கண்பார்வை, இதயம், மூளை சீராக இருக்க உதவும்.. சிறுநீர் தொற்றும் குணமாக்கும் இந்த இலை - டாக்டர் மைதிலி

இந்த இலைகளை சாப்பிட்டால், கண்பார்வை, மூளை, எலும்புகள், இதயம் அனைத்திற்கு நன்மை அளிக்கும். அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் பிரச்னை, சிறுநீர் தொற்று பிரச்னை உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிட்டால சரியாகும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
dr mythili koththamalli

மாதவிடாய் பிரச்னை, சிறுநீர் தொற்று பிரச்னை உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிட்டால சரியாகும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.

இந்த இலைகளை சாப்பிட்டால், கண்பார்வை, மூளை, எலும்புகள், இதயம் அனைத்திற்கு நன்மை அளிக்கும். அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் பிரச்னை, சிறுநீர் தொற்று பிரச்னை உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிட்டால சரியாகும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.

Advertisment

ஆயுர்வேத மருத்துவர், உணவியல் நிபுணர் டாக்டர் மைதிலி தனது யூடியூப் சேனலில், கொத்தமல்லி இலைகளை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நோய்களைத் தடுக்கலாம் என்பதை கூறியுள்ளார். 

கொத்தமல்லி இலைகளின் மருத்துவ குணம் குறித்து டாக்டர் மைதிலி கூறியிருப்பதாவது: “கொத்தமல்லி இலைகளைத் தொடர்ந்து நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டே வரும்போது, என்னென்ன நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும், இந்த கொத்தமல்லி இலைகளில் என்ன ஊட்டச்சத்துகள் இருக்கிறது என்பதை தெளிவாக சொல்கிறேன். 

கொத்தமல்லி இலைகளில் முதலில் வைட்டமின் ஏ, கெரோட்டின் சத்து, வைட்டமின் இ ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இது மூன்றுமே ஒன்று சேர்ந்து கண்பார்வை தொடர்பாக எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும். கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கொத்தமல்லி இலைகளில் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. மாலைக்கண் நோய், கண்புரை மற்றும் கண்பார்வை சம்பந்தப்பட்ட எந்தவொரு பாதிப்புமே பிற்காலத்தில் வரக்கூடாது என்று நினைக்கிறவர்கள், கொத்தமல்லி இலைகளை நம்முடைய அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். 

Advertisment
Advertisements

வைட்டமின் சி ஊட்டச்சத்து இதில் அதிகமாக இருக்கிறது. வைட்டமின் ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். வைட்டமின் சி குறைபாடு வந்துவிட்டால், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். ஈறுகளில் வீக்கம் ஏற்படலாம். இவையெல்லாம் ஈறுகளில் வைட்டமின் சி குறைபாட்டால் வரும்போது ஏற்படக்கூடிய அறிகுறிகள். நம்முடைய உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுத்து, நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த வைட்டமின் சி அதிகம் உள்ளவைகளில் கொத்தமல்லி இலையும் ஒன்று. இதில் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல், செரிமானத்தை சீராக வைக்கும். அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடை அதிகமாகாமல் பராமரிப்பதற்கு கொத்தமல்லி இலைகள் ரொம்ப உதவியாக இருக்கும். 

உணவு சமைக்கும்போது, எங்கெல்லாம் கொத்தமல்லி இலைகளை சேர்கலாமோ அங்கெல்லாம்,  கொத்தமல்லி இலைகளை சேர்த்து வந்தால், நீரிழிவ் நோய்கூட வராமல் தடுக்க முடியும். கொத்தமல்லி ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதோடு மட்டுமில்லாமல் இன்சுலின் உற்பத்தியை சீராக வைக்கக்கூடிய தன்மை அதிகமாகவே இருக்கிறது.

கொத்தமல்லி இலைகளில் அஸ்கோர்பிக் அமிலம், லினோலிக் அமிலம் என்ற முக்கியமான 2 வேதிப்பொருள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை ரொம்பவே குறைத்துவிடும். ரத்தத்தில் உள்ள கெட்டக்கொழுப்பு எச்.டி.எல், நல்லக் கொழுப்பு எல்.டி.எல் ஆகிய இரண்டையுமே சீராக வைக்கும். 

இதயத்தை மட்டுமில்லாமல், மூளையும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக செயல்பட கொத்தமல்லி இலைகள் உதவும். மூளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். பிற்காலத்தில் அல்ஜைமர், வயதான பிறகு வரும் ஞாபக மறதி ஏற்படும் வாய்ப்பைக் குறைத்து முளையை  ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் தன்மை கொத்தமல்லி இலைகளில் அதிகமாக இருக்கிறது. 

கொத்தமல்லி இலைகளில் 4 முக்கியமான ஊட்டச்சத்துகள் இருக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் என்கிற 4 ஊட்டச்சத்துகள் இருக்கிறது. கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. அதே மாதிரி, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய இந்த ஊட்டச்சத்துகளும் எலும்புகளை நன்றாக வலுவடையச் செய்யும். இதனால், பிற்காலத்தில், ஆர்த்ரிட்டீஸ், ஆர்த்ரோஃபோரோட்டிஸ் என்கிற எலும்புகளால் ஏற்படுகிற நோய்கள் வராமல் குறைத்துவிடும். 

அதே போல, பால்மேட்டிக் அமிலம் என்கிற முக்கியமான வேதிப்பொருள் கொத்தமல்லி இலைகளில் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. இந்த பால்மேட்டிக் அமிலத்தை பெண்கள் முக்கியமாக எடுக்க வேண்டிய ஒரு ஊட்டச்சத்து. ஏனென்றால், மாதவிடாய் சுழற்சி, சீராக வைக்கும். மாதம் மாதம் சீரான இடைவெளி இல்லாமல் இருக்கிறது என்றால், அளவுக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கிறது, அல்லது ரத்தப்போக்கு குறைவாக இருக்கிறது என மாதவிடாய் சுழற்சியில் எந்தவொரு பிரச்னை இருக்கிறது என்றாலும், இந்த  பால்மேட்டிக் அமிலம் உதவும். இந்த பால்மேட்டிக் அமிலம் கொத்தமல்லி இலைகளில் ரொம்பவே அதிகமாக இருக்கிறது. 

அதனால், பெண்கள் கொத்தமல்லி இலைகளை உணவில் அன்றாடம் சேர்த்து வாருங்கள். போர்னிவால் என்கிற முக்கியமான வேதிப்பொருளும் கொத்தமல்லி இலைகளில் இருக்கிறது. இது குமட்டல், வாந்தி ஏற்படுவதைக் குறைக்கும். அதனால், கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லி இலைகளை எடுத்துக்கொண்டால், குமட்டல், காலையில் எழும்போது ஏற்படும் அதிக உடல் சோர்வு சரியாகும்.

கொத்தமல்லி இலைகளில் உள்ள இன்னொரு முக்கியமான வேதிப்பொருல் சிட்ரோல் எலால் என்ற வேதிப்பொருள் வாய்ப்புண் ஏற்படுகிற வாய்ப்பை குறைத்துவிடும். பொதுவாக வயிற்றுப்பகுதியில் புண் இருந்தால்தான் அது வாய்ப்புண்ணாக  வெளிப்படும். வயிற்றுப் புண், வாய்ப்புண் இரண்டின் ரனத்தையும் ஆற்றும் தன்மை கொத்தமல்லி இலைகளில் அதிகமாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், கொத்தமல்லி இலைகளில் டையூரிட்டிக் குணம் அதிகமாக உள்ளது. டையூரிட்டிக் குணம் என்றால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருக்கும். இந்த மாதிரி சிறுநீர் சம்பந்தமான பாதிப்பு எதுவுமே ஏற்படாமல் தடுக்கும்.

அதே போல, யு.டி.ஐ என்று சொல்லக்கூடிய சிறுநீர் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் காலையில் கொத்தமல்லி இலைகளின் சாறு கால் கிளா காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம். இது அந்த நோய் பாதிப்பை விரைவாக குறைக்கும்.” என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார். 

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: