குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்கணுமா? இந்த கிழங்கு கொடுங்க; டாக்டர் மைதிலி

குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டுமா அப்போது இந்த கிழங்கை சாப்பிடக் கொடுங்கள் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். அது என்ன கிழங்கு அதனுடைய மருத்துவ குணங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டுமா அப்போது இந்த கிழங்கை சாப்பிடக் கொடுங்கள் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். அது என்ன கிழங்கு அதனுடைய மருத்துவ குணங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
dr mythili

இந்த கிழங்கை குழந்தைகளுடைய அன்றாட உணவில் சேர்க்கும்போது, எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது பற்றி டாக்டர் மைதிலி ஆலோசனை கூறுகிறார். (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian)

குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டுமா அப்போது இந்த கிழங்கை சாப்பிடக் கொடுங்கள் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். அது என்ன கிழங்கு அதனுடைய மருத்துவ குணங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

Advertisment

இந்த கிழங்கை குழந்தைகளுடைய அன்றாட உணவில் சேர்க்கும்போது,  எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது பற்றி Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian என்ற யூடியூப் சேனலில் டாக்டர் மைதிலி ஆலோசனை கூறுகிறார். 

டாக்டர் மைதிலி கூறுகிறார்: “சர்க்கரைவள்ளிக் கிழங்கை குழந்தைகளுடைய அன்றாட உணவில் சேர்க்கும்போது,  எந்தெந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது பற்றியும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் என்ன மாதிரியான மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை நாம் தெளிவாகப் பார்க்கலாம்.

முதலில் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகமாக்கும். இனிப்பு பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் அடிக்கடி ஏற்படும். அவர்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து ஒரு ஸ்நாக்ஸ் மாதிரி காலையில் 11 மணிக்கு அல்லது மாலை நேர சிற்றுண்டி மாதிரி குழந்தைகளுக்கு அடிக்கடி சாப்பிட கொடுக்கும்போது, எந்தவொரு நோய்த்தொற்று பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். ஏனென்றால், இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மாதிரியான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அவர்களுடைய உடம்பில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகமாக்கும். வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும்.

Advertisment
Advertisements

ஹீமோகுளோபின் கம்மியாக இருக்கிற குழந்தைகளுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து சாப்பிட கொடுக்கும்போது, ரத்தத்தில் சிவப்பணுக்களுடைய எண்ணிக்கையை அதிகமாக்கி, ரத்தசோகை நோயை சரி செய்யக்கூடிய தன்மையும் இதில் நிறையவே இருக்கிறது. 

இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு ரொம்ப ரொம்ப நல்லது. மூளை சுறுசுறுப்பாக செயல்பட ரொம்ப உதவியாக இருக்கும். மூளை செயல்பாட்டை நன்றாக மேம்படுத்தும்போது, குழந்தைகள் படிப்பதை மறக்கமாட்டார்கள். ஞாபக சக்தியை அதிகமாக்கி ஞாபக மறதியைத் தடுக்கும். 

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிடக் கொடுப்பதற்கு பதிலாக, இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து அடிக்கடி சாப்பிடக் கொடுக்கும்போது, இதில் நார்ச்சத்து நிறைய இருப்பதால், எந்தவொரு செரிமான பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கும். 

குழந்தைகளுக்கு பிஸ்கட் நிறைய சாப்பிடக் கொடுத்தால் அதில் இருக்கக்கூடிய மைதா மாவு, செரிமானத் திறனைக் கம்மி பண்ணிவிடும். இதனால், மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து அடிக்கடி சாப்பிடக் கொடுக்கும்போது, இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத் திறனும் அதிகமாகும், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். வயிற்றுப் பகுதியில் ஏதாவது புண் இருந்தால் அது ஆறுவதற்கும் ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். 

இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு கண்பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப கம்மியாகும். ஏனென்றால், இதில் பீட்டா கரோட்டின் என்ற முக்கியமான ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. இப்போது இருக்கிற குழந்தைகள் ஆன்லைன் ஸ்டடி என்று நிறைய போன், கம்யூட்டர், லேப்டாப் ஸ்கிரீன்களைப் பார்க்கிறார்கள். இதனால், கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இப்போது இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு ஏற்படுவதற்கு ரொம்பவே அதிகமாக இருக்கிறது.  அதனால், குழந்தைகளுக்கு அன்றாட உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்துக்கொண்டே வரும்போது, குழந்தைகளுக்கு கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். ஏனென்றால், இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ ஊட்டச்சத்து, அவர்களுடைய கண் பார்வைத் திறனை அதிகமாக்கும்.

உடல் வளர்ச்சி கம்மியாக இருக்ககூடிய குழந்தைகளுக்கு இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து அடிக்கடி சாப்பிடக் கொடுக்கும்போது உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகமாகும். உடல் வளர்ச்சிக் கம்மியாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து கொடுக்கலாம். 

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை அன்றாட உணவில் அளவோடு சேர்த்து வரும்போது, புற்றுநோய் ஏற்படுகிற வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மியாகும். 

குறிப்பாக புராஸ்டேட் கேன்சர், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் இதையெல்லாம் தடுக்க அன்றாட உணவில் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்க்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். எலும்புத் தேய்மானம், மூட்டுவலியை சரி செய்யும். இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும், ரத்தத்தில் இருக்ககூடிய கழிவுகளை எல்லாம் வெளியேற்றம் செய்வதால், சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். 

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடக் கொடுக்கும்போது, அவர்களுடைய ஸ்கின் சாஃப்ட்டாகவும் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் தோற்றமளிக்கச் செய்யும்.” என்று டாக்டர் மைதிலி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: