உடல் எடை குறைப்புக்கு உதவும் எளிமையாக வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே செய்யும்படியாக ஒரு பொடியை மருத்துவர் கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் வீடியோவில், வெந்தயம், சுக்கு பொடி செய்வது பற்றி பார்ப்போம். பொருட்களை வறுக்கும் போது சத்துக்கள் போய் விடும் என்று நினைக்க வேண்டாம். வறுக்கும் போது எண்ணெய் பசை நீங்கி நீண்ட நாட்கள் அதை பயன்படுத்த முடியும். கொஞ்சம் கொஞ்சமாக இதை பயன்படுத்தலாம். உடல் எடை குறைப்புக்கு நல்ல பொடியாக இது இருக்கும்.
Advertisment
இதை செய்ய அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் போட்டு மிதமான தீயில் வைத்து வறுக்கவும். வறுத்த பின் அதை எடுத்து வேறு தட்டில் வைக்கவும். அடுத்தாக 2 டேபிள் ஸ்பூன் சீரகம் போட்டு மிதமான தீயில் வைத்து வெடித்து வரும் வரை வறுக்கவும். அதையும் வேறு தட்டில் வைக்கவும். இப்போது வர கொத்தமல்லியையும் இதே போல் செய்து எடுத்து வைக்கவும்.
பட்டையும் இதே போல் செய்து வைத்து எல்லா பொருட்களையும் ஆற விடவும். அதன் பின் மிக்ஸி ஜாரில் எல்லா பொருட்களையும் போட்டு சுக்கு பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும். அதன்பின் அடுப்பில் பாத்திரம் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1 டீ ஸ்பூன் இந்த பொடி சேர்த்து தண்ணீர் பாதியாக கொதிக்க விட்டு இறக்கவும். அதன் பின் வடித்து எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து குடிக்கலாம்.
காலை நேரத்தில் உணவு சாப்பிட்ட பின் இந்த பொடியை பருகலாம். மேலும் எடை குறைக்க இந்த பானம் மட்டும் பத்தாது கூடவே அளவான உணவு, உடற்பயிற்சிகள் நல்ல தூக்கம் வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news