/indian-express-tamil/media/media_files/2025/05/01/HYRmqfBEgcboqA6NtJdd.jpg)
மீன் - தயிர் சேர்த்து சாப்பிட்டால் தோல் நோய் வருமா, அலர்ஜி வருமா என்பது குறித்து விஜே சித்து எழுப்பிய கேள்விக்கு தனது யூடியூப் சேனலில் டாக்டர் மோனிஷா அரவிந்த் விளக்கியுள்ளார்.
மீன் - தயிர் சேர்த்து சாப்பிட்டால் தோல் நோய் வருமா, அலர்ஜி வருமா என்பது குறித்து விஜே சித்து எழுப்பிய கேள்விக்கு டாக்டர் மோனிஷா அரவிந்த் விளக்கியுள்ளார்.
சமூக ஊடகங்களின் காலத்தில் உண்மையான செய்திகளைப் போலவே வதந்திகளும் பொய் செய்திகளும் வேகமாகப் பரவுகின்றன. அப்படி உணவுகளைப் பற்றிய தகவல்களும் பரவுகின்றன. அவற்றில் சில உண்மைகளாகவும் இருக்கலாம், பொய்களாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றைப் பற்றி மருத்துவர்களின் கருத்து வேறாக இருக்கும்.
அந்த வகையில், மீன் - தயிர் சேர்த்து சாப்பிட்டால் தோல் நோய் வரும், அலர்ஜி வரும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவலாகக் காணப்படுகிறது. அதனால், பலரும் மீன் சாப்பிட்டுவிட்டு தயிர் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். உண்மையில், மீன் - தயிர் ஒன்றாக சாப்பிட்டால் ஏதாவது தோல் நோய் வருமா என்பதை மருத்துவர்கள் யாராவது விளக்கமாகக் கூறினால் நன்றாக இருக்கும் என்பதுதான் பலரின் கருத்துகளாக இருந்தன.
அந்த வகையில், மீன் - தயிர் சேர்த்து சாப்பிட்டால் தோல் நோய் வருமா, அலர்ஜி வருமா என்பது குறித்து விஜே சித்து எழுப்பிய கேள்விக்கு தனது யூடியூப் சேனலில் டாக்டர் மோனிஷா அரவிந்த் விளக்கியுள்ளார்.
டாக்டர் மோனிஷா அரவிந்த் கூறுகையில், “மீனுக்கும் தயிருக்கும் ஒரு கணக்ஷன் கொடுக்கிறார்கள். ஆனால், ஆனால், இது அடிப்படையில் ஒரு அலர்ஜி. மீன் மட்டும் தனியாக சாப்பிட்டால்கூட சில பேருக்கு உடலில் தடிப்பு தடிப்பாக வந்துவிடும். உடலில் வீங்கிப் போய், அரிப்பு இருக்கும், சிறிது நேரத்தில் சரியாகிவிடும். இது மீனுக்கான அலர்ஜி.
இதே போல, தயிர் சாப்பிட்டாலும் இந்த அலர்ஜி வரும். இந்த இரண்டுக்குமே அலர்ஜி இருக்கிறது. அதனால், மீன் - தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் எல்லாருக்கும் அலர்ஜி வருமா என்றால் கிடையாது. நீங்கள் ரொம்ப வருடமாக மீன் - தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இதுவரை எதுவும் அலர்ஜி இல்லை என்றால், உங்களுக்கு எந்த பிரச்னையையும் கொடுக்கவில்லை. ஆனால், சில பேருக்கு மீன் சாப்பிடுவதாலும் அலர்ஜி இருக்கலாம், தயிர் சாப்பிடுவதாலும் அலர்ஜி இருக்கலாம்.
நீங்கள் மீன் - தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு அலர்ஜி ஏற்பட்டால், இரண்டையும் தனித் தனியாக சாப்பிட்டு எதனால் அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடியுங்கள். இதுதான் இதன் பின்னால் ஒலிந்திருக்கும் அறிவியல். மற்றபடி, மீன் - தயிர் இரண்டையும் சேர்த்து சாப்பிடவே கூடாது, அப்படி சாப்பிட்டால் ஏதாவது ஆகிடுவிடும் என்று நினைக்காதீர்கள். அப்படி எதுவும் ஆகாது” என்று டாக்டர் மோனிஷா அரவிந்த் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.