காலை உணவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், சர்க்கரை நோய்யை கட்டுபடுத்தும் முறையை பற்றி மருத்துவர் சிவராமன் பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோவில் இருந்து: ”பல பேர் காலை உணவை சாப்பிடுவதில்லை. சிலர் காலை உணவை அதிகமாக சாப்பிடுகிறார்கள். உதாரணமாக 5 இட்லி, ஒரு வடை சாப்பிடுகிறார்கள். காலை உணவு எல்லாவற்றோடும் வடை சாப்பிடுகிறார்கள். இது நிச்சயம் உடலை பாதிக்கும். வயது 40-தை கடந்தால் நாம் சாப்பிடும் உணவில் கவனம் தேவை. வாரத்தில் ஒரு முறைதான், இட்லி சாப்பிட வேண்டும். சுண்டல் , பழத் துண்டுகள். முளை கட்டிய பயிறு உள்ளிட்டவற்றைதான் அதிகம் சாப்பிட வேண்டும். மசால் தோசையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள். முட்டை சாப்பிடுபவர்களாக இருந்தால், இரண்டு முட்டை, வேர்கடலை அவித்தது. பாதாம் பருப்பு ஆகியவற்றை சாப்பிடுங்கள். புரோட்டின் சத்து குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மருந்து அவர்களுக்கு உதவும். ஆனால் அதுவே சர்க்கரை நோய்யை கட்டுபடுத்தாது. மூலிகை மருந்து அதை செய்யாது. முழுமையாக உணவில் கவனமாக இருப்பவர்கள் மட்டும்தான் சர்க்கரை நோய்யை வெல்ல முடியும். இதை நான் மட்டும் சொல்லவில்லை. பாஸ்டனில் இருக்கும் எம்.ஐ.டி இதைதான் சொல்கிறது. காலையில் ஒரு உணவு மற்றும் மாலையில் ஒரு உணவை நமது சித்தர்கள் சாப்பிட்டு வந்தார்கள். இதுதான் இண்டெர்மீடியேட் பாஸ்டிங் (intermediate fasting time) . முன்பெல்லாம் கல்யாண வீட்டில் மதிய சாப்பாடுதான் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் இரவு உணவு தருகிறார்கள்.
அதில் 4 வகையான ஸ்வீட் இருக்கிறது. பாதிபேர் மதிய உணவை தவிர்த்துவிட்டு இதை சாப்பிடுகிறார்கள். அசைவ உணவு எடுத்துக்கொள்ளலாம். மீன், முட்டை மட்டன், கோழிக்கறி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாதம் குறைவாக இருக்க வேண்டும். மறு சோறு போடாமல் விட்டால் ஏன் கோபித்துகொள்கிறீர்கள். முதலில் பரிமாறப்பட்ட உணவே போதுமானது. அன்னக் கரண்டி பார்த்தால் மண் அள்ளும் எந்திரம் போல் இருக்கிறது. அதனால் அந்த கரண்டி வேண்டாம். ஸ்பூன் பயன்படுத்தி உணவை எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள். மாசித்தையும் சாப்பிடலாம். சாதம் வெள்ளையாக இருக்க கூடாது. மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி, காடைக் கண்ணி , தூய மல்லி, ஆர்காடு கிச்சடியாக இருக்க வேண்டும். தவுடோடு இருக்கும் அரிசியை வைத்து கொள்ளுங்கள். இரவில் எளிய உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். கோதுமை ரவை கிச்சடி, சிறிதானிய உப்புமா, கருவேப்பிலை துவயல் ஆகியவற்றை இரவில் சாப்பிடுங்கள். இரவு உணவை 6.30 மணிக்கு முடித்துக்கொள்பவர்கள் வீட்டில் ஆரோக்கியம் நிறைந்திருக்கும்.
வேலை எப்போது முடிகிறதோ அப்போது முடியட்டும். ஆனால் இரவு உணவை மாலை 6.30 மணிக்கு சாப்பிடுங்கள். ஒரு மரணம் ஒரு குடும்பத்தை எப்படி சிதைக்கும் என்பதை கடந்த 2 ஆண்டுகளாக பார்த்திருக்கிறேன். அதனால் உணவில் கவனமாக இருங்கள்.” என்று பேசியுள்ளார்.