/indian-express-tamil/media/media_files/2025/02/28/yqc3wVNUQPKGhLbCMzgF.jpg)
கொத்தமல்லி விதையின் மருத்துவ குணங்கள் குறித்தும், ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
வழக்கத்திற்கு மாறாக, சிலருக்கு இதயம் கன்னாபின்னான்னு துடிக்கிறதா, இந்த விதையை ஊறவைத்த வடிகட்டிய தண்ணீரைக் குடித்தால் அது பயனளிக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
கொத்தமல்லி விதையின் மருத்துவ குணங்கள் குறித்தும், ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: “உலகின் மிகப் பழமையான நறுமனமூட்டிகளில் இந்த கொத்தமல்லி விதை மிகப் பழமையானது என்று சொல்லலாம். சாதாரணமாக கொத்தமல்லி விதைகள் 1 டீஸ்பூன் அளவு தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை வடிக்கட்டி அந்த விதைகளை நீக்கிவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் குடிப்பதில் ஆரோக்கிய நன்மைகள் உண்டு.
அதிலுள்ள ‘லினலூல்’ என்கிற பொருள் குறிப்பாக இதயத்திற்கு நன்மை தரக்கூடியது. ஆண்ட்டி அதிரோஜெனிக் பிராப்பர்ட்டி, செல்கள் சேர்ந்து ரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுகிற முறைக்கு அதிரோஜெலிசிஸ் என்று சொல்லலாம். ஆண்ட்டி அதிரோஜெலிசிஸ் என்றால் இந்த அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கக் கூடியது இந்த கொத்தமல்லி விதையில் இருக்கக்கூடிய லினலூல்.
மூன்றாவதாக, ஆண்ட்டி ஹைபர்டென்சிவ், இது நம்முடைய ரத்த அழுத்தத்தையும் குறைக்கக்கூடியது. நான்காவதாக, இதில் உள்ள ஆண்ட்டி அரித்மிட்டிக் பிராப்பர்ட்டி, அதாவது, இதயம் பயங்கரமாக கண்ணாபின்னா என்று துடிக்கிறது என்றால் அதை குறைக்கக்கூடியது ஆண்ட்டி அரித்மிட்டிக் பிராப்பர்ட்டி கொண்டது இந்த கொத்தமல்லி விதையிலுள்ள ‘லினலூல்’” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.