வாய் துர்நாற்றமா? நம்ம தாத்தா, பாட்டி யூஸ் பண்ண இந்த ஒரு இலை போதும்! டாக்டர் பொற்கொடி
வாய் துர்நாற்றம் இருக்கிறதா, அப்படியென்றால் நம்ம தாத்தா, பாட்டி பயன்படுத்திய இந்த ஒரு இலை போதும் சரியாகிவிடும் என்று டாக்டர் பொற்கொடி பரிந்துரைக்கிறார். அது என்ன இலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

டாக்டர் பொற்கொடி, வாய் துர்நாற்றம் போக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார். Image source: YouTube / @drporkodihari and freepik
வாய் துர்நாற்றம் இருக்கிறதா, அப்படியென்றால் நம்ம தாத்தா, பாட்டி பயன்படுத்திய இந்த ஒரு இலை போதும் சரியாகிவிடும் என்று டாக்டர் பொற்கொடி பரிந்துரைக்கிறார். அது என்ன இலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
Advertisment
ஆரோக்கிய மருத்துவ ஆலோசனைகளை தனது யூடியூப் சேனலில் (drporkodihari) கூறும் டாக்டர் பொற்கொடி, வாய் துர்நாற்றம் போக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்.
டாக்டர் பொற்கொடி கூறுகையில், “இந்த ஒரு இலையை சாப்பிட்டுதான் அந்த காலத்தில் நம்ம தாத்தா, பாட்டிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். அது வேறு ஒன்னும் இல்லை, வெற்றிலைதான். நாம் தினமும் ஒரு வெற்றிலையை எடுத்துக்கொள்ளும்போது, நம் உடலில் இருக்கிற வாதம், பித்தம், கபம் என்கிற முத்தோடங்களும் சமநிலை பெறும்.
Advertisment
Advertisements
அதுமட்டுமில்லாமல், செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலை பிரச்னையை சரி செய்யும். ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்கும். இதில் ஆண்ட்டி பாக்டீரியா, ஆண்ட்டி ஃபங்கல், ஆண்ட்டி மைக்ரோபியல் கூறுகள் இருக்கிறது. அதனால், வாயில் வரும் துர்நாற்றத்தை சரி செய்யும். பல் நன்றாக உறுதியாகும்.
வெற்றிலையில் கால்சியம் சத்து அதிகம், அதனால், மூட்டு வலியைக் குறைக்கும். ஆர்த்ரிட்டிஸ், ஆஸ்டியோபொரோசிஸ் வெற்றிலையை எடுத்துக்கொண்டால் நன்றாக உதவும். வெற்றிலையை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டால், இப்போது நான் சொன்ன பலன்கள் கிடைக்கும். தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுங்கள்.” என்று டாக்டர் பொற்கொடி ஆலோசனை கூறுகிறார்.