ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபினை அதிகரிக்கும்… இந்தப் பொடியை தேன் சேர்த்து சாப்பிடுங்க; டாக்டர் பொற்கொடி
இந்த ஒரே ஒரு பொடி போதும் உங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவை எளிதாக அதிகரித்துவிடலாம் என்று கூறும் டாக்டர் பொற்கொடி, இந்தப் பொடியை தேன் சேர்த்து சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்.
இந்த ஒரே ஒரு பொடி போதும் உங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவை எளிதாக அதிகரித்துவிடலாம் என்று கூறும் டாக்டர் பொற்கொடி, இந்தப் பொடியை தேன் சேர்த்து சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்.
டாக்டர் பொற்கொடி ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்த ஒரே ஒரு பொடி போதும் உங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவை எளிதாக அதிகரித்துவிடலாம் என்று கூறும் டாக்டர் பொற்கொடி, இந்தப் பொடியை தேன் சேர்த்து சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அதே நேரத்தில், யாரெல்லாம் இந்தப் பொடியை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் டாக்டர் பொற்கொடி எச்சரித்துள்ளார்.
Advertisment
டாக்டர் பொற்கொடி ரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் தனது யூடியூப் சேனலில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், இந்தப் பொடியை தேன் சேர்த்து சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அது என்ன பொடி, எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
டாக்டர் பொற்கொடி கூறுகிறார்: “இந்த ஒரே ஒரு பொடி போதும் உங்கள் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை எளிதாக அதிகரித்துவிடலாம். நிறைய பேர் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள், HP அளவை அதிகரிப்பதற்கு அசைவ உணவைத்தான் பரி்ந்துரைக்கிறீர்கள். ஆனால், சைவம் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள்.
Advertisment
Advertisements
இந்தப் பொடியை எடுத்துக்கொள்வதால், ரத்தத்தின் சிவப்பு அணுக்களை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவை ஈஸியாக அதிகரித்துவிடலாம். இந்தப் பொடியில் இருக்கிற பயோ ஆக்டிவ் மூலக்கூறு, செரிமானத்தை அதிகரித்து மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கக்கூடிய இரும்புச்சத்தை ஈஸியாக உறிஞ்சுவதற்கு உதவி செய்யும். இந்தப் பொடிக்கு இயற்கையாகவே ரத்தத்தை சுத்தம் பண்ணுகிற தன்மை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், HP அளவு கம்மியாக இருக்கும்போது, தலைசுற்றல், உடல் சோர்வு இருக்கும். அதை இது சரி செய்யும். அது என்ன பொடி என்று கேட்டீர்கள் என்றால், தும்பைச் செடியை வேரோடு எடுத்து, காய வைத்து, பொடி பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். அந்தபொடியை 5 கிராம் அல்லது 1 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிடலாம். இல்லையென்றால், ஒரு டம்ப்ளர் பெரிய நெல்லிக்காய் சாறு எடுத்து, இந்த பொடியைக் கலந்து, கொஞ்சமாக பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
இந்த பொடியை காலையில் வெறும் வயிற்றிலும் எடுத்துக்கொள்ளலாம். இல்லை சாப்பிட்ட பிறகும் எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்றாக உயர்வதை நீங்கள் பார்க்கலாம்.
யாரெல்லாம் இந்த பொடியை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தும்பை தாவர ஒவ்வாமை உள்ளவர்கள், ரத்த மெலிவு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இந்தப் பொடியை எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று டாக்டர் பொற்கொடி கூறியுள்ளார்.