விட்டமின் மாத்திரை வேண்டாம் மக்களே... இதை ரெகுலரா சாப்பிடுங்க: டாக்டர் ஷர்மிகா
விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு, மினரல்ஸ் குறைபாடு என எல்லாவற்றுக்கும் இயற்கையான முறையில் உணவுகளின் மூலம் அதை சரி செய்யலாம் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்குகிறார்.
விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு, மினரல்ஸ் குறைபாடு என எல்லாவற்றுக்கும் இயற்கையான முறையில் உணவுகளின் மூலம் அதை சரி செய்யலாம் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்குகிறார்.
விட்டமின் மாத்திரைகளுக்கு பதிலாக இயற்கையான முறையிலேயே உணவுகள் மூலம் நமது உடலுக்கு தேவையான விட்டமின்களை, மினரல்ஸ்களை எடுத்துக்கொண்டு சரி செய்ய முடியும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனைகளை வழங்கி பேசியுள்ளார்.
உடலில் விட்டமின் குறைபாடா விட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வது, கால்சியம் குறைபாடா கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்வது, இப்படி எல்லாவற்றுக்கும் மாத்திரை, மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. விட்டமின் குறைபாடு, கால்சியம் குறைபாடு, மினரல்ஸ் குறைபாடு என எல்லாவற்றுக்கும் இயற்கையான முறையில் உணவுகளின் மூலம் அதை சரி செய்யலாம் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை வழங்குகிறார்.
Advertisment
விட்டமின் மாத்திரைகளுக்கு பதிலாக இயற்கையான முறையிலேயே உணவுகள் மூலம் நமது உடலுக்கு தேவையான விட்டமின்களை, மினரல்ஸ்களை எடுத்துக்கொண்டு சரி செய்ய முடியும் என்று டெய்ஸி ஹாஸ்பிட்டல் (@daisyhospital_chennai) சென்னை என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ஷர்மிகா ஆலோசனைகளை வழங்கி பேசியுள்ளார்.
டாக்டர் ஷர்மிகா கூறியிருப்பதாவது: “நவீன காலத்தில் நாம் எல்லாவற்றுக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறோம், கால்சியம் குறைபாடு, விட்டமின் டி குறைபாடுக்கு, விட்டமின் பி12 குறைபாடுக்கு, சோடியம் குறைபாடுக்கு, பொட்டாசியம் குறைபாடுக்கு எல்லாவற்றுக்குமே நாம் குட்டிகுட்டியாக மாத்திரைகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்.
Advertisment
Advertisements
அதே மாதிரி, எனர்ஜி டிரிங்ஸ், புரோட்டீன் ஷேக்ஸ், விட்டமின்ஸ் டிரிங்ஸ் என்று எடுத்துக்கொள்கிறார். இந்த பானங்களை நம்முடைய தோள்ப் பையில் வைத்து எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறோம். இவை குடிப்பதற்கு எளிதாக இருக்கிறது. அந்த பொடியை பாலில் போட்டு கலக்கி குடித்துவிட்டு கிளம்பிவிடுகிறோம். அதில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களைப் பார்ப்பதற்குகூட நமக்கு நேரம் இல்லை. அதுமட்டுமில்லாமல், இந்த பானங்கள் ரொம்ப ரொம்ப நல்லது என்று 4 பேருக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இதற்கு மாற்றாக உங்களுக்கு இயற்கையான விட்டமின்கள், இயற்கையான மினரல்கள், இயற்கையான நியூட்ரியன்ஸ்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நான் உங்களுக்கு ஒருசில உணவு தயாரிப்புகளை சொல்கிறேன்.
தேன் தினமும் குடியுங்கள். ஹனி ஆம்லா என்கிற தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுங்கள், நெய்யை உருக்கிக் குடியுங்கள். கீரை வகைகளை நிறைய எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டிலேயே தயார் செய்த சத்து மாவு எடுத்துக்கொள்ளுங்கள். புரோட்டீன் ஷேக்ஸ் எல்லாம் தினமும் ஒரு பிரஷ் ஜூஸ் ஐஸ், சுகர் இல்லாமல் குடியுங்கள். சோற்றுக்கற்றாழை ஜூஸ், வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் பழங்கள் நிறைய எடுத்துக்கொள்ளுங்கள். நட்ஸ் வகைகளில் பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி ஆகிய பருப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். அசைவ உணவு எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் உங்களுடைய உணவில் முட்டையும் பாலும் சேர்த்துக்கொள்வது நல்லது.” என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.