தூக்கம் வராமல் அவதியா? தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுங்க! டாக்டர் நித்யா
இரவில் தூக்கம் வராமல் படுக்கையில் புளுகிறீர்களா? எளிதாக தூங்க தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுங்க என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார். இரவில் நன்றாக உறங்குவதற்கு டாக்டர் நித்ய வழங்கும் ஆலோசனைகளை இங்கே பார்ப்போம்.
தூக்கமின்மை பிரச்னையால் என்னென்ன உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதை சரி செய்து இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் நித்யா வழங்கும் ஆலோசனைகளை இங்கே தருகிறோம்.
இரவில் தூக்கம் வராமல் படுக்கையில் புளுகிறீர்களா? எளிதாக தூங்க தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுங்க என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார். இரவில் நன்றாக உறங்குவதற்கு டாக்டர் நித்ய வழங்கும் ஆலோசனைகளை இங்கே பார்ப்போம்.
Advertisment
தூக்கமின்மை பிரச்னையால் என்னென்ன உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதை சரி செய்து இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மிஸ்டர் லேடிஸ் (Mr Ladies) யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா வழங்கும் ஆலோசனைகளை இங்கே தருகிறோம்.
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் தூங்கி எழுந்திருக்கும்போது உடம்பு அடித்துபோட்ட மாதிரி இருப்பதாக உணர்வது, உடல் எப்போது சோர்வாக உணர்வது, ஒரு வேலையை செய்ய நினைத்து செய்ய முடியாமல் போவது, அஜீரணம், திடீரென ஒற்றைத் தலைவலி வருவது, திடீரென தலைசுற்றல், சர்க்கரை அளவு உயர்தல், ரத்த அழுத்தம் உயர்தல், உடல் வளர்சிதை மாற்றத்தில் பிரச்னை என பல பிரச்னைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் தூக்கமின்மைதான். இன்சோம்னியா என்று அழைக்கப்படும் தூக்கமின்மை பிரச்னை பல பேருக்கு ரொம்ப வருடமாகவே இருக்கிறது.
Advertisment
Advertisements
சிலர் தூங்க படுக்கைக்கு சென்றால் தூக்கம் வருவதில்லை, தூங்கினாலும் ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, இரவு நேர பணி காரணமாக தூங்க முடியாமல், பகலில் தூங்க வேண்டியுள்ளதால், சரியாக தூங்க முடியவில்லை என தூக்கமின்மைக்கு பல காரணங்களை கூறுகின்றனர்.
தூக்கமின்மையால், பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய், வயிறு சம்பந்தமான பிரச்னைகள், ஆண்களுக்கு வயிறு அஜீரணம், விரைப்புத்தன்மை குறைபாடு ஆகியவை ஏற்படுகிறது. அதனால், இயற்கையான முறையில் எப்படி தூங்குவது, தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சரி செய்யலாம், இயற்கையான முறையில் தீர்வு காண்பது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
தூக்கமின்மை பிரச்னையை இயற்கையான முறையில் சரி செய்ய இரவில் எளிதான உணவுகளை சாப்பிடுங்கள். ஆவியில் வேக வைத்த உணவு, புரோட்டின் நிறைந்த உணவு, பழங்கள், பாதம், வேர்க்கடலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார்.
குறிப்பாக, தினமும் ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம். வேர்க்கடலையை வெல்லத்துடன் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்று கவலைப்பட வேண்டாம். இதனால், சர்க்கரை பெரிய அளவில் உயராது. ஆனாலும், உங்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்றால் தினசரி வெறும் வறுத்த வேர்க்கடலையை மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிடுங்கள். இது நல்ல தூக்கத்திற்கு உபயோகமாக இருக்கிறது” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.