எடை சட்டுன்னு குறைக்கும் இந்த டிரிங்க்... வெந்தயம் இப்படி வறுத்து ரெடி பண்ணுங்க: டாக்டர் கார்த்திகேயன்
உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்களுக்காக எடை சட்டுன்னு குறைக்கும் டிரிங்க் ஒன்றை டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார். அதற்கு வெந்தயத்தை இப்படி வறுத்து ரெடி பண்ண வேண்டும்
உடல் எடையை சட்டுன்னு குறைக்கும் டிரிங்க்கை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். Image screengrab from YouTube video from Doctor Karthikeyan
வாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றால் பலரும் உடல் எடை கூடிப்போனதால் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்காக எடை சட்டுன்னு குறைக்கும் டிரிங்க் ஒன்றை டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார். அதற்கு வெந்தயத்தை இப்படி வறுத்து ரெடி பண்ண வேண்டும்.
Advertisment
உடல் எடையை சட்டுன்னு குறைக்கும் டிரிங்க்கை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார். உடல் எடையைக் குறைக்க டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளதை அப்படியே இங்கே தருகிறோம்.
உடல் எடையைக் குறைக்க என்னவிதமான விஷயங்களை செய்யலாம் என்று நிறைய சொலியிருக்கிறேன். ஆனால், இப்போது ஒரு ரெசிபி பார்த்தேன். ரொம்ப உபயோகமாக் இருப்பது போல இருந்தது. அதனால், இந்த ரெசிபியை தமிழ் குக்கிங் சேனல் நடத்தும் சந்தியா செய்துகொடுத்தார்கள்.
வெந்தயத்தை வறுக்கும்போது பொருட்களில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா என்று நினைக்க வேண்டாம். வறுப்பது என்பது அதில் இருக்ககூடிய எண்ணெய் பசையை நீக்குகிறது. அந்த பொடி நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். இந்த பொடியை கொஞ்சம், கொஞ்சமாக செய்து பயன்படுத்துங்கள். இது உடல் எடை குறைப்புக்கு ஒரு உபயோகமான பொடியாக கட்டாயம் இருக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
உடல் எடையை குறைக்கும் டிரிங்க் செய்முறை
முதலில் ஸ்டவ்வைப் பற்றவைத்து, அதில் ஒரு கடாயை வையுங்கள். அதில் 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் போடுங்கள். மிதமான தீயில் வைத்துவிட்டு, வெந்தயத்தை வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளுங்கள். வாசனை வரும்போது ஸ்டவ்வை ஆஃப் செய்துவிடுங்கள். வறுத்த வெந்தயத்தை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
அதே போல, அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் போட்டு, மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதையும் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
அதே போல, அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தனியா போட்டு, மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதையும் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
அதே போல, அதே கடாயில் 1 டேபிள் ஸ்பூன் பட்டை அதாவது குட்டி குட்டியாக 10 பட்டை போட்டு, மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதையும் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றையும் நன்றாக ஆற வையுங்கள். ஆறிய பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் போடுங்கள். இதனுடன் உங்களுக்கு சுக்கு கிடைத்தால், அதை கொஞ்சமாக வறுத்து பொடி செய்து, ஒரு டீஸ்பூன் போடுங்கள். இதனுடன், 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் போடுங்கள். இதை எல்லாவற்றையும் மிக்சியில் நன்றாக பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஸ்டவ்வைப் பற்ற வைத்து, அதில் ஒரு பான் வையுங்கள். அதில் 2 டம்பளர் தண்ணீர் ஊற்றுங்கள். அதாவது, சரியாக 200 மி.லி தண்ணீர் ஊற்றுங்கள். அதில், தயார் செய்து வைத்துள்ள பொடியை 1 டீஸ்பூன் போடுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். பாதி அளவு தண்ணீராக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். நன்ராகக் கொதித்த பிறகு, வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு, அதில் ஒரு அரை எலுமிச்சை பழம் சாறு பிழிந்துவிடுங்கள். உங்களுக்கு வேண்டும் என்றால் இதனுடன் அரை சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கலாம். வேண்டாம் என்றால், இதை அப்படியே குடிக்கலாம். அவ்வளவுதான், சட்டுன்னு எடை குறைக்கும் டிரிங்க் தயார்.
மீதம் உள்ள பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்துகொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.