ஆண்மை பெருக்கும் ஸ்பெஷல் கீரை; இப்படி சமைத்து சாதத்துடன் சாப்பிடுங்க: டாக்டர் கார்த்திகேயன்

இந்த கீரை ஆண்மை பெருக்கும் ஸ்பெஷல் கீரை, இந்த கீரையை இப்படி சமைத்து சாப்பிட்டால் நல்லது, இதில் பல நன்மைகள் உள்ளது என்று நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். அது என்ன கிரை என்று இங்கே பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
dr karthikeyan thuththi

இந்த கீரை ஆண்மை பெருக்கும் ஸ்பெஷல் கீரை, இந்த கீரையை இப்படி சமைத்து சாப்பிட்டால் நல்லது, இதில் பல நன்மைகள் உள்ளது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். Image screengrab from YouTube @drkarthik

மக்கள் நிறைய பேர் பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாற முயற்சி செய்து வருகின்றனர். பாரம்பரிய உணவுகளில் உள்ள நன்மைகளை உணரத் தொடங்கியுள்ளனர். நம்முடைய பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இருந்துள்ளன.

Advertisment

அந்த வகையில், நம்முடைய பாரம்பரிய மூலிகை தாவரங்கள், உணவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் அதன் நன்மைகள் குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறி வருகிறார்.

இந்த கீரை ஆண்மை பெருக்கும் ஸ்பெஷல் கீரை, இந்த கீரையை இப்படி சமைத்து சாப்பிட்டால் நல்லது, இதில் பல நன்மைகள் உள்ளது என்று நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். அது என்ன கிரை என்று இங்கே பார்ப்போம்.

Advertisment
Advertisements

இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: “நம்முடைய முன்னோர்கள் இந்த மாதிரி பராமரிப்பு இல்லாமல் வளரக்கூடிய கீரைகளை, தங்களுடைய அன்றாட உணவில் கீரையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதில் ஒன்று இந்த துத்திக் கீரை. இந்தியன் மேளோ (Indian Mallow) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படக் கூடிய துத்திக் கீரையின் இலைகலைப் பார்த்தீர்கள் என்றால், அது இதய வடிவத்தில் நல்லா அழகா இருக்கும். இதனுடைய பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த துத்தி செடியின் விதை, வேர், இலை எல்லாமே மருத்துவ குணம் கொண்டது.

மொத்தம் 29 வகை துத்திச் செடிகள் இருக்கின்றன. அதில் பணியார துத்தி என்று சொல்லக்கூடிய துத்தி சாப்பிடக் கூடிய துத்தியாகும்.

இப்போது நாம் சாதத்துக்கு துத்திக் கீரை கூட்டு வைத்துக்கொண்டு அதில் கொஞ்சமாக நெய்விட்டு சாப்பிடலாம். நல்ல சுவையாக இருக்கிறது. இந்த துத்திக் கீரை குடல் புண்ணை ஆற்றும், மலச்சிக்கல் குறையும், மூலநோய் பிரச்னைக்கு நல்லது. ஆண்மை பெருக்கும் என்று பாரம்பரிய மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: