ஏ.பி.சி ஜூஸ் அதாவது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ்தான் லிவருக்கும் ஸ்கின்னுக்கும் பிடிச்ச ஜூஸ் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை கூறுகிறார்.
Advertisment
ஏ.பி.சி ஜூஸ் குறித்த ஆரோக்கிய நன்மைகள் குறித்து டெய்ஸி ஹாஸ்பிட்டல் சென்னை என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.
ஏ.பி.சி ஜூஸ் எப்படி தயார் செய்து குடிக்க வேண்டு என்று டாக்டர் ஷர்மிகா யிருப்பதாவது: “ஆப்பிள், பீட்ரூட், கேரட் சேலஞ்ச் ஆரம்பித்துவிட்டது. என்னுடைய அளவு 1 ஆப்பிள், 2 கேரட், 1 பீட்ரூட். சுவை செம்மையா இருக்கும். ஒருவேளை, உங்களுக்கும் சளி பிடிக்கும் என்றால் இஞ்சி தட்டி சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவற்றை கட் பண்ணி அரைக்கும்போது நிறைய தண்ணீர் ஊற்றி அரையுங்கள், அப்போதுதான் அதிக அளவு ஜூஸ் வரும். வீசிங், ஆஸ்துமா இருப்பவர்கள் ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்காமல் ஜூஸ் போட்டு குடியுங்கள்.
Advertisment
Advertisements
உங்களுக்கு ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் குடித்து போரடித்தால், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, நெல்லிக்காய் என்று கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள், கேரட், பீட்ரூட் கட் பண்ணி மிக்சியில் போட்டு நிறைய தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதை சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி பிடிந்துகொள்ளுங்கள்.
அரைக்கும்போது, ஆப்பிள் தனியாக அரைத்துக்கொள்ளூங்கள். கேரட், பீட்ரூட் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் உங்களுடைய லிவருக்கும் ஸ்கின்னுக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த ஜூஸ் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார். அதாவது, இந்த ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் கல்லீரல், தோல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.