சின்ன வெங்காயம்- கருப்பட்டி சேர்ந்தா செம்ம மேஜிக்; உடல் எடை- கல்லீரல் கொழுப்பு குறைய இப்படி யூஸ் பண்ணுங்க!

பெண்களுக்கு ஏற்படக்கூடிய நிறைய உடல் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய ஒரு மூலிகையான சின்ன வெங்காயம் சாறு உடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை, கல்லீரல் கொழுப்பு குறைய உதவுகிறது என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
dr nithya onion

சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து டாக்டர் நித்யா கூறுவதை இங்கே தருகிறோம்.

காலப் போக்கில் நாம் பயன்படுத்தத் தவறிய ஒரு மூலிகை, பெண்களுக்கு ஏற்படக்கூடிய நிறைய உடல் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய ஒரு மூலிகையான சின்ன வெங்காயம் சாறு உடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை, கல்லீரல் கொழுப்பு குறைய உதவுகிறது என்று டாக்டர் நித்யா கூறுகிறார். 

Advertisment


சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து சத்குரு சாய் கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறியதை இங்கே அப்படியே தருகிறோம். டாக்டர் நித்யா கூறியிருப்பதாவது: “நம் வீடுகளில் பயன்படுத்தும் சில மூலிகைகளில் அதிக மருத்துவப் பயன்கள் இருக்கும். காலப் போக்கில் அதை நாம் மறந்திருப்போம். அந்த மாதிரி, நாம் மறந்த, பயன்படுத்தத் தவறிய ஒரு மூலிகை, பெண்களுக்கு ஏற்படக்கூடிய நிறைய உடல் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கக்கூடிய ஒரு மூலிகைதான் சின்ன வெங்காயம். இதில் வெள்ளை வெங்காயம் ரொம்ப மருத்துவ குணம் நிறைந்தது.  

சின்ன வெங்காயத்தில் நிறைய ஆல்கிளாய்ட்ஸ் இருக்கிறது. நம்முடைய உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடிய ஆற்றல் சின்ன வெங்காயத்திற்கு இருக்கிறது. இதை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம்.

இன்றைக்கு பெண்கள் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்னை, மாதவிடாய் தொடர்பான பிரச்னைதான். ஒழுங்கற்ற மாடவிடாய் பிரச்னை. அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை அகற்றுதல், கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு சின்ன வெங்காயம் ஒரு அருமருந்தாக இருக்கிறது. 

Advertisment
Advertisements

அதே போல, நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கிறது. ஹீமோகுளோபின் அளவு 8 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பெண்களூக்கு அனிமியா இருக்கிறது. இந்த சின்ன வெங்காயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய அலிசன் என்கிற பொருள், எலும்பு மஜ்ஜையில் இருந்து சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதில் உறுதுனையாக இருக்கிறது. தலைமுடியில், புழு வெட்டு, கிருமித் தொற்று இருந்தால், சின்ன வெங்காயம் சாறு அப்ளை செய்கிறார்கள். அந்த அளவுக்கு சின்ன வெங்காயத்தில் கிருமித் தொற்றை அழிக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. 

சிறுநீரக பிரச்னை இருக்கிறவர்கள், அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று இருப்பவர்களுக்கும், குடலை சுத்தப்படுத்த வேண்டும் என்பவர்களுக்கும், ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகள் நீங்குவதற்கும் சின்ன வெங்காயம் பயன் அளிக்கும். 

சின்ன வெங்காயத்தை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளுங்கள், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடைய சாறில் தண்ணீர் கொஞ்சமாக விட்டால் போதும், இதனுடைய சாறை திக்காக பிழிந்து எடுத்து வைத்துகொளுங்கள். இந்த சாறில் கருப்பட்டியை சேர்க்க வேண்டும். அதாவது, கருப்பட்டியை தனியாக பாகு மாதிரி காய்ச்சி வடிகட்டி எடுத்து சின்ன வெங்காயம் சாறில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை, ஸ்டவில் தீயை சிம்மில் வைத்து கிண்டிக்கொண்டே வந்தால், திக்காக வரத் தொடங்கும். அதாவது ஒரு பாகு மாதிரி வரத்தொடங்கும். அதை எடுத்து கொஞ்ச நேரம் வெளியிலே வைத்திருந்தால், இன்னும் திக்காகி விடும். இதை நாம் ஒரு 10 - 20 நாள் வரை பயன்படுத்தலாம். இதை காலையிலும் இரவிலும் உணவுக்கு முன் 2 வேளையும் சாப்பிட வேண்டும். 

இதை கர்ப்பப்பை பிரச்னை இருப்பவர்கள், உடலில் கொழுப்புக் கட்டி இருப்பவர்கள் இதை தினமும் இப்படி சாப்பிட்டுவந்தால், நல்ல மாற்றங்கள் இருக்கும். பித்தப்பை கற்கள், கொழுப்பு படிந்த கல்லீரல் பிரச்னை இருப்பவர்களும் இந்த சின்ன வெங்காயம் சாறில் செய்த சிரப்பை சாப்பிட்டால் பயன் அளிக்கும். இதை தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதற்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த சின்ன வெங்காயம், நம்முடைய தோலில் ஏற்படும் தேமல், தலையில் ஏற்படக்கூடிய புழுவெட்டு, இதற்கும் இந்த சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். சின்ன வெங்காயம் சாறு எடுத்துக்கொண்டு அல்லது சின்ன வெங்காயம் கட் பண்ணி எடுத்துக்கொண்டு மிளகுதூளில் தொட்டு எங்கெல்லாம் முடி உதிர்வு இருக்கிறதோ, அல்லது புழுவெட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் தேய்த்துகொண்டு வந்தால், நாளடைவில் அங்கே இருக்கக்கூடிய பூஞ்சை தொற்றுகள் எல்லாம் மறைய ஆரம்பிக்கும். புதிய முடிகள் வளரவும் ஆரம்பிக்கும். 

அண்டர் ஆர்ம்ஸ், தொடை இடுக்கு பகுதிகளில், தோல் அரிப்பு, பூஞ்சை தொற்று இருந்தால், அது வீட்டில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கும் வரும். அதனால், அவர்கள் சின்ன வெங்காயம்  சாறு எடுத்து அருகம்புல் சாறில் கலந்து அதில் சிறிது அளவு மஞ்சள்தூள் கலந்து அந்த இடங்களில் தடவ வேண்டும். நாளடைவில் சரியாகிவிடும். 

அதுமட்டுமல்லா ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அடைப்பு, இதய தசைகளில் கொழுப்பு படிந்திருக்கிறது என்றால் அவர்களும் இந்த சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொள்ளலாம். 

அதனால், இந்த சின்ன வெங்காயம் சிரப் வீட்டிலேயே செய்து வைத்துக்கொள்ளுங்கள், இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை தினமும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் இருக்கக்கூடிய பல நோய்களுக்கு தீர்வாக இருக்கும். தைராய்டு பிரச்னைகளுக்கு சின்ன வெங்காயம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. சின்ன வெங்காயம் சாறு எடுத்து  கொஞ்சமாக சுக்கு தூள், மஞ்சள்தூள் போட்டு தைராய்டு வீக்கம் இருக்கும் இடத்தின் மீது பத்து போட்டு வந்தால் சரியாகும்.” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: