விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும்; ஆண்களே இந்த கீரையை இப்படி சாப்பிடுங்க! டாக்டர் மைதிலி
கானா வாழைக் கீரை என்றும் கன்றுக்குட்டி புல், கானாம் புல் என்று அழைக்கப்படும் கானா வாழைக் கீரையை சாப்பிட்டால், ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
கானா வாழைக் கீரையை துவரம்பருப்புடன் சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். Image screengrab form youtube / SPR Prime Media
முன்னெப்போதும் இல்லாத அளவில் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு வாழ்க்கை முறை, உணவு முறை, பணிச் சூழல், மரபு ரீதியான குறைபாடு, உடல் நலப் பிரச்னை, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு என்று பல காரணங்கள் கூறுகின்றனர். இதில், ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கானாவாழைக் கீரையை டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். எஸ்.பி.ஆர் பிரைம் மீடியா (SPR Prime Media) யூடியூப் சேனலில் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் மைதிலி, கானா வாழைக் கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றி கூறியுள்ளார். டாக்டர் மைதிலி கூறுகையில், “பெண்களுக்கு உடல் உஷ்ணம் காரணமாக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அதையும் இந்த கானா வாழைக் கீரை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் சுழற்சியை சீராக்க இந்த கானா வாழைக் கீரை உதவுகிறது.” என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
கானாவாழைக் கீரையை ஆண்கள் சாப்பிட்டால், டெஸ்டோஸ்டிரோனை அதிகப்ப்படுத்தும், விந்தணுக்கள் மற்றும் விந்தணுக்களின் தரத்தை இயற்கையாகவே அதிகப்படுத்தும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
மேலும், குழந்தை இன்மைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஆண்கள் இந்த கானா வாழைக் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் என்றால், கானா வாழைக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து, அதனுடன் முருங்கைப் பூவையும் சேர்த்து, கூட்டு மாதிரி சமைத்து சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிடுங்கள். அதற்கு பிறகு, வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக சாப்பிட்டுவந்தால், இந்த கீரையில் அப்ரோடிசியாக் தன்மை இருப்பதால் ஆண்களுக்கு ஆண்மையை அதிகப்படுத்தும், டெஸ்டோஸ்டிரோனை அதிகப்படுத்தும், விந்தணுக்கள் மற்றும் விந்தணுக்களின் தரத்தை இயற்கையாகவே அதிகப்படுத்தும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.