/indian-express-tamil/media/media_files/2025/03/12/Oqlr9ZxZuYLftKS2gJri.jpg)
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வர மாவுச்சத்து இல்லாத உணவு முறையைப் டாக்டர் பி.ஆர்.ஜே. கண்ணன் பரிந்துரைக்கிறார்.
நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியா? உங்களுக்கு சர்க்கரை கட்டுக்குள் வராமல் இருக்கிறதா? அதாவது உங்கள் டாக்டர் சொல்கிற எல்லாவற்றையும் செய்கிறீர்கள், ஊசி போடுகிறீர்கள், மாத்திரை சாப்பிடுகிறீர்கள், நடைபயிற்சி செய்கிறீர்கள், ஆனால், சர்க்கரை கட்டுக்குள் வரமாட்டேங்கிறது என்றால், உங்களுக்குதான் டாக்டர் பி.ஆர்.ஜே. கண்ணன் ஆலோசனை கூறுகிறார்.
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வர மாவுச்சத்து இல்லாத உணவு முறையைப் பரிந்துரைக்கும் டாக்டர் பி.ஆர்.ஜே. கண்ணன் தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: “நீரிழ்வு நோய், சர்க்கரை நோய் என்றால் என்ன? உடலில் என்ன பிரச்னை. எந்த ஒரு உணவையும் எடுத்துக்கொண்டாலும், மாவுப் பொருள், கொழுப்பு, புரதம் இருக்கிறது. மாவுப்பொருள் என்ன ஆகிறது என்றால், உடலில் போய் சீரணம் ஆகி, சுகராக மாறும். அந்த சுகர் ரத்தத்தில் ஏறும். அப்படி வருகிற சுகரை உடல் பயன்படுத்த வேண்டும். அதற்கு தேவைப்படுகிற ஹார்மோன்தான் இன்சுலின். அந்த இன்சுலின் இருந்தும் செயலிழந்து போனாலோ அல்லது இன்சுலின் கம்மியாக சுரந்தாலோ மாவுப்பொருள் ஜீரணமாகி வருகிற சர்க்கரை உபயோகிக்கப்படாமல் ரத்தத்தில் அப்படியே தேங்கி நிற்கும் அதற்கு பெயர்தான் நீரிழிவு நோய்.
இந்த நீரிழிவு நோய் உடம்பில் ஏற்படுகிற ஒரு பிரச்னை. அதனால், சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் உடலில் இருக்கிறது. அது இன்சுலின் குறைபாடு. ரத்தத்தில் எப்போது சர்க்கரை ஏறும் என்றால் உணவில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால், உணவில் சர்க்கரை எதி இருக்கிறது என்றால், மாவுப் பொருட்களில் இருக்கிறது.
இதற்கு இன்னொரு உதாரணம், ஒருவருக்கு மீன் அலர்ஜி இருக்கிறது என்றால், அதாவது மீன் சாப்பிட்டால் உடலில் தடிப்பு தடிப்பாக வரும், அவரை நீங்கள் மீன் சாப்பிடாதீர்கள் என்பீர்கள். ஏனென்றால், அவருக்கு மீன் சாப்பிட்டால்தான் நோய் வரும். அவர் மீன் சாப்பிடவில்லை என்றால் அந்த நோய் அவர் உடலுக்குள் இருந்தாலும் அந்த நோய் வெளிப்படாது. நோய் வெளிப்பட வேண்டும் என்றால் அவர் மீன் சாப்பிட வேண்டும். அதே மாதிரிதான், இங்கேயும் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் உடலில் இருந்தாலும் உணவில் சர்க்கரை இருந்தால்தான், ரத்தத்தில் சர்க்கரை ஏற முடியும். இது இரண்டும் ஒன்றும் இல்லை என்றாலும் ஒரு புரிதலுக்காக சொலிறேன்.
அதில் எப்படி மீன் சாப்பிட்டால்தான் மீன் அலர்ஜி நோய் வருமோ அதே போல, இதில் உணவில் சர்க்கரை இருந்தால்தான் ரத்தத்தில் சர்க்கரை ஏறும். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ஒருவேளை தரை ஈரமாக இருக்கிறது என்றால், துணி வைத்து துடைக்கிறீர்கள். 1 மணி நேரத்தில் மறுபடியும் ஈரமாக இருக்கிறது. உடனே இன்னொரு ரப்பர் வைத்து நீட்டா துடைத்து எடுத்துவிட்டீர்கள். கொஞ்சம் நேரம் கழித்து மறுபடியும் ஈரமாகிவிட்டது. மறுபடியும் மாப் போட்டு துடைத்துவிடுகிறீர்கள். இப்படி தொடர்ந்து துடைத்துக்கொண்டேதான் இருப்பீர்களா? ஏன் ஈரமாகிறது என்று பார்க்கமாட்டோமா? ஏன் ஈரம் என்றால், மேலே பைப்பில் இருந்து தண்ணீர் லீக் ஆகி ஒழுகுகிறது என்றால், நாம் என்ன பண்ண வேண்டும்? ஒழுகுகிற தண்ணீரைத்தான் நிறுத்த வேண்டும். அதை நிறுத்தாமல், தரையில் தண்ணீரை மட்டுமே துடைத்துகொண்டிருந்தால் என்ன பயன்? அதே மாதிரிதான் சர்க்கரை நோயாளிகளும் செய்கிறார்கள்.
வாய் வழியாக சர்க்கரையாக அனுப்பிவிட்டு, ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றிவிட்டுவிட்டு, ஏறிய சர்க்கரையைக் குறைப்பதற்கு இன்சுலின், மாத்திரை, அது, இது என பண்ணிக்கொண்டிருக்கிறோம். இப்போது எங்கே பிரச்னை என்று புரிகிறதா?
சர்க்கரை நோயாளிக்கு முதல் வைத்தியம் என்னவென்று பார்த்தால், உணவில் இருக்கும் சர்க்கரையைக் குறைப்பதுதான். உணவில் சர்க்கரையைக் குறையுங்கள் என்று சொன்னால் எல்லோரும் என்ன சொல்கிறீர்கள், காபி டீக்கூட சர்க்கரை போடுவதில்லை, இனிப்பே சாப்பிடுவதில்லை, தினமும் யார் இனிப்பு சாப்பிடுவார்? காப்பி டீயில் போடுகிற சர்க்கரை எல்லாம் ரொம்ப கம்மி. அதனால் எல்லாம் ரத்தத்தில் சர்க்கரை ஏறுவது இல்லை. ஆனால், எதனால் சர்க்கரை ஏறுகிறது என்றால், இட்லி, தோசை, சோறு, சப்பாத்தி, பொங்கல், ரவா தோசை, ரவா உப்புமா என்று நாம் அன்றாடம் சாப்பிடுகிற உணவுகளில் எல்லாமே சர்க்கரைதான் இருக்கிறது.
ஒரு விதி இருக்கிறது. காலை முதல் இரவு வரை நாம் சாப்பிடுகிற உணவில், 50% தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. ஆனால், நீங்கள் காலையில் இட்லி, தோசை மதியம் சோறு, இரவு சப்பாத்தி. இதை கணக்கிட்டால் 80-90% மாவுப்பொருள்தான். நாம் மட்டும் இப்படி சாப்பிடுவதில்லை, கேரளாக்காரர்களைப் பாருங்கள். அவர்களும் இதே மாதிரி, இட்லி, தோசை, அப்பம், புட்டு என்று சாப்பிடுகிறார்கள். அதுவும் முழுவதும் மாவுப்பொருட்கள்தான். கர்நாடகாவிலும் அப்படித்தான், ஆந்திராவிலும் அப்படித்தான். வட இந்தியாவிலும் பார்த்தீர்கள் என்றால் 3 வேளையும் ரொட்டி அல்லது ரொட்டி சம்பந்தமாக கோதுமையில் செய்த மற்றப் பொருட்கள், புல்கா என்று நிறைய உள்ளன.
அதனால்தான், இந்தியாவில் மிகவும் பொதுவாக சர்க்கரை நோய் பிரச்னை இருக்கிறது. இதை எப்படி குறைப்பது? அதற்கு முதலில், உணவில் சர்க்கரை அளவு எவ்வளவு குறைவாக சாப்பிட முடியுமோ, அவ்வளவு கம்மியாக சாப்பிட வேண்டும்.
எந்த உணவு சர்க்கரையைக் கொடுக்கிறது என்றால், அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, திணை, குதிரைவாலி, வரகு அரிசி எல்லாமே சர்க்கரைதான். எல்லாமே சர்க்கரை என்று சொல்லிவிட்டீர்களே, சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லையே, அது அப்படி இல்லை. நாம் இதுவரைக்கும் யோசிக்காததால் நமக்கு சாப்பிட ஒன்னும் இல்லாதது போல தோன்றுகிறது.
காலையில் 2 முட்டையும் பாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், பயறுவகைகள் ஏதாவது சாப்பிடலாம். இல்லையென்றால், கை அளவு ஏதாவது பழம் சாப்பிடலாம். இல்லையென்றால், கொஞ்சம் தயிர் சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கலாம். இந்த மாதிரி நீங்களே திட்டமிட்டுக்கொள்ளலாம். உணவில் என்ன இருக்ககூடாது என்றால், மாவுப்பொருள் இருக்கக்கூடாது. மதியத்துக்கு கீரை, காய்கறி, தயிர். சோறு கிடையாது. வேண்டுமானால், ஒரு ஓரத்தில் ஒரு ஸ்பூன் சோறு வைத்துக்கொள்ளுங்கள். முட்டை கோஸ் பொரியல், எண்ணெய் கத்திரிக்காய், தயிர் இதைத்தான் உணவாக சாப்பிட வேண்டும். இது கடினம் என்று நினைக்காதீர்கள் முடியும். முதலில் கொஞ்சநாள் கடினமாக இருக்கும். பிறகு முடியும்.
இரவு உணவாக, இன்று சுண்டல், நாளை பச்சை பட்டாணி, ஒரு நாளைக்கு பட்டர் பீன்ஸ், நவதானியங்கள் அவிச்சது, ஒர் நாளைக்கு பன்னீர், ஒரு நாளைக்கு காளான் என்று உங்கள் உணவை நீங்களே திட்டமிடுங்கள். ஒரு கப் நிறைய காளான் மெல்ல சந்தோஷமாக சாப்பிட வேண்டும் அதுதான் டின்னர். இட்லி, தோசை, சோறு சாப்பிடுவது கிடையாது.
அசைவம் சாப்பிட வேண்டுமா என்றால் அதுவும் சாப்பிடலாம். உதாரணத்துக்கு நாளை மதியம் கோழிக்கறி சாப்பிட வேண்டுமா? ஒரு 1/4 கிலோ கோழி வாங்கி சமைத்து கூட கொஞ்சம் வெங்காயம் வைத்துக்கொண்டு சாப்பிட்டுவிடுங்கள். அதிலும் சோறு கிடையாது.
நிறையபேர் அசைவம் சாப்பிடுபவர்கள், 100 கிராம் கோழிக்கறி சாப்பிடுகிறீர்கள் என்றால் அரை கிலோ அரசி சோறு சாப்பிடுவீர்கள். 100 கிராம் மட்டன் சாப்பிடுகிறீர்கள் என்றால் 1/2 கிலோ பிரியாணி சோறு சாப்பிடுவீர்கள். நீங்கள் சாப்பிடுகிற பிரியாணியும், அரியும்தான் உங்களுக்கு நோயைக்கொண்டுவருகிறது என்பதை நீங்கள் உணரவில்லை. ஆனால், பழி அங்கே இருக்கிற சிக்கன், மட்டன் மேலயும்தான்.
வாரத்துக்கு ஒருநாளோ 2 நாளோ நீங்கள் அசைவம் சாப்பிடுவது தவறு இல்லை. ஆனால், சாப்பிடுவது என்றால் அதை மட்டும் சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அதனால், இந்த மாதிரி சாப்பிட்டால், சர்க்கரை எப்படி ஏறும். கண்டிப்பாக சர்க்கரை குறையும்.
சரி, இடையில் பசித்தால் என்ன பண்ணுவது, வெள்ளறிப் பிஞ்சு, கேரட், தேங்காய் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். அதே மாதிரி, சமைப்பதற்கு நெய், எண்ணெய், வெண்ணெய் எல்லாமே பயன்படுத்தலாம். வேண்டிய அளவு பயன்படுத்தலாம். பயம் வேண்டாம். இப்படி செய்தால்தான், நமக்கு வேண்டிய புரதச் சத்து கூடுதலாக எடுக்கும். வேண்டிய கொழுப்புச்சத்தும் இருக்கும். மாவுச்சத்து, சர்க்கரை குறையும். இப்படி இருந்தால், கண்டிப்பாக சர்க்கரை அளவு கண்டிப்பாக கட்டுக்குள் வந்துதான் ஆக வேண்டும். இதை தொடங்கிவிட்டோம் என்றால், முதலில் ஒர்வாரம் கடினமாகத்தான் இருக்கும். பிறகு பழகிவிடும். உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும். மனதுதான் ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு செய்தால் உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும்.
இதை யார் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நம்முடைய குடும்பத் தலைவிகள். எந்தெந்த வீட்டில் குடும்பத் தலைவிகள் இதனுடைய அருமையை உணர்ந்து இருக்கிறார்களோ அவர்கள் சரியாக மாற்றிக்கொடுப்பார்கள். அவர்கள் கணவருக்கும் அவர்களுக்கும் கண்டிப்பாக சர்க்கரை அளவு குறையும். எந்தெந்த வீட்டில் குடும்பத் தலைவிகள் இதை உணரவில்லையோ, 2 இட்லிதான சாப்பிடுங்கள் என்று சர்க்கரையைக் கூட்டிக்கொண்டுதான் வருகிறார்கள். இந்த கருத்துகளை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது குடும்பத் தலைவிகள். இது மாதிரி செய்தவர்கள், 100-110 யூனிட் இன்சுலின் போட்டவர்கள் 5-10 யூனிட் குறைத்திருக்கிறார்கள். 20-30 யூனிட் இன்சுலின் போட்டவர்கள் மாத்திரையிலேயே சர்க்கரை கட்டுப்படுத்தும் அளவுக்கு வந்திருக்கிறார்கள். 4-5 மாத்திரை போட்டவர்கள் 1-2 மாத்திரையாக குறைத்துள்ளார்கள். 2 மாத்திரை போட்டவர்கள் மாத்திரையை நிறுத்திவிட்டு சர்க்கரையே இல்லாமல் இருக்கிறார்கள். இது ஏதோ சும்மா பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், என்னிடம் வருகிற நோயாளிகளுகு வைத்தியம் பார்த்த அனுபவத்தின் மூலமாக பேசுகிறேன். இதெல்லாம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த தேர்வு. குறுக்கு வழியே கிடையாது. அதனால், இதை கண்டிப்பாக கடைபிடியுங்கள், இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதைப் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் பொதுமக்கள் ஆகட்டும் அல்லது என்னுடைய மருத்துவர் நண்பர்களாகட்டும் கம்மெண்ட்டில் எழுதுங்கள், தக்க விடையைப் பார்ப்போம்.” என்று டாக்டர் பி.ஆர்.ஜே. கண்ணன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.