இஞ்சி துண்டுகளை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிடும் முறை குறித்த தேரையர் சித்தர் கூறிய ரகசியத்தை டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
Advertisment
காயகற்ப மூலிகைகள் குறித்து காஸ்மோ ஹெல்த் யூடியூப் சேனலில் டாக்டர் ராஜலட்சுமி விளக்கியுள்ளார். அதில், இஞ்சி துண்டுகளை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட்டால் உடல் பொலிவு பெறும் என்று தேரையர் சித்தர் கூறிய வழியைக் கூறியுள்ளார்.
காயகற்ப மூலிகைகள் குறித்து டாக்டர் ராஜலட்சுமி கூறியிருப்பதாவது: “சித்த மருத்துவத்தில் காயகற்ப மூலிகைகள் என்னென்ன இருக்கிறது அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பார்ப்போம். காயகற்பம் என்பது காயம் என்றால் உடல், உடலை கல்போல தேஜஸாக வைத்திருப்பது எப்படி என்பதுதான்.
Advertisment
Advertisements
இன்றைய நவீன அறிவியல் முறையில் ஆண்டி ஆக்ஸிடண்ட் பிராப்பர்ட்டி என்று கூறக்கூடியதை நம்முடைய சித்தர்கள் முன்னாடியே காயகற்ப மூலிகைகள் என்று கூறியுள்ளனர்.
இந்த காய கற்ப மூலிகைகளை எடுத்துக்கொள்ளும்போது, காரம், புளி தவிர்க்க வேண்டும். உப்பு கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம் அதனால், பிரச்னை இல்லை.
அதே நேரத்தில், காயகற்ப மூலிகைகள் எடுத்துக்கொள்ளும்போது, சில மருத்துகளை சேர்க்க வேண்டியிருந்தால் கூறுகிறேன். காயகற்ப மூலிகைகளை 48 நாள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
காயகற்ப மூலிகைகளில் முதலில் நாம் தேரையர் சித்தர் கூறியுள்ள இஞ்சித் தேன் எடுத்துக்கொள்வதைப் பற்றி பார்ப்போம். இந்த இஞ்சித் தேன் எடுத்துக்கொள்வதால் பிரதமை போன்று, நிலவு போல உடல் பொலிவுடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
காயகற்ப மூலிகைகளை எடுத்துக்கொள்ளும்போது, இச்சா பத்தியம் என்று சொல்லக்கூடிய உடலுறவு தவிர்க்க வேண்டும்.
இஞ்சியைத் தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதைத் தேனில் ஊற வைக்க வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த ஒரு இஞ்சித் துண்டு சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, நரைமுடி இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இவர்களுக்கு எல்லாமே நல்ல பலனைத் தரும்.
இந்த காய கற்ப மூலிகைகளை எடுத்துக்கொள்ளும்போது, காரம், புளி தவிர்க்க வேண்டும். உப்பு கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த இஞ்சி தேன் முறை தேரையர் சித்தரால் கூறப்பட்டுள்ளது. இப்படி, காயகற்ப மூலிகைகள் சித்தர்கள் கூறியபடி 108 மூலிகைகள் இருக்கிறது” என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.