கால்சியம் சத்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள் வேண்டாம், இந்த கீரையை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கால்சியம் நிறைய கிடைக்கும் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார்.
உடலுடைய இயக்கத்திற்கு கால்சியம் ரொம்ப முக்கியம், குறிப்பாக நம்முடைய எலும்புகள், பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் முக்கியம் தசைகள் வலிமையாக இருக்க வேண்டும் என்றாலும் கால்சியம் நம்முடைய உடலுக்கு ரொம்ப முக்கியம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
கால்சியம் சத்து என்றாலே பலருக்கும் பால்தான் நினைவுக்கு வரும். ஆனால், சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும், சிலருக்கு பால் பிடிக்காது. மாநகரங்களில் வசிக்கும் சிலருக்கு கிராமத்தில் கிடைக்கக்கூடிய பசும்பால் போல, இந்த பாக்கெட் பால் இருப்பதில்லை, அதனால், பால் பிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில், உடலில் கால்சியம் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் அதற்கு வேறு ஏதாவது, கால்சியம் நிறைந்த உணவு இருக்கிறதா என்று கேட்டால் அவர்களுக்கு டாக்டர் நித்யா கால்சியம் நிறைந்த உணவுகளாக கீரைகளைப் பரிந்துரைக்கிறார்.
கால்சியம் நிறைந்த உணவுகள் குறித்து மிஸ்டர் லேடீஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறுகையில், கால்சியம் பற்றாக்குறை இல்லாமல் இருக்க, பால் மட்டுமில்லாமல் என்ன உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பவர்களுக்கு முதலில் கீரை வகைகளை பரிந்துரைக்கிறார். எல்லா கீரை வகைகளிலும் கால்சியம் நிறைந்துள்ளது என்று கூறும் டாக்டர் நித்யா, குறிப்பாக முருங்கை கீரையில் கால்சியம் நிறைய இருக்கிறது. கால்சியம் மட்டுமில்லாமல் இரும்புச் சத்தும் நிறைய இருக்கிறது, அதனால், அனைவரும் தினமும் கொஞ்சம் முருங்கை கீரை சாப்பிடலாம் என்று கூறுகிறார்.
முருங்கை கீரை சாப்பிட முடியாதவர்கள், முருங்கை கீரை கிடைக்கும்போது, அதை காயவைத்து பொடி செய்து வைத்துகொண்டு 1 டீஸ்பூன் முருங்கை கீரை பொடி போட்டு, சீரகம், சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம் போட்டு சூப் செய்து குடிக்கலாம். இதன் மூலமும் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
அதே போல, கால்சியம் சத்து, பிரண்டை, கருப்பு எள், பாலக்கீரை, வெந்தயக் கீரை, வேக்கடலை, கொண்டைக் கடலை, சோயா, மீன், இறைச்சி ஆகியவற்றிலும் கால்சியம் சத்து உள்ளது. இந்த உணவுகளையும் கால்சியத்திற்காக சாப்பிடலாம் என்று டாக்டர் நித்யா பரிந்துரைக்கிறார்.
கால்சியம் சத்து தேவைப்படுபவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, முழுமையாக உடல் கால்சியத்தை எடுத்துக்கொள்வது கிடையாது. அதனால், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, உடல் கால்சியத்தை எடுத்துக்கொள்கிறது என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.