கொழுப்பை வைத்தே கொழுப்பைக் குறைக்கலாம்; சீக்ரெட் பகிரும் டாக்டர் கார்த்திகேயன்

கொழுப்பை வைத்தே கொழுப்பைக் குறைக்கலாம் என்று ஒரு சீக்ரெட்டை டாக்டர் கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அது எப்படி கொழுப்பை வைத்து கொழுப்பைக் குறைப்பது என்பதை இங்கே பார்ப்போம் வாருங்கள்.

கொழுப்பை வைத்தே கொழுப்பைக் குறைக்கலாம் என்று ஒரு சீக்ரெட்டை டாக்டர் கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அது எப்படி கொழுப்பை வைத்து கொழுப்பைக் குறைப்பது என்பதை இங்கே பார்ப்போம் வாருங்கள்.

author-image
WebDesk
New Update
dr karthikeyan

டாக்டர் கார்த்திகேயன் ஆரோக்கிய குறிப்புகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் உணவுகளில் உள்ள மருத்துவ குணங்களையும் தனது யூடியூப் சேனலில் (Doctor Karthikeyan) கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கொழுப்பை வைத்தே கொழுப்பைக் குறைக்கலாம் என்று ஒரு சீக்ரெட்டை டாக்டர் கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். அது எப்படி கொழுப்பை வைத்து கொழுப்பைக் குறைப்பது என்பதை இங்கே பார்ப்போம் வாருங்கள்.

Advertisment

டாக்டர் கார்த்திகேயன் ஆரோக்கிய குறிப்புகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் உணவுகளில் உள்ள மருத்துவ குணங்களையும் தனது யூடியூப் சேனலில் (Doctor Karthikeyan) கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

உடலில் இரண்டு விதமான கொழுப்பு இருக்கிறது, இதில் வெள்ளைக் கொழுப்பு அல்லது மஞ்சள் நிற கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கின்றன. இதில் பிரவுன் நிற கொழுப்பு உடல் எடையைக் குறைக்க உதவுவதாக டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். 

மேலும், இந்த பிரவுன் நிற கொழ்ப்பு உடலில் முதுகு பகுதி, கழுத்து தோள்பட்டை பகுதியில் மிகவும் குறைவாக உள்ளது என்றும் இந்த பிரவின் நிற கொழுப்பு செயல்படாமல் அமைதியாக இருப்பதால், பிரவுன் நிற கொழுப்பை தூண்டிவிட்டால், உடல் எடையைக் குறைக்க உதவும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். 

Advertisment
Advertisements

இந்த பிரவுன் நிற கொழுப்பை தூண்டிவிடுவதற்கு கூல் தெரபி அளிக்கப்படுகிறது. அது என்ன கூல் தெரபி என்றால் வெப்பநிலையை மைனஸ் டிகிரியில் வைக்கும்போது, பிரவுன் நிற கொழுப்பு செயல்படும். ஆனால், நாம் மைனஸ் டிகிரி வெப்பநிலையை உருவாக்க முடியாது. ஆனால், ஏ.சி-யில் குளிரை அதிகப்படுத்தி முயற்சி செய்யலாம் என்று டாக்டர் கார்த்திகேயன், அதே நேரத்தில், பிரவுன் கொழுப்பைத் தூண்டிவிட்டு உடல் எடையைக் குறைக்கும் இந்த ஆய்வு இன்னும் பெரிய அளவில் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் கூறுகிறார்.

அதே நேரத்தில், பிரவுன் கொழுப்பை தூண்டிவிட அல்லது வெள்ளை நிற கொழுப்புகளைக் குறைக்க அவகோடா பழம், தயிர், நட்ஸ், சியா விதைகள், ஆலிவ் விதைகள் போன்றவற்றை பரிந்துரைக்கிறார். இந்த பிரவுன் நிற கொழுப்பை தூண்டிவிட்டு உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.  

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: