மாரடைப்பை தடுக்கும் சத்து இந்த மீனில் அதிகம்; ஆனால் இப்படி தான் சாப்பிடணும்; டாக்டர் மைதிலி
மாரைடைப்பைத் தடுக்கும் சத்து இந்த மீனில் அதிகம் உள்ளது. ஆனால், இதை இப்படிதான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் மைதிலி ஆலோசனை வழங்கியுள்ளார். அது என்ன மீன், மாரடைப்பைத் தடுக்கும் என்ன சத்து அந்த மீனில் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

டாக்டர் மைதிலி தனது யூடியுப் சேனலில் (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian) ஆரோக்கிய குறிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Advertisment
டாக்டர் மைதிலி தனது யூடியுப் சேனலில் (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian) ஆரோக்கிய குறிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
டாக்டர் மைதிலி, மத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதாகவும் இது மாரடைப்பைத் தடுக்க உதவும் என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இது குறித்து டாக்டர் மைதிலி கூறுகையில், “அசைவ உணவுகளில் ஒன்றான மத்தி மீன் பற்றி பார்க்கலாம். இந்த மத்தி மீனில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் என்ற ஊட்டச்சத்து அதிக அளவில் உள்ளது. பொதுவாக ஒமேகா 3 ஊட்டச்சத்து நம்முடைய உடலில் 2 முக்கியமான உடலுறுப்புகளை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். முதல் முக்கியமான உடல் உறுப்பு இதயம். இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்து மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி பண்ணுகிறது. அதோடு மட்டும் இல்லாமல். இரண்டாவது முக்கியமான உடல் உறுப்பு மூளைக்கும் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். ரொம்ப குறிப்பாக ஒமேகா டி.எச்.ஏ வகை , அல்சீமர், டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பை தடுத்து நியாபக சக்தியை அதிகப்படுத்தி மூளையை சுறுசுறுப்பா செயல்பட வைக்கக்கூடிய தன்மை பார்த்தால் இந்த ஒமேகா 3-யில் அதிகமாக உள்ளது.
கூடவே மத்தி மீனில் புரத ஊட்டச் சத்து அதிக அளவில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு தசை வளர்ச்சிக்குத்ட் தேவையான ஊட்டச்சத்து. பொதுவாவே உடல் பருமனாக இருந்து உடல் எடையை கம்மி பண்ணுவதற்கு நீங்க டயட் ஃபாலோ செய்கிறீர்கள் என்றால் எல்லா வகையான மீனையும் அன்றாட உணவில் சேர்க்கலாம். உடல் எடையையும் சீக்கிரமே ஆரோக்கியமான முறையில கம்மி பண்ண முடியும். உடல் எடையைப் பராமரிப்பதற்கும் ரொம்பவே உதவியா இருக்கும். எலும்புகளையும் நல்லா வலுவடைய செய்யும். ஏனென்றால், மத்தி மீனில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளது. இது எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைக் குறைக்கும். இதில் இரும்புச் சத்தும் அதிக அளவில் உள்ளது. இரும்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்களைப் பராமரிக்கும் ஹீமோகுளோபின் அளவு எப்போதுமே கம்மியாகாமல் சரியான அளவில் பராமரிக்கும். ரத்தசோகை நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு இரும்பு ஊட்டச்சத்து ரொம்பவே பயன் தரும்.
நீரிழிவு உள்ளவர்களில், ரத்த சர்க்கரை அளவு யாருக்காவது அதிகமா இருக்கிறது என்றால், இந்த மத்தி மீனை தொடர்ச்சியாக அடிக்கடி அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டே வரும்போது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்கும். அதனால், மத்தி மீனை அன்றாட உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.” என்று டாக்டர் மைதிலி ஆலொசனைகளை வழங்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.