பி.பி, சுகர் ஏறுவதை தடுக்கும்; வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து இப்படி குடிங்க; டாக்டர் மைதிலி

வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் பி.பி, சுகர் ஏறுவதை தடுக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் பி.பி, சுகர் ஏறுவதை தடுக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Dr Mythili Okra

வெண்டைக்காய் ஊறிய தண்ணீர் குடிப்பதால் வரும் நன்மைகள் குறித்து டாக்டர் மைதிலி தனது (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian) யூடியூப் சேனலில் ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

வெண்டைக்காய் ஊறிய தண்ணீரைக் குடித்தால் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார். வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் பி.பி, சுகர் ஏறுவதை தடுக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். வெண்டைக்காயை ஊறவைத்த தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்பதை இங்கே பார்ப்போம்.

Advertisment

வெண்டைக்காய் ஊறிய தண்ணீர் குடிப்பதால் வரும் நன்மைகள் குறித்து டாக்டர் மைதிலி தனது (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian) யூடியூப் சேனலில் ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

டாக்டர் மைதிலி கூறுகையில், வெண்டைக்காய் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். வெண்டைக்காய் ஊறிய தண்ணீரைக் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். இது சர்க்கரை நோய்க்கு மட்டுமில்லாமல் பல நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

வெண்டைக்காய் ஊறிய தண்ணீரில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையை சுறுசுறுப்பாக வைக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும், கல்லீரலில் நச்சுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். இது இதயத்தையும் ரொம்ப ஆரோக்கியமாக வைக்க உதவும். கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை பலமடங்கு அதிகமாக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

வெண்டைக்காய் ஊறிய தண்ணீர் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகம் ஆகாமல் பார்த்துக்கொள்ளும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். அஜீரணப் பிரச்னைகள் ஏற்பட்டால் சரி செய்யும். அஜீரணப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

நாம் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை அடிக்கடி குடிக்கும்போது கண் பார்வைத் திறன் நன்றாக அதிகம் ஆகும். வெண்டைக்காயை பொரியல் மாதிரி உணவில் சேர்த்துவந்தாலும், கண்புரை, லோக்கமா போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கும்.

இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். ஹை பி.பி இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை அடிக்கடி குடிக்கும்போது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், பக்கவாதம் என்கிற ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்க முடியும்.

ரத்த சிவப்பு அணுக்களை அதிகமாக்கும். அனீமியா என்கிற ரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும். ஒரு கிளாஸ் வெண்டைக்காய் ஊறிய தண்ணீரில், 80 மைக்ரோ கிராம் அளவுக்கு போலைட் ஊட்டச் சத்து இருக்கிறது. வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து குடிக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க ரொம்ப உதவியாக இருக்கும். 

அதுமட்டுமல்ல வெண்டைக்காய் ஊறிய தண்ணீர் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். வெண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால், இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவடைய வைக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய வெண்டைக்காய் தண்ணீர் எப்படி செய்ய வேண்டும் என்றால், 4 வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள், அதை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு, இரண்டு முனைகளையும் கட் பண்ணிவிட வேண்டும். அதற்கு, வெண்டைக்காயை சின்ன சின்ன துண்டுகளாகக் கட் பண்ணிக்கொள்ளுங்கள். இரவு நீங்கள் தூங்கப் போவதற்கு முன்னால், ஒரு கிளாஸ் தண்ணீரில் வெண்டைக்காய் துண்டுகளை ஊறவையுங்கள். 8 மணி நேரம் ஊற வேண்டும். காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு, வெறும் வயிற்றில் இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரைக் குடித்து வந்தால், 60 நாட்களில் மேலே சொன்ன நோய்கள் எல்லாம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: