ரத்தக்குழாயில் கொழுப்பு மற்றும் மற்ற பொருட்கள் படிந்து மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் 5 காய்கறிகளை டாக்டர் பிள்ளை கூறியுள்ளார். மேலும், தக்காளியில் இந்தச் சத்து உள்ளது, இது மாரடைப்பைத் தடுக்கும் என்று கூறியுள்ளார்.
மாரடைப்பு என்பது மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் கவலைக்குரிய விஷயமாகி உள்ளது. அதனால், பலரும் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், டாக்டர் பிள்ளை தனது யூடியூப் சேனலில் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் 5 காய்கறிகளைக் கூறியுள்ளார். ரத்தக்குழாயில் கொழுப்பு மற்றும் மற்ற பொருட்கள் படிந்து அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்பு வருவதற்கு முன், ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்வதற்கான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை தக்காளி, பீட்ரூட், வெங்காயம், கேரட், கீரைகள் ஆகிய 5 காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரி செய்யலாம்
தக்காளியில் ஐசோபின் என்கிற ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைய உள்ளது. இது ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் சரி செய்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் தக்காளியை சமயலில் தொடர்ந்து பயன்படுத்துங்கள், அடைப்பு இல்லாமல் வாழுங்கள் என்று டாக்டர் பிள்ளை கூறியுள்ளார்.
மேலும், பீட்ரூட், வெங்காயம், கேரட், கீரைகள் ஆகியவற்றையும் சாப்பிட்டு வாருங்கள், ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லாமல் வாழுங்கள் என்று டாக்டர் பிள்ளை கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“