சிறுநீரக கல் கரைந்து வெளியேறும்… காலையில் இந்த இலையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்க; டாக்டர் மைதிலி
சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால் இந்த இலையைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேறும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். அது என்ன செடியின் இலை, அதன் மருத்துவ குணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
சிறுநீரகக் கற்கள் இருந்தால் அதை இயற்கையாக வெளியேற்றும் மற்றும் மஞ்சள் காமாலை நோய் இருந்தால் இந்த ரணகள்ளி இலை குணப்படுத்தும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால் இந்த இலையைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேறும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார். அது என்ன செடியின் இலை, அதன் மருத்துவ குணங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
Advertisment
சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால் இந்த இலை நோயின் தீவிரத்தைக் குறைக்கும், ஏனென்றால் இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும். சிறுநீர் பாதையில் ஏதாவது தொற்று இருந்தாலும் சரி செய்துவிடும். சிறுநீரகக் கல் உள்ளவர்களுக்கு வயிறு வலி இருக்கும். அது அப்படியே முதுகுக்குப் பின்னாலும் வலி இருக்கும். இந்த வலியைக் கம்மி பண்ணும் தன்மை ரணகள்ளி இலைக்கு அதிகமாக இருக்கிறது என்று தனது Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian என்ற யூடியூப் சேனலில் டாக்டர் மைதிலி கூறுகிறார்.
சிறுநீரகக் கற்கள் இருந்தால் அதை இயற்கையாக வெளியேற்றும் மற்றும் மஞ்சள் காமாலை நோய் இருந்தால் இந்த ரணகள்ளி இலை குணப்படுத்தும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். இந்த ரணகள்ளி இலையின் நன்மைகள் குறித்து டாக்டர் மைதிலி கூறுகையில், சிறுநீரகக் கற்கள் இருந்தால் இந்த ரணகள்ளி செடியின் ஒரு இலையை எடுத்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் 10 நாட்கள் சாப்பிட்டால், சிறுநீரகக் கல் இயற்கையாக கரைந்து வெளியேறும். அதே போல, இந்த இலை சிறுநீரகக் கல் நோயின் தீவிரத்தைக் குறைக்கும், சிறுநீரகக் கல்லா ஏற்படும் வலியைக் கம்மி பண்ணும். ஏனென்றால் இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் பாதையில் ஏதாவது தொற்று இருந்தாலும் சரி செய்துவிடும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
Advertisements
அதே போல, மஞ்சள் காமாலை நோய் இருந்தால் இந்த ரணகள்ளி இலையை எடுத்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து காலையில் வெறும் வயிற்றில் 10 நாட்கள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் படிப்படியாக குறைந்து சரியாகும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். இந்த இலை சிறுநீரகத்தையும் கல்லீரலையும் தூய்மைப்படுத்தும். நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த நிலையை சாப்பிட்டால் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.
அதே நேரத்தில், இந்த ரணகள்ளி இலையை ஒருவர் 10 நாட்களுக்கு மேல் சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதே போல, இந்த ரணகள்ளி இலையை கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்று பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று டாக்டர் மைதிலி எச்சரிக்கிறார்.