கொஞ்சம் நெய், மிளகுடன் இந்தக் கீரையை 48 நாள் சாப்பிட்டு வந்தால், உடல் பளபளப்பு, பியூட்டி கிடைக்கும் என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். அது என்ன கீரை என்று இங்கே பார்ப்போம்.
சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்ற அடிப்படையிலானது. சித்த மருத்துவர்கள் பலரும் யூடியூப் சேனல் வழியாக மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் டெய்ஸி ஹாஸ்பிட்டல் என்ற யூடியூப் சேனலலில் , டாக்டர் ஷர்மிகா பல சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கி வருகிறார். அதன்படி, பொன்னாங்கண்ணி கீரையின் மகத்துவத்தைப் பற்றி டாக்டர் ஷர்மிகா கூறியுள்ளார்.
இந்த பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆண்மைக் குறைபாட்டை சரி செய்யும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சருமத்தைப் பளப்பளப்பாக்கும், பியூட்டியைக் கொடுக்கும் என்கிறார்.
அதே போல, பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டால், பித்தப்பை கல் இருந்தால் அதைக் கரைப்பதற்கும் உதவும். பொன்னாங்கண்ணி கீரை கண்பார்வைக்கும் ரொம்ப நல்லது. கண் எரிச்சல் இருக்கிறது, கண்களில் அரிப்பு இருக்கிறது, நீண்ட நேரம் கணிணி திரையைப் பார்ப்பதால், கண் வறண்ட மாதிரி ஆகிறது ஆகிய பிரச்னைகளுக்கும், சைனசைட்டிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கும், வறட்டு இருமல் இருப்பவர்களுக்கும், மலச் சிக்கல் இருப்பவர்களுக்கு இந்த கீரை சாப்பிட்டால் சரி செய்யும் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
இந்த பொன்னாங்கண்ணி கீரை எப்படி சாப்பிடலாம் என்று டாக்டர் ஷர்மிகா சில வழிமுறைகளைக் கூறியுள்ளார். பொன்னாங்கண்ணி கீரையை காய வைத்து அரைத்து செய்த பொடியை அரை டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் உருக்கிய நெய், அதனுடன் கொஞ்சம் மிளகுத் தூள், இவற்றை நன்றாகக் குழைத்து, காலையில் வெறும் வயிற்றில் 48 நாளுக்கு சாப்பிட வேண்டும் என்கிறார். இப்படி சாப்பிட்டால், நம்முடைய உடலுக்கு பளபளப்பும் பியூட்டியும் வரும், நீங்கள் ட்ரைப் பண்ணி பாருங்கள் என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.