சுண்டைக்காய் இனி இப்படி சாப்பிடுங்க; அப்ப தான் அம்புட்டு சத்தும் கிடைக்கும்: டாக்டர் கார்த்திகேயன்

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், அனீமியா இருப்பவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு நல்ல மருந்து என்று கூறும் டாக்டர் கார்த்திகேயன், சுண்டைக்காயை இப்படி சாப்பிட்டால், எல்லா சத்தும் கிடைக்கும் என்று அறுவுறுத்துகிறார்.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், அனீமியா இருப்பவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு நல்ல மருந்து என்று கூறும் டாக்டர் கார்த்திகேயன், சுண்டைக்காயை இப்படி சாப்பிட்டால், எல்லா சத்தும் கிடைக்கும் என்று அறுவுறுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
dr karthikeyan sundakkai

டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் சுண்டைக்காயின் நன்மைகள் குறித்தும் சுண்டைக்காயை எப்படி சாப்பிட்டால் முழுமையாக அதன் சத்துகள் கிடைக்கும் என்பதையும் கூறியுள்ளார்.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், அனீமியா இருப்பவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு நல்ல மருந்து என்று கூறும் டாக்டர் கார்த்திகேயன், சுண்டைக்காயை இப்படி சாப்பிட்டால், எல்லா சத்தும் கிடைக்கும் என்று அறுவுறுத்துகிறார். சுண்டைக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

Advertisment

டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் சுண்டைக்காயின் நன்மைகள் குறித்தும் சுண்டைக்காயை எப்படி சாப்பிட்டால் முழுமையாக அதன் சத்துகள் கிடைக்கும் என்பதையும் கூறியுள்ளார். 

டாக்டர் கார்த்திகேயன் கூறுகையில், “ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள், அனீமியா அதிக ரத்தசோகை இருப்பவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு நல்ல மருந்து. ஆனால், இந்த சுண்டைக்காயை காய வைத்து சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் போய்விடுகிறது. அதனால், சுண்டைக்காயை பச்சையாக சமைத்து சாப்பிட வேண்டும்” என்று கூறுகிறார்.

சுண்டைக்காய் சட்னி செய்வது எப்படி? 

Advertisment
Advertisements

சுண்டைக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் 1 கப்

சின்ன வெங்காய 20 

தக்காளி 2 நறுக்கியது

வர மிளகாய் 4

பச்சை மிளகாய் 1

பூண்டு 10 பல்லு

கருவேப்பிலை 1 கொத்து

புளி ஒரு நெல்லிக்காய் அளவு

தாளிப்பதற்கு தேவையான எண்ணெய், கடுகு போன்றவை

சுண்டைக்காய் சட்னி செய்முறை

முதலில்சுண்டைகாயை ஒரு வானலியில் போட்டு லேசாக வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்து, இன்னொரு ஸ்டவ்வில் வானலியை வைத்து, அதில் லேசாக எண்ணெய் ஊற்றி, சின்ன வெக்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை தக்காளி எல்லாம் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்து, புளி போடுங்கள், தேவையான அளவு உப்பு போடுங்கள். பிறகு, இதனுடன் வதக்கிய சுண்டைக்காயை போடுங்கள், இதனுடன் ஒரு கப் தேங்காய் துருவல் போட்டு, கொஞ்ச நேரம் வதக்கிய பின் மிக்சியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதை வழக்கமாகத் தாளித்தால் அவ்வளவுதான் சுண்டைக்காய் சட்னி தயார்.

இத்துடன் முடிவதில்லை. சுண்டைக்காய் சாப்பிடும்போது ஆரஞ்ச் ஜூஸ், லெமன் ஜூஸ் சாப்பிடும்போது, இதில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் சுண்டைக்காயில் உள்ள பலன் அப்படியே கிடைக்கும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: