அடை தோசை, அவியல், சாலட்... காலை உணவு இப்படி இருந்தா சுகர் ஏறாது: டாக்டர் சிவபிரகாஷ்

ஆரோக்கிமான உணவு இருந்தால் ஆரோக்கியமான உடல் என்று கூறும் டாக்டர் சிவபிரகாஷ், காலை உணவு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dr Sivaprakash healthy diat

அடை தோசை, அவியல், ஃப்ரூட் சாலட், வெஜிடபுள் சாலட் என காலை உணவு இப்படி ஆரோக்கியமான உணவாக இருந்தால், சுகர் ஏறாது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார்.

ஆரோக்கிமான உணவு இருந்தால் ஆரோக்கியமான உடல் என்று கூறும் டாக்டர் சிவபிரகாஷ், காலை உணவு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறியுள்ளார். அடை தோசை, அவியல், ஃப்ரூட் சாலட், வெஜிடபுள் சாலட் என காலை உணவு இப்படி ஆரோக்கியமான உணவாக இருந்தால், சுகர் ஏறாது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார்.

Advertisment

தனது யூடியூப் சேனலில் டாக்டர் சிவப்பிரகாஷ் ஆரோக்கிய உணவு முறை குறித்து தியரிட்டிகலாக மட்டுமில்லாமல், பிராக்டிகலாக எப்படி சாப்பிட வேண்டும் என்பதை கூறியுள்ளார். டாக்டர் பிரகாஷ் கூறியதை இங்கே அப்படியே தருகிறோம், “காலை வேளை உணவு  பற்றி நம்ம ரொம்ப தியரிட்டிக்கலாவே பேசிக்கிட்டு இருக்கோம் இல்லைங்களா, பிராக்டிகலா சில விஷயங்களை காமிக்க வேண்டி இருக்கு. எப்படி பசங்களுக்கு வந்து 10, 12 வகுப்புக்கு பிராக்டிகல் எக்ஸாம் நடக்குதோ, அந்த மாதிரி இன்னைக்கு வந்து ஒரு செய்முறை ஆரோக்கியம் காலை உணவு என்றால் எப்படி இருக்கணும் அப்படின்னு இன்னிக்கு என்னோட காலை பிரேக்ஃபாஸ்ட்டை உங்களுக்கு விளக்க நினைக்கிறேன். முதல்ல வந்து இது சக்கரை உள்ளவங்க சாப்பிடற உணவு அப்படின்னு தயவு செஞ்சு நினைச்சிட வேண்டாம். இது வீட்ல இருக்க எல்லாருமே ஆரோக்கியமா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா சாப்பிடலாம். டயட் அப்படின்னாவே என்ன நினைத்துக்கொள்கிறார்கள் என்றால் யாருக்கோ வியாதி இருக்கவங்க சாப்பிடுவது அப்படின்னு நிறைய பேர் நினைச்சுக்கிறாங்க. இது வந்து முற்றிலும் தவறான ஒரு கருத்து.

டயட் அப்படிங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்னா நாம என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதான் டயட். இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டா பிரியாணி நம்ம டயட், இன்னைக்கு பீட்சா சாப்பிட்டா பீட்சா நம்ம டயட், இன்னைக்கு இட்லி சாப்பிட்டா இட்லி நம்ம டயட். அதுபோல டயட் அப்படிங்குறது ஏதோ வியாதி வந்தவங்க சாப்பிடக்கூடிய ஒரு விஷயம் கிடையாது. இதை முதலில் தெளிவு படுத்துகிறேன்” என்று விளக்குகிறார்.

மேலும், ஆரோக்கிய உணவு குறித்து டாக்டர் சிவபிரகாஷ் கூறுகையில், “இந்த ஆரோக்கிய உணவு அல்லது ஹெல்த்தி டயட் அப்படின்னா எப்படி இருக்கணும் என்றால், அது ஒரு பேலன்ஸ்டு டயட்டா இருக்கணும். அதாவது பேலன்ஸ்டு டயட்னா அதுல புரதச் சத்து இருக்கணும், கொழுப்பு சத்து இருக்கணும், நார்ச்சத்து இருக்கணும், இப்படி எல்லா மினரல்ஸ், வைட்டமின்ஸ் எல்லாம் கலந்த மாதிரி ஒரு உணவாக இருக்கணும், இது இல்லாம நம்ம வெறுமனே வந்து வெறும் இட்லி சாம்பார் சட்னி மட்டுமே சாப்பிட்டு இருக்கறதுனால தான் நமக்கு வந்து வியாதிகள் அதிகமாகும். இன்னைக்கு இதுல என்னென்ன வச்சிருக்கோம் அப்படிங்கிறது முதல் காமிச்சிடறேன்.

Advertisment
Advertisements

நம்ம சாப்பிடக்கூடிய உணவுல அதிகமா இருக்குற பங்கு எதுன்னு பார்த்தீங்கன்னா மாவுச்சத்து. அதனால, இந்த மாவுச்சத்தை குறைக்கணும் அப்படிங்கறது கான்செப்ட். இந்த மாவுச்சத்தை குறைக்கும் போது நமக்கு அதை ரீபிளேஸ் பண்றதுக்காக புரதச் சத்தை சேர்த்து சாப்பிடணும். இன்னைக்கு மெனுல என்ன பண்ணி இருக்கோம் அப்படின்னு கேட்டீங்கன்னா, இந்த மாவுச் சத்தையும் புரத சத்தையும் சேர்த்து ஒரே ஐட்டமா பண்ணியாச்சு. எப்படின்னு கேட்டீங்கன்னா அட தோசை, அடை இட்லி. அட மாவுல பருப்பு போட்டு தானியங்களை ரொம்ப குறைத்து போட்டு பண்ணினால் அட மாவுன்னு சொல்லுவோம். அதுல வந்து தோசை தான் பெரும்பாலும் ஊத்துவாங்க. ஏன்னா இறுகி விடும் அப்படின்னு சொல்லிட்டு தோசை ஊத்துவாங்க. ஆனால், அதுலயே நாம இட்லி செஞ்சிருக்கோம். இந்த இட்லி நீங்க நினைக்கிற மாதிரி இருக்காது. அது சாப்டா இருக்கும், அரிசி மாவு இட்லி மாதிரி சாஃப்டா இருக்காது. அடுத்து, கேரட் ஆனியன்ஸ் எல்லாம் சேர்த்து போட்டுருங்க எதுக்காகன்னா பொதுவா நம்ம வெள்ளை மாவு தோசை மாதிரி அடை தோசை அவ்ளோ சாஃப்ட்டா இருக்காது, கொஞ்சம் ஹார்டா இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. அதுக்காக நம்ம என்ன பண்ணிருக்கோம், அந்த அடை தோசையை சின்னதா போட்டு அதுல ஊத்தப்பம் மாதிரி ஆனியன்ஸ் பிளஸ், கொத்தமல்லி, கேரட் இதெல்லாம் சேர்த்து போட்டு இருக்கிறதுனால இதுல வந்து டேஸ்ட் பண்றது மட்டும் இல்லாம இது வந்து சாஃப்டாவும் இருக்கும். இதனால ரெண்டு விஷயம் பூர்த்தியாகுது. இப்ப நாம்ம கார்போஹைட்ரேட்டும் குறைச்சிட்டோம், அதுக்கு பதிலா புரோட்டீனையும் சேர்த்து சாப்பிடறோம். இதுதான் நமக்கு இன்னைக்கு மேஜர் கார்போஹைட்ரேட்.

அடுத்து நான் காட்ட போற ஐட்டங்கள் ரொம்ப முக்கியம், அடுத்து நம்ம வயிறு நிரம்பியதாக ஃபீல் பண்றதுக்கு நம்ம எடுத்துக்க வேண்டிய உணவு என்ன என சொல்லி இருக்கேன். வைட்டமின் சத்து அதிகமா இருக்கு, தக்காளி அதே போல ஸ்வீட் கான், குக்கும்பர் இதெல்லாம் போட்டு ஒரு வெஜிடபிள் சாலட் பண்ணிருக்காங்க. கேரட் பச்சையாக சாப்பிடுவதால் சுகர் ஏறாது, இதில் நார்ச்சத்து இருக்கிறது. 

அடுத்து, ஃப்ரூட் சாலட், இதுல அன்னாசிப்பழம் கருப்பு திராட்சை பழம் போட்டு ஒரு ஃப்ரூட் சாலட் செஞ்சிருக்காங்க. இது நமக்கு பைபர் பிளஸ் வைட்டமின்ஸ் தருகிறது. அதோடு, சாப்பிட்டதுக்குரிய ஒரு திருப்தி தருகிறது. நல்ல ருசியான ஒரு தேங்காய் சட்னி அதேபோல அதேபோல ஒரு சாம்பார்  உடன் அடை மாவில் செய்த இட்லி, அடை தோசை சாப்பிடலாம். அதாவது, அடை மாவில் செய்த இட்லி 2, அடை தோசை சின்னதா 2, அவியல், கேரட், தக்காளி, குக்கும்பர், ஸ்வீட் கார்ன் வெஜிடபுள் சாலட், ஃப்ரூட் சாலட், இவற்றை சாபிட்டால் திருப்தியான சுவையான ஆரோக்கியமான உணவாக இருக்கும். தற்போது, இந்த மெனு கோவையில் கிடைக்கிறது. ஆன்லைனில் டெலிவரி செய்யப்படுகிறது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார். அவர்களுடைய மருத்துவமனையிலும் இதுபோல, ஆரோக்கிய உணவு கிடைக்கிறது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார்.  

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: