ஆண்களுக்கு அரு மருந்து! துவரம் பருப்புடன் சேர்த்து இந்தக் கீரை சாப்பிடுங்க: டாக்டர் மைதிலி
கானா வாழைக் கீரை என்றும் கன்றுக்குட்டி புல், கானாம் புல் என்று அழைக்கப்படும் இந்த கானா வாழைக் கீரை ஆண்களுக்கு அருமருந்து என்றும் துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் பயனளிக்கும் என்றும் டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார்.
கானா வாழைக் கீரை மூலவியாதியின் தீவிரத்தை படிப்படியாகக் குறைத்து, மூலவியாதியால் ஏற்படும் ரத்தப்போக்கையும் சரி செய்யும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார். Image screengrab form youtube / SPR Prime Media
இயற்கை மருத்துவத்தை நோக்கி பலரும் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், சமூக ஊடகங்களில் இயற்கை மருத்துவம் பற்றிய தகவல்கள் அதிகம் கவனம் பெறுகின்றன. எஸ்.பி.ஆர் பிரைம் மீடியா (SPR Prime Media) யூடியூப் சேனலில் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் மைதிலி, கானா வாழைக் கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றி கூறியுள்ளார். டாக்டர் மைதிலி கூறுகையில், “கானா வாழைக் கீரை ஒரு முக்கியமான கீரை. இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள். ஏனென்றால், கன்றுக்குட்டி, பசுமாடு இந்த இலைகளை விரும்பி சாப்பிடும் என்பதால் இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள்.
Advertisment
இந்த கானா வாழைக் கீரை அன்றாட உணவில், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருதடவையாவது சேர்த்துக்கொண்டு வந்தால், உடல் உஷ்ணம் அதிகமாகாமல் சமநிலையில் பராமரிக்க முடியும். உடல் சூடு காரணமாக ஒரு சிலருக்கு சிறுநீர் கடுப்பு ஏற்படும் மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் அதை சரி செய்யக்கூடிய தன்மை இந்த கானா வாழைக் கீரையில் அதிகமாக இருக்கிறது. அதே மாதிரி, சிறுநீரகத்தை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்” என்று கூறுகிறார்.
கானா வாழைக் கீரை மூலவியாதியின் தீவிரத்தை படிப்படியாகக் குறைத்து, மூலவியாதியால் ஏற்படும் ரத்தப்போக்கையும் சரி செய்யும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
மூலவியாதியால் ரத்தப்போக்கு உள்ளது என்றால், இந்த கானா வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், சம அளவு துத்தி இலை அல்லது துத்தி கீரை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த 2 கீரைகளையும் விழுதாக அரைத்து, அதை ஒரு சுத்தமான காடா துணியில் வைத்து பிழிந்து எடுத்தால் வரும் சாற்றை 25 மி.லி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 10 நாட்கள் குடித்துவந்தால், மூலவியாதியால் ஏற்படக்கூடிய ரத்தப்போக்கு படிப்படியாக நாளடைவில் கம்மியாகும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
Advertisment
Advertisements
பெண்களுக்கு உடல் உஷ்ணம் காரணமாக வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் அதையும் இந்த கானா வாழைக் கீரை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் சுழற்சியை சீராக்க இந்த கானா வாழைக் கீரை உதவுகிறது.
வாய்ப் புண், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, ஈறுகளில் புண் இருந்தால், இந்த கானா வாழைக் கீரை இலைகள் 10 எடுத்துக்கொள்ளுங்கள். இதை 2 டம்ப்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டீல் வாயில் ஊற்றி தொண்டைப்பகுதியில் படும்படி கொப்பளித்து துப்பினால், புண்கள் ஆரும், மேலும், வாயில் ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகள் வெளியேறும்.
உடம்பில் நாள்பட்ட புண் இருந்தால், அதற்கு இந்த கானா வாழைக் கீரை இலைகளை எடுத்து விழுதுபோல அரைத்து பத்து போட்டால் புண்கள் ஆறும். அதே போல, நீரிழிவு நோயாளிகளுக்கு குழிப்புண் இருந்தால், இந்த கானா வாழைக் கீரை இலைகளை எடுத்து அரைத்து அதன் சாற்றை குழிப்புண் மீது விட்டு பயன்படுத்தி வந்தால் அதுவும் ஆரும் என்று டாக்டர் மைதிலி குறுகிறார்.
இதையெல்லாம் விட, குறிப்பாக குழந்தை இன்மைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஆண்கள் இந்த கானா வாழைக் கீரையை சாப்பிட்டால், டெஸ்டோஸ்டிரோனை அதிகப்ப்படுத்தும், விந்தணுக்கள் மற்றும் விந்தணுக்களின் தரத்தை இயற்கையாகவே அதிகப்படுத்தும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.
குழந்தை இன்மைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஆண்கள் இந்த கானா வாழைக் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் என்றால், இந்த கானா வாழைக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து, அதனுடன் முருங்கைப் பூவையும் சேர்த்து, கூட்டு மாதிரி சமைத்து சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிடுங்கள். அதற்கு பிறகு, வாரத்திற்கு ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக சாப்பிட்டுவந்தால், இந்த கீரையில் அப்ரோடிசியாக் தன்மை இருப்பதால் ஆண்களுக்கு ஆண்மையை அதிகப்படுத்தும், டெஸ்டோஸ்டிரோனை அதிகப்ப்படுத்தும், விந்தணுக்கள் மற்றும் விந்தணுக்களின் தரத்தை இயற்கையாகவே அதிகப்படுத்தும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.