்கப் போகும்போதுதான் அதிகமாக இருமல் இருக்கிறது, படுத்தால் வருகிற இருமலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை, இருமி, இருமி சிறுநீர் போகிற அளவுக்கு பிரச்னை வந்துவிடுகிறது என்று சொல்வார்கள். அதிலும் இந்த இருமல் இரவில் மட்டும்தான் அதிகமாக இருக்கிறது என்று கூறுவார்கள். ஏனென்றால், தொண்டையில், ஒருவிதமான இரிடேசன் உடன் இந்த இருமல் இருக்கும். இந்த இருமல் தண்ணீர் கொடுத்தால்கூட சரியாகாது. இப்படி இருமல் தொந்தரவு இருந்தால், ஒரு ஸ்பூன் அளவு மிளகு எடுத்துக்கொண்டு, அதை வெறும் வானலில் வறுத்துவிட்டு, அதை எடுத்து அதனுடன் 2 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி, அதை அரை டம்ப்ளராக காய்ச்சி, ஒவ்வொரு சிப்பாக குடித்தால், தொடர் இருமல் சரியாகிவிடும்.” என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
அதே போல, மிளகு எடுத்து வறுத்து அதை காய்ச்சுகிற அளவுக்கு நேரமும் பொறுமையும் இல்லை என்று கூறுபவர்களுக்கு, 2 மிளகு எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் 4 அரிசி எடுத்து வாயில் போட்டு மென்னு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த சாறு உள்ளே போகிற அளவுக்கு நீங்கள் ஒரு 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வாயிலேயே வைத்திருந்தீர்கள் என்றால், அந்த சாறு உள்ளே போகும்போது தொண்டையில் இருக்கக்கூடிய இரிடேஷன் குறைந்து, சளியோட அளவும் குறைய ஆரம்பிக்கும் என்று டாக்டர் ஜெயரூபாய் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.