இந்தக் கீரை வாங்கி வீட்டில் வைத்துக்க்கொள்ளுங்கள், இதனுடன் கொஞ்சம் நெய் சேர்த்து 48 நாள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும் என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார். அது என்ன கீரை என்று இங்கே பார்ப்போம்.
டாக்டர் ஷர்மிகா DAISY HOSPITAL என்ற யூடியூப் சேனலில் பொன்னாங்கண்ணி கீரையின் பலன்களைக் கூறியுள்ளார். இந்த பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆண்மைக் குறைபாட்டை சரி செய்யும் என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.
அதே போல, பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முகப்பொலிவைக் கொடுக்கும் தோல் பளபளப்பை அளிக்கும். பித்தப்பை கல் இருந்தால் அதைக் கரைப்பதற்கு பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டால் உதவும் என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.
ரொம்ப முக்கியமாக, பொன்னாங்கணி கீரை சாப்பிட்டால், கண் பார்வைக்கு ரொம்ப நல்லது. கண் எரிச்சல், கண்களில் அரிப்பு இருக்கிறது, நீண்ட நேரம் கணினி திரையைப் பார்ப்பதால், கண்கள் ட்ரை ஆகிவிடுகிறது என்ற பிரச்னை இருந்தால், சைனசைட்டிஸ் இருக்கிறவர்களுக்கும், வறட்டு இருமல் இருப்பவர்களுக்கும் சரியாகும், அதே நேரத்தில் இந்த பொன்னாங்கண்ணி கீரை மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இப்படி, பொன்னாங்கண்ணி கீரை ஒரு அருமருந்தாக செயல்படுகிறது என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.
மேலும், இந்த பொன்னாங்கண்ணி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, அரை டீஸ்பூன் பொன்னாங்கண்ணி கீரை பவுடர், கொஞ்சூண்டு உருக்குன நெய், கொஞ்சம் மிளகு இதை மூன்றையும் குழைத்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால், உடலுக்கு அழகும் பொலிவும் பளபளப்பு வரும் என்று சொல்கிறார்கள். நானும் சாப்பிடப் போகிறேன். நீங்களும் சாப்பிடுங்கள் என்று டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.