இதுக்கு பெயர் 'கடல் அமிர்தம்'... 80 வகையான ஊட்டச்சத்து இருக்கு: சொல்லும் டாக்டர் செல்வ சண்முகம்
நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் டேபிள் சால்ட் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் இந்த கடல் அமிர்த்தத்தைப் பயன்படுத்துங்கள். இந்த கடல் அமிர்தத்தில் 80 வகையான ஊட்டச் சத்து இருக்கிறது என்று டாக்டர் செல்வ சண்முகம் கூறுகிறார். அது என்ன கடல் அமிர்தம் என்று பார்ப்போம்.

கடல் உப்பின் நன்மைகள் குறித்து டாக்டர் செல்வ சண்முகம் ஆலோசனை வழங்குகிறார்.
நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் டேபிள் சால்ட் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் இந்த கடல் அமிர்த்தத்தைப் பயன்படுத்துங்கள். இந்த கடல் அமிர்தத்தில் 80 வகையான ஊட்டச் சத்து இருக்கிறது என்று டாக்டர் செல்வ சண்முகம் கூறுகிறார். அது என்ன கடல் அமிர்தம் என்று பார்ப்போம்.
Advertisment
கடல் உப்பின் நன்மைகள் குறித்து டாக்டர் விகடன் (@DoctorVikatan) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் செல்வ சண்முகம் ஆலோசனை வழங்குகிறார்.
டாக்டர் செல்வ சண்முகம் கூறுகிறார்: “உப்பு என்கிறபோது டேபிள் சால்ட் என்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கல் உப்பு பயன்படுத்த வேண்டும், அதற்கு பெயர் கடல் உப்பு அல்லது கடல் அமிர்தம் என்று பெயர். இந்த கடல் அமிர்தத்தில் பார்த்தீர்கள் என்றால், உடலுக்கு தேவையான குறைந்தபட்சம் 80 வகையான ட்ரேஸ், எலெமென்ட்ஸ், மினரல்ஸ் என சத்துக்கள் இருக்கிறது. கடல் அமிர்தம், கடல் உப்பு என்று நான் சொல்வது கல் உப்புதான். இது சுத்திகரிக்கப்படாத கல் உப்பு. அதாவது, கடல் உப்பை ரீஃபைனெட் பண்ணுவதற்கு முன்பான உப்பு. ரா சால்ட்.
Advertisment
Advertisements
அதே போல, ராக் சால்ட் என்கிற மலை உப்பும் நல்லதுதான். இந்த மலை உப்பபை இந்துப்பு என்றும் சொல்வார்கள். இமாலயன் உப்பு என்றும் சொல்வார்கள். இந்துப்பு லேசாக ரோஸ் கலரில் இருக்கும். இது நமக்கு ஒரிஜினலா, அதனுடைய உண்மையான தன்மையுடன் கிடைத்தது என்றால், அதை பயன்படுத்திக்க்கொள்ளலாம்.
இந்த ராவான கல் உப்பு, இந்துப்பு ஆகிய இரண்டையும்தான் நாம் உப்புக்காக பயன்படுத்த வேண்டும். டேபிள் சால்ட்டை தவிர்க்க வேண்டும்.
அதே போல, காரச் சுவைக்கு மிளாகாயின் அளவை குறைத்துக்கொண்டு மிளகு, இஞ்சி, பூண்டு இதை அதிகப்படுத்திக் கொண்டு காரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு சுவையையும் அளவோடு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இங்கே சொல்லியிருக்கிறேன்” என்று டாக்டர் செல்வ சண்முகம் ஆலோசனை கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.