அதிக இனிப்பு, காரம் சாப்பிட்டதும் ரத்தச் சர்க்கரை அளவு உடனடியாக ஜிவ்வுன்னு ஏறுகிறதா, அப்படியென்றால், இந்த 10 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க சர்க்கரை அளவு சட்டுன்னு குறையும் என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.
சர்க்கரை வியாதி தேசிய வியாதி என்று சொல்கிற அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பலரும் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வழி என்ன என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், இனிப்பு காரம் சாப்பிட்டதும் சுகர் ஜிவ்வுன்னு ஏறிவிடும். அவர்களுக்கு சுகரை சட்டுன்னு குறைக்க டாக்டர் கார்த்திகேயன் 10 டிப்ஸ் பரிந்துரைக்கிறார்.
அதிக ஸ்வீட்டால் சர்க்கரையைக் குறைக்க இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க என்று தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் பேசியதை இங்கே அப்படியே தருகிறோம்.
தவிர்க்க முடியாத சூழலிலும் இனிப்பு மீது உள்ள ஆசையிலும் ஸ்வீட், காரம் சாப்பிட்டதால், சுகர் ஜிவ்வுன்னு ஏறிவிட்டது என்றால் அதை இன்சுலின்தான் உடனடியாகக் குறைக்கும். அப்படியென்றால் இன்சுலின்ன் போடலாமா? இன்சுலின் எல்லாம் வேண்டாம். இயற்கையான வழிமுறையில் இந்த 10 டிப்ஸை ஃபாலோ பண்ணி ரத்தச் சர்க்கரை அளவை குறைக்க பாருங்க.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்றால், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்ற உதவும்.
ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, அது பற்களின் ஈறுகளில் ஒட்டிக் கொள்கிறது. இது பல் அரிப்பு ஏற்பட்டு, நாளடைவில் பல் விழ செய்கிறது. அதனால், ஸ்வீட் சாப்பிட்டபிறகு, பல் துலக்குங்கள். இரவில் பல் துலக்குங்கள். இதனால், குளுகோஸ் அளவு குறைக்க முடியும்.
ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம். பருப்பு வகைகள், சுண்டல் வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.
சாப்பிட்ட உடன் தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், சாப்பிட்ட உணவில் இருக்கும் குளுகோஸ் கொழுப்புகளாக மாறி வயிற்றின் அடிப்பகுதியிலும், கல்லீரலிலும் படிந்துவிடுகிறது. அதனால், ஸ்வீட் சாப்பிட்ட பிறகு, 20 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள்.
சுவீட் சாப்பிட்ட பிறகு, நார்ச்சத்து, நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய், டிராகன் பழம், தயிர், எலுமிச்சை சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
உடலுக்கு பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் சத்துகள் கிடைப்பதற்கு, பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்பு வகைகளை கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். சூரிய காந்தி விதைகள், ஆலிவ் விதைகள் எடுத்துக்கொள்ளலாம். இதை சாப்பிடுவதால், மினரல் குறைபாடு வராமல் இருக்கும்.
விழாக்கால உணவு முறையில் இருந்து நார்மல் உணவு முறைக்கு திரும்புங்கள். ஸ்வீட் இருந்தாலும் சாப்பிடாதீர்கள்.
இரவு நேரத்தில் நன்றாகத் தூங்குங்கள். நிறைய ஸ்வீட் சாப்பிட்டுவிட்டோம். அதனால், சர்க்கரை அதிகரிக்குமே என்று கவலைப்படாமல், சர்க்கரையைக் கரைக்க முடியும் என்று நன்றாகத் தூங்குங்கள். 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவது உங்களுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். பகல் நேரத்தில் தூங்குவது, சுவீட் சாப்பிட்ட பிறகு தூங்குவது என்பது சர்க்கரையை அதிகரிக்கத்தான் உதவும். அதனால், இரவில் நிம்மதியாக தூங்குங்கள்.
சுவீட் சாப்பிட்டுவிட்டோம், சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று குளுகோமீட்டரில் சர்க்கரை அளவைப் பார்க்காதீர்கள். ஒரு வாரம் கழித்து பாருங்கள்.
சுவீட் சாப்பிடாதீர்கள், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துங்கள். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் உணவுமுறையை எடுத்துக்கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.” என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.