டாக்டர் மோகன் பூசணிக்காய் விதையில் உள்ள பலன்களையும் அது எந்த அளவுக்கு எலும்புக்கு உறுதி அளிகிறது என்பதையும் கூறும் டாக்டர் மோகன், பாரம்பரிய முறைப்படி மதிய உணவில் பூசணி விதை பொடியில் செய்த சாதத்தை முதல் கவளமாக சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.
பூசணிக்காயில் உள்ள மருத்து குணங்கள், அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று தனது யூடியூப் சேனலில் டாக்டர் மோகன் கூறுகையில், “பரங்கிக்காய், சர்க்கரை பூசணி, சர்க்கரை பரங்கி, பூசனை அப்படின்னு பல பெயர்கள் கொண்ட பூசணிக்காய் விதையோட மருத்துவ குணத்தை பற்றியும் அது என்னென்ன நோய்களை குணமாக்கும், அது என்னென்ன நோய்களில் இருண்டு எல்லாம் நம்மை காப்பாத்தும் என்பதைப் பற்றி ரொம்ப தெளிவா சுருக்கமா சொல்கிறேன், கவனமா கேளுங்கள்.” என்கிறார்.
பூசணிக்காய் விதையோட மருத்துவ குணத்தை விளக்குகிற சித்தர் பாடலை,
“பித்தம்போ மேகம்போம் பேராலானனும் போம்
மெத்த வுடலங்குளீரு மேனியிடு-மிததலத்து
ளாசினியொன் றில்லா வலர்தவசனத் தனமே
பூச்னி வித்தைத் தின்னும் போது.
(இ-ள்.) அலர்ந்த புட்பத்திற் சஞ்சரிக்கா நின்ற அன்னம்போல்
பவளே பூசினிவித்தினால் பயித்தியமும் பிரமேகமும் சரீர அழையும்நீக்கும் தேகத்திற் குளிர்ச்சியும் புஷ்டியும் உண்டாம்” டாக்டர் பகிர்ந்துள்ளார்.
மேலும், 30 கிராம் பூசனி விதையில், எனர்ஜி 163 கலோரிகளும், கார்போஹைட்ரேட் 4.2 கிராம், புரோட்டின் 8.5 கிராம், கொழுப்பு 13.9 கிராம், கால்சியம் 15 மி.கி, இரும்புச்சத்து 2.3 மி.கி, மெக்னீசியம் 156 மி.கி, ஜின்க் 2.2 மி.கி, காப்பர் 0.4 மி.கி, செலினியம் 2.7 மி.கி, பாஸ்பரஸ் 332 மி.கி, மாங்கனீஸ் 1.3 மி.கி உள்ளதாக டாக்டர் மோகன் கூறியுள்ளார்.
மேலும், “பூசணிக்காய் விதையில் இருக்கிற சத்துக்களோட பட்டியல் மற்றும் நம்ம சித்தர்கள் கூற்றுப்படி பூசணி விதை குடல்ல இருக்குற தட்டைப் புழுக்களை அழிக்கும், பித்தத்தை குறைக்கும், வெள்ளைப்படுதலை குணமாக்கும், அதிக உடல் சூட்டை சமநிலைப்படுத்தும், அதாவது உடம்பை குளிர்ச்சியாகவும் சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும், அடுத்ததாக நவீன விஞ்ஞான ஆய்வுகள்படி பூசணி விதைகளில் இருக்கிற அபரிமிதமான மெக்னீசியமும் பாஸ்பரஸும் எலும்புகளை வலிமையாக்கும். மெனோபாஸுக்கு முன்னாடியும் மெனோபாஸ் காலங்களிலும் பெண்களுடைய எலும்பு அடர்த்தியையும் வலிமையையும் பாதுகாக்கும். மூட்டுகளையும் பாதுகாக்கும் ரொம்பவும் முக்கியமான செய்தி ஒரு கப் பூசணி விதையில 9.52 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இது பெண்களோட உடலில் இரும்பு சத்து சமநிலைப்படுத்துவதற்கு உதவும். அதனால மாதவிலக்கு நாட்களில் பூசணி விதையை தாராளமாக பயன்படுத்துங்கள்.
ரத்தசோகை அப்படிங்கற அனிமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், இதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக இதுல இருக்குற நார்ச்சத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அது மட்டுமில்லாமல் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும். தற்போதைய சூழ்நிலையில எல்லாருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகம் தேவை, பூசணி விதையில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்குது, குறிப்பாக செலினியம், பீட்டா கரோட்டின், ஜின்க், வைட்டமின் ஈ, இதெல்லாம் ரத்த நாளங்களில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகப்படுத்தும் இருதயத்தையும் பாதுகாக்கும்.
ரொம்ப முக்கியமான விஷயம் பூசணி விதையில் இருக்கிற ட்ரிப்டோப்பன் அமினோ அமிலம் அதாவது மன அமைதி இழந்து தூக்கம் இல்லாமல் தவிக்கிறவங்களையும் இந்த ட்ரிப்டோப்பன் அப்படிங்கிற அமினோ அமிலம் நல்ல ஆழ்ந்த தூங்க வைக்கும். குறிப்பா ஆண்களுக்கு விந்து அணுக்களை அதிகமாகி மலட்டு தன்மையை குணமாக்கும். ஆண்மையை அதிகரிக்கும். ஆண்களை ரொம்பவும் சிரமப்படுத்த கூடிய, ஒரு பெரிய பிரச்னை ஏற்படக்கூடிய வீக்கம் பூசணி விதை. இந்த வீக்கத்தை குறைத்து சிறுநீரை தங்குதடை இல்லாமல் வெளியேற்றும். அதனால, எல்லாரும் பூசணி விதையை நம்ம ஊர் பாரம்பரிய முறைப்படி பூசணி விதை பொடியில் சாதம் செய்து மதிய உணவுல முதல் கவளமாக போட்டு சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்கள்” என்று டாக்டர் மோகன் கூறுகிறார்.