ஜீரண சக்தி போயே போச்சு... பாக்கெட் இட்லி மாவு ஆபத்து இதுதான்: டாக்டர் மைதிலி

இட்லி, தோசை தென் இந்தியாவின் தினசரி உணவாக உள்ள நிலையில், சில ஆண்டுகளாக பலரும், கடைகளில் விற்கப்படும் பாக்கெட்டில் ரெடிமேட் மாவு பாக்கெட்டை வாங்கி இட்லி, தோசை செய்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி போயே போச்சு என்று பாக்கெட் இட்லி மாவு குறித்து டாக்டர் மைதிலி எச்சரிக்கிறார்.

இட்லி, தோசை தென் இந்தியாவின் தினசரி உணவாக உள்ள நிலையில், சில ஆண்டுகளாக பலரும், கடைகளில் விற்கப்படும் பாக்கெட்டில் ரெடிமேட் மாவு பாக்கெட்டை வாங்கி இட்லி, தோசை செய்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி போயே போச்சு என்று பாக்கெட் இட்லி மாவு குறித்து டாக்டர் மைதிலி எச்சரிக்கிறார்.

author-image
WebDesk
New Update
Dr Mythili readymade idly flour

"கடைகளில் விற்கக்கூடிய ரெடிமேடு இட்லி மாவை வாங்கி பயன்படுத்தினால், உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும், பிற்காலத்தில் என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்” என்பதை டாக்டர் மைதிலி தெளிவாகக் கூறியுள்ளார்.

இட்லி, தோசை தென் இந்தியாவின் தினசரி உணவாக உள்ள நிலையில், சில ஆண்டுகளாக பலரும், கடைகளில் விற்கப்படும் பாக்கெட்டில் ரெடிமேட் மாவு பாக்கெட்டை வாங்கி இட்லி, தோசை செய்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி போயே போச்சு என்று பாக்கெட் இட்லி மாவு குறித்து டாக்டர் மைதிலி எச்சரிக்கிறார்.

Advertisment

கடைகளில் விற்கப்படும் பாக்கெட்டில் ரெடிமேட் மாவு பாக்கெட்டை வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து இரிஸ் விஷன் (IRIZ VISION) யூடியூப் சேனலில் டாக்டர் மைதிலி கூறியதை இங்கே தருகிறோம்.  “இப்ப இருக்கிற காலகட்டத்தில், இட்லி, தோசை செய்வதற்கு வீட்டில் கிரைண்டரில் மாவு ஆட்டாமல், வெளியில் கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் இட்லி பேட்டர் என்று சொல்லக்கூடிய இட்லி மாவு வாங்கி பயன்படுத்துகிறார்கள். அப்படி கடைகளில் விற்கக்கூடிய ரெடிமேடு இட்லி மாவை வாங்கி பயன்படுத்தினால், உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும், பிற்காலத்தில் என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்” என்பதை டாக்டர் மைதிலி தெளிவாகக் கூறியுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் வெளியே வேலைக்குப் போவதால், இட்லி, தோசை செய்வதற்கு மாவு அரைக்க நேரமில்லை என்ற காரணம், கிரைண்டரில் மாவு அரைக்க ஆகும் மின்சாரக் கட்டணத்தை மிச்சப்படுத்துகிறோம் என்ற பெயரில், வேலை நிமித்தமாக அல்லது வெளியூர் சென்று தங்கி படிப்பவர்கள் வீட்டில் கிரைண்டரில் மாவு அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள்,  கடைகளில் விற்கப்படும் இந்த ரெடிமேடு இட்லி மாவு வாங்கி பயன்படுத்துகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இட்லி மாவை வாங்கி பயன்படுத்தும்போது, என்ன ஆகும் என்றால் நம்ம வீட்டில், நம்ம கண்பட, நம்ம கிரைண்டரில் மாவு ஆட்டினால், நாம் மாவு ஆட்டிய பிறகு, நம்ம கையால் மிகவும் சுத்தமாக கழுவி சுத்தம் செய்வோம். ஆனால், வெளியில், கடைகளில் கிரைண்டரை எந்த அளவுக்கு சுத்தமாகக் கழுவி சுத்தம் செய்வார்கள் என்பது நமக்கு தெரியாது. 

Advertisment
Advertisements

இது சுகாதாரம் இல்லை என்பது ஒரு பிரச்னை என்றால், இட்லி மாவை ஆட்டிய பிறகு, கிரைண்டரை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், கிரைண்டரில் ஈக்கொல்லி பாக்டீரியாவின் தாக்கம் ஏற்படும். ஈக்கொல்லி பாக்டீரியா தாக்கம் ஏற்பட்ட கிரைண்டரில் அடுத்தடுத்து மாவு அரைக்கும்போது, அந்த மாவை நீங்கள் வாங்கி, எவ்வளவுதான் வேக வைத்து சாப்பிட்டாலும் அந்த ஈக்கொல்லி பாக்டீரியாவின் தாக்கம் உங்கள் வயிற்றுக்குள் போகும்போது, பிற்காலத்தில் பக்கவிளைவுகள் ஏற்படும். 

கடைகளில் விற்கப்படும் இட்லி மாவை வாங்கி தொடர்ச்சியாக இட்லி தோசை செய்து சாப்பிடும்போது, என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்றால், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம். அசிடிட்டி, அஜீரணம், கேஸ்ட்ரோஸ்டிக் பிரச்னை கட்டாயம் வந்துவிடும். இரைப்பை சம்பந்தப்பட்ட வியாதிகளை ஏற்படுத்தும் வாய்ப்பு ரொம்ப அதிகம். குடல் பகுதியுடைய இயக்கத்தையே பாதிக்கச் செய்யும். ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். ஒரு சிலருக்கு உடனேகூட வயிற்றுப்போக்கு ஏற்படும். தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு ஏற்படும். 

அதே மாதிரி, தலைசுற்றல், தலைவலி ஏற்படக்கூடிய வாய்ப்பு ரொம்பவே அதிகம். ஒருசிலர் மாவு சீக்கிரம் பொங்க வேண்டும் என்பதால் அதில் பேக்கிங் சோடா சேர்ப்பார்கள். அப்படி பேக்கிங் சோடா சேர்க்கப்பட்ட மாவை அடிக்கடி வாங்கி பயன்படுத்தும்போது, உங்கள் செரிமான திறன் கொஞ்சம் கொஞ்சமாக கம்மியாகிவிடும். பசியின்மை ஏற்படுத்தும். வயிறு மந்தப்பட்டுவிடும். பிரசர்வேட்டிவ் சேர்க்கப்பட்ட மாவை வாங்கி பயன்படுத்தினால், செரிமான மண்டலமே பாதிக்கப்படும்.

அதனால், உங்கள் வீட்டிலேயே கிரைண்டரில் மாவு அரைத்து பயன்படுத்துங்கள். பலரும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்து பயன்படுத்துகிறார்கள். கருப்பு உளுந்து பயன்படுத்துங்கள். அப்படி வீட்டிலேயே அரைத்து செய்யப்படும் இட்லி மாவு மூலம் செய்யப்படுகிற இட்லி, ஆவியில் வெந்த உணவு என்பதால் ஒர் சில நோய்களைத் தடுக்கும். இட்லியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு இட்லியில் 1 மி.கிராம் இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும், ஒரு இட்லியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, ஃபோல் 8 இப்படி ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் இட்லியில் இருக்கிறது. 

பிரிபயோட்டிக் உணவில் இட்லியும் ஒன்று. அதுமட்டுமில்லாமல்  நம்முடைய காமா அமினோ பேட்ரிக் என்கிற அமினோ அமிலம் சீரான முறையில் சுறப்பதற்கும் இட்லி ரொம்ப உதவியாக இருக்கும். அதனால், உங்கள் வீட்டிலேயே மாவு அரைத்து செய்த இட்லியை காலை உணவாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மிகச் சிறந்த உணவாக இருக்கும். அதனால், உங்கள் வீட்டில், உங்கள் கிரைண்டரில், உங்கள் கைப்பட மாவு ஆட்டி இட்லி செய்யுங்கள்.” என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: