நெஞ்சு சளியை இளக்கி வெளியே கொண்டு வர இதுதான் பெஸ்ட்; சுக்கை விட 10 மடங்கு பவர்: டாக்டர் சாலை ஜெய கல்பனா
நெஞ்சு சளியை இளக்கி வெளியே கொண்டு வர இதுதான் சிறந்த மருந்து, குழந்தைகளுக்கு இதை உணவில் சேர்த்தே கொடுக்கலாம். இது சுக்கை விட 10 மடங்கு பவர் என்று டாக்டர் சாலை ஜெய கல்பனா பரிந்துரைக்கிறார். அது என்ன என்று இங்கே பார்ப்போம்.

Advertisment
குழந்தைகளுக்கான உடல் நல ஆலோசனைகளை ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் நடிகர் ராஜேஷ் உடன் டாக்டர் சாலை ஜெய கல்பனா வழங்குகிறார்.
குழந்தைகளுக்கு சளி, நெஞ்சு சளி இருக்கிறது என்றல் அதை எப்படி வெளியேற்றுவது, குழந்தைகளுக்கு சளி பிரச்னையை எப்படி சரி செய்வது என்ற கேள்விக்கு, டாக்டர் சாலை ஜெய கல்பனா கூறுகையில், குழந்தையை வளக்கக்கூடிய ஒரு அற்புதமான உணவு நெய். குழந்தைகளூக்கு கண்டங்கத்திரி நெய் கொடுத்தால் நெஞ்சு சளி, கபத்தை இளக்கி வெளியேற்றும் என்று கூறுகிறார்.
Advertisment
Advertisements
கண்டங்கத்திரி பொடி, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. கண்டங்கத்திரி பொடியை குறைவாக வாங்கிக்கொண்டு 500 மி.லி தண்ணீரில் 5 கிராம் கண்டங்கத்திரி பொடிபோட்டு, 100 மி.லி ஆகும் வரை கொதிக்க வைத்து சுண்ட வைக்க வேண்டும். இந்த கண்டங்கத்திரி கசாயத்துடன் 100 மி.லி நெய் சேர்த்து, எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கண்டங்கத்திரி நெய்யை தனியாக இல்லாமல் உணவுடன் சேர்த்து கொடுத்தால், குழந்தைகளுக்கு தொண்டையில், நெஞ்சில் இருக்ககூடிய எவ்வளவு பெரிய கபமும் முழுவதுமாக வெளியேறும். இதை உணவாகவே தினமும் சேர்த்துக்கொள்ளலாம்” என்று டாக்டர் சாலை ஜெய கல்பனா ஆலோசனை கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.