/indian-express-tamil/media/media_files/2025/01/31/KtFk06RCZ4vdJ8U4ekqx.jpg)
டாக்டர் நித்யா வழங்கும் மருத்துவ ஆலோசனைகள்: Imge Screenshot: youtube/ Mr Ladies
சர்க்கரை நோய், நீரிழிவு நோய், டயாபடீஸ் என்று பல பெயர்களில் சொல்லப்படும் சர்க்கரை நோய் வந்தால், சர்க்கரை கசந்து போகிறது. இந்த நாள்பட்ட நீரிழிவு நோயால் ஆண் உறுப்பு சிறுத்து அவதி அடைகிறார்கள். அவர்கள் இந்தப் பவுடர் தினமும் 5 கிராம் எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா வழங்கிய மருத்துவ ஆலோசனைகளை அப்படியே இங்கே தருகிறோம்: சித்த மருத்துவர் டாக்டர் நித்யா கூறுகையில், “ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் இதனால் ஆண்களுக்கு நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகம், பிரச்னை என்ன என்று பார்த்தால், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் இதனால், முன்னாடி இருந்த வீரியம் குறைய ஆரம்பிக்குமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது.
சுகர் அதிகமாகும் போது, நிறைய பேருக்கு நரம்பு தொடர்பான பிரச்னை வருகிறது. சர்க்கரை நோயால் விரைப்புத் தன்மை குறைவு பிரச்னை இருக்கிறது, விரைப்புத் தன்மை பிரச்னை இருப்பதாக நினைத்தால், அதற்கு காரணம் சர்க்கரை நோய் வந்ததால், உடலில் இருக்கக்கூடிய நரம்புகள் பாதிக்கப்படுகிறது. அதனால், கால் பாதத்தில் எரிச்சல், கை, கால்கள் மரத்துப்போதல் ஏற்படும். நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்போது ஆண் உறுப்புக்கு போகக்கூடிய நரம்புகளிலும் பாதிப்பு ஏற்படும். இந்த அதிகப்படியான சர்க்கரை நோய், ஆண் உறுப்புக்கு போகக்கூடிய நரம்புகளிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால், ஆண்களுக்கு சர்க்கரை நோய் வந்த பிறகு, ஆண் உறுப்பு விரைப்பு பிரச்னை ஏற்படுகிறது. ஆனால், சிலர் விரைப்பு பிரச்னை இருக்கிறது என்று சிகிச்சை எடுக்கத் தொடங்குகிறார்கள். அப்படி செய்யாமல், சர்க்கரை அளவைக் குறைக்கும்போது, இந்த விரைப்புத்தன்மை பிரச்னை சரியாகத் தொடங்கும்.
இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது வயது, குறிப்பாக 45 வயது வரை சர்க்கரை அளவு குறைய குறைய ஆண்மைக் குறைப்பாடு பிரச்னை நீங்க ஆரம்பிக்கும். முதல் குழந்தை பிறந்த பிறகு, இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும்போது, சர்க்கரை நோய் வந்ததால் விரைப்புத் தன்மை பிரச்னை வந்துவிட்டது என்று உணர்ந்தால், அந்த வயதில் இருக்கக்கூடியவர்களுகு சர்க்கரை நோயைக் குறைக்கும்போது, விரைப்புத் தன்மை பிரச்னை சரியாகிவிடும்.
ரத்தம் அழுத்தம் இருப்பவர்களுக்கும் விரைப்புத் தன்மை பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டரால் அளவு அதிகமாகும்போது, 200-க்கு மேல் ட்ரைகிலிசஸ் அளவு அதிகமாக இருக்கிறது என்றால், எல்.டி.எல் அளவு அதிகமாக இருக்கிறது என்றால் நிச்சயமாக அவர்களுக்கு விரைப்புத் தன்மை பிரச்னை ஏற்படும்.
ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை என்பது உடலில் ஹார்மோன் தூண்டுதல்தான். உடலில் ஹார்மோன் அளவு அதிகமாகும்போது, குறிப்பிட்ட அளவுக்கான ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது, நமக்கு நரம்புகளும் தசைகளும் ஒத்துழைக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும்போது தசைகளுடைய ஒத்துழைப்பு குறைகிறது. அதனால்தான், விரைப்புத் தன்மை பிரசனை நிறைய பேருக்கு வருகிறது. சில ஆண்கள் சொல்லக்கூடிய பிரச்னை என்னவென்றால், சில ஆண்களுக்கு ஆண் உறுப்பின் அளவே குறைந்த மாதிரி இருக்கிறது. குழந்தைகள் மாதிரி சின்னதாக இருக்கிறது. இதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை அளவுதான் காரணம். அதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக்க்கொண்டே வந்தால், ஆண்மைக் குறைப்பாடு என்ற பிரச்னை சரியாகும்.
விரைப்புத் தன்மை பிரச்னையுடன் நிறைய பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. உயிர் அணுக்களின் கட்டமைப்பு மாறுபடும்போது நிறைய பிரச்னைகள் ஏற்படலாம். அதனால், இதைத் தொடர்ந்து, எந்த மாதிரியான சிகிச்சைகள் அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
அதே போல, உடல் பருமன் அதிகம் இருந்தால் வயதுக்கு ஏற்றாற்போல, உயரத்துக்கு ஏற்றார்போல உடல் எடை இருக்க வேண்டும். உடல் எடையைக் குறைத்தால், மருந்துகளும் எடுக்கும்போது, ஆண்மைக் குறைப்பாடு என்ற பிரச்னையும் கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யப்படும்.
இதை புரிந்துகொண்டால் மன உளைச்சல் இல்லாமல் மூலிகை மருந்து மூலம் இந்த ஆண்மைக் குறைப்பாடு பிரச்னையை சரிசெய்யலாம். அதற்கு நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் குறைக்கக்கூடிய உணவுகளை எடுத்து, சமநிலைப் படுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு முன்னேற்றம் தெரியும்.
இதனுடன் சித்த மருந்துகள் சேர்த்து சாப்பிடும்போது நமக்கு நல்ல முன்னேற்றம் தெரியத் தொடங்கும். உணவுமுறை என்று பார்த்தால் நார்ச்சத்து ரொம்ப ரொம்ப முக்கியம். நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். கீரைகள் என்றால், முருங்கை கீரை, கல்யாணை முருங்கைக் கீரை, தவசி கீரை இந்த 3 கீரைகளும் ரொம்ப ரொம்ப முக்கியம். கல்யாண முருங்கை இலை கடைகளில் பொடியாகக் கூட இருக்கிறது. அதை வாங்கி நாம் பயன்படுத்தலாம். ஆண்கள் தினம் 5 கிராம் இந்த கல்யாண முருங்கைப் பொடியை எடுத்து சூப் மாதிரி நன்றாக கொதிக்க வைத்தும் குடிக்கலாம். முருங்கைப் பொடியோ அல்லது கல்யாண முருங்கைப் பொடியோ நாம் சாப்பிட்டு வரலாம். கல்யாண முருங்கைப் பொடியை தண்ணீரில் கொதிக்கவைத்து சாப்பிட்டு வந்தாலே ஆண்களுக்கு ஒரு நல்ல பலன் கொடுக்கும். இதில் இருக்கக்கூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நம் உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை மட்டுமல்ல, சர்க்கரையின் அளவைக் குறைப்பதில் கல்யாண முருங்கை ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது. அதே போல, ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ஆணுறுப்பு விரைப்புத் தன்மை பிரச்னையை சரி செய்ய பயனபடுத்தலாம்.
இதனுடன் சேர்த்து, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி ரொம்ப முக்கியம். சர்க்கரையைக் குறைப்பதற்கு, ஆண்மைப் பிரச்னையைச் சரி செய்வதற்கு ஜாதிக்காய் மூலிகை ரொம்ப முக்கியம். ஜாதிக்காய் பொடியுடன் ஜாதிப்பத்திரி பொடியும் தேவைப்படும். இது இரண்டுமே சேர்ந்து ஒரு கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இரண்டையுமே சேர்த்து ஒரு 3 சிட்டிகை அளவு எடுத்து, நெய் விட்டு கலந்து தினமும் இரவில் மட்டும் சாப்பிட்டு வரவேண்டும் தொடர்ந்து இதை சாப்பிடும்போது, உடலில் நரம்புகள் வலுவடைய உறுதுணையாக இருக்கும்.
அதே போல, ஜாதிக்காய் லேகியம் பயன்படுத்தலாம். அதே போல, பூனைக்காலி மூலிகையை வைத்து செய்யக்கூடிய மருந்துகள், இது கல்ப சஞ்சீவி சூரணம் என்ற பெயரிலும் கிடைக்கும். அல்லது பூனைக்காலி சூரணம் என்று கேட்டாலும் கிடைக்கும். நரம்புத் தொடர்பான பிரச்னைகள், கை, கால் நடுக்கம் இருந்தால் அதை சரி செய்வதற்கு பூனைக்காலி மிகச் சிறந்த மருந்து. இந்த பூனைக்காலி மருந்தை வாங்கி வந்து நெய் விட்டு வறுத்துவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக 10 கிராம் அளவுக்கு உருட்டி வைத்துக்கொண்டு தினமும் 2 உருண்டை சாப்பிடலாம். இது ஆண்மைக் குறைபாடு பிரச்னைக்கு சரியான ஒரு தீர்வாக இருக்கும்.
அப்படி இல்லை என்றால், வெறும் பூனைக்காலி மருந்த் 5 கிராம் மட்டும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும், சர்க்கரை அளவு குறைவதுடன் ஆண்மைக் குறைபாடு பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். ஒவ்வொருத்தருக்கும் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது, எச்பிஏ1சி அளவு எவ்வளவு இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல, மருந்துகளை மாற்றி எடுக்கும்போது, நிச்சயமாக ஒரு பலன் கிடைக்கும். அதனால், நிறைய மன உளைச்சலில் இருந்தால், அதை சரி செய்ய நமக்கு நிறைய சித்த மருந்துகள் இருக்கிறது. நிச்சயமாக பலன் கிடைக்கும்” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.