/indian-express-tamil/media/media_files/2025/04/25/aPLYyk1W9n4CQXYeNO7x.jpg)
கொய்யா பழத்தைப் போலவே, கொய்யா இலையும் மருத்துவ குணம் கொண்டது என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
பலரும் கொய்யா பழம் சாப்பிட்டால் செரிமானத்துக்கு உதவும் என்பதை கேள்விப்பட்டிருப்போம். கொய்யா பழத்தைப் போலவே, கொய்யா இலையும் மருத்துவ குணம் கொண்டது என்று டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
டாக்டர் கார்த்திகேயன் கொய்யா இலைகள் பற்றி கூறுகையில், கொய்யா இலைகள் சிடி குஜாவே ஃபோலியம் (SIDDI GUAJAVE FOLIUM) என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. மாதவிடாயின்போது பெண்களுக்கு வரக்கூடிய வலிகளைக் குறைக்க, ஒரு குழுவுக்கு 6 மி.கி கொய்யா இலைச் சாறும், இன்னொரு குழுவுக்கு 3 மி.கி கொய்யா இலைச் சாறும், இன்னொரு குழுவுக்கு வழக்கமான மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள். இதில், 6 மி.கி கொய்யா இலைச் சாறு குடித்த பெண்களுக்கு வலி குறைந்தது தெரியவந்தது. அதனால், கொய்யா இலைகள் மாதவிடாய் வலிகளைக் குறைக்கிறது என்று கூறினார்.
அதே போல, கொய்யா இலைகளை வைத்து சிடியம் குவா (Psidium Guajava) என்ற பெயரில் ஜப்பானில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொய்யா இலை டீ கொடுத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு 10% குறைகிறது என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், இதை மட்டுமே ஒரு தொடர் சிகிச்சையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
அதே போல, 120 மணிதர்களில் நடத்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சியில், கொய்யா இலைகளைக் கொடுத்ததில் ரத்த அழுத்தத்தின் அளவு 8 முதல் 9 வரை குறைகிறது என்று தெரியவந்துள்ளது. மேலும், 10% கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது. நல்ல கொழுப்பை 8% அதிகரிக்கிறது. மலச்சிக்கல் பிரச்னையைக் குறைக்கும். புற்றுநோய் உண்டாக்கும் செல்களைத் தடுக்கும், முகப்பருக்களைக் குறைக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
கொய்யா இலைகளை எப்படி டீ போட்டு குடிப்பது என்று பார்ப்போம்.
கொய்யா இலைகளை 4 பெரிய இலைகளாகவும் 4 கொழுந்துகளாகவும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் ஓமம் எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் (300 மி.லி) தண்ணீர் ஊற்றுங்கள், கொதித்த பிறகு, வெந்தயத்தைப் போடுங்கள், அடுத்து ஓமம் போடுங்கள் மூடி வைத்துவிடுங்கள். 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். பின்னர், கொய்யா இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும்.
அதே போல, கொய்யா இலைகள், சீரகம், இஞ்சி போட்டு கொய்யா இலை டீ குடிக்கலாம்.
அதே போல, முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் (300 மி.லி) தண்ணீர் ஊற்றுங்கள், அதில் சீரகம் போடுங்கள், இஞ்சி தட்டி போடுங்கள், 6-7 கொய்யா இலைகளைப் போடுங்கள். நன்றாகக் கொதிக்க வையுக்கள், பிறகு வடிகட்டி குடியுங்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.