சளியை இளக்கி வெளியேற்றும் ஒரு கீரை; இதில் சட்னி பண்ணுங்க: மருத்துவர் சிவராமன்
"உணவைப் பொறுத்தவரையில், தூதுவளை, மணத்தக்காளிக் கீரையை நாம் சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக, தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை சட்னி, தோசை மாவுடன் தூதுவளை சேர்த்து சாப்பிட்டு வரலாம்." என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
சளியை இளக்கி வெளியேற்றும் கீரை குறித்து கூறியுள்ளார் சித்த மருத்துவர் சிவராமன்.
இந்தக் குளிர்காலத்தில் சளி தவிர்க்க முடியாத நோய்த் தொற்றாக இருக்கிறது. அதனை சரி செய்ய நாம் பல வழிகளில் முயற்சி செய்திருப்போம். அவை பெரிய அளவில் பயனளித்திருக்காது. ஆனால், சளித் தொல்லையில் இருந்து விடுபட நமக்கு வீட்டு வைத்தியம் போதும்.
Advertisment
அந்த வகையில், சளியை இளக்கி வெளியேற்றும் கீரை குறித்து கூறியுள்ளார் சித்த மருத்துவர் சிவராமன். இதுதொடர்பாக அவர் ஹெல்த்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் பேசியிருப்பது வருமாறு:-
சளி, இருமல், தும்மல் அதிகம் இருக்கும் இந்தப் பருவத்தில், உடனே மருத்துவரை சந்தித்து மருந்து வாங்கக் கூடாது. அந்த சளியை இளக்கி வெளியேற்றும் உணவுகளை அல்லது உணவுப் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானதாக மிளகு இருக்கிறது. அரை டம்ப்ளர் பாலில் இரண்டு மூன்று மிளகு, கால் ஸ்பூன் மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்த பானத்தை இளஞ்சூடாக பருகினால், சளி குணமாகும்.
Advertisment
Advertisement
உணவைப் பொறுத்தவரையில், தூதுவளை, மணத்தக்காளிக் கீரையை நாம் சமைத்து சாப்பிடலாம். குறிப்பாக, தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை சட்னி, தோசை மாவுடன் தூதுவளை சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதேப்போல், மணத்தக்காளிக் கீரையையும் நாம் சமைத்து சாப்பிடலாம். இது சளியை இளக்கி வெளியேற்றுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இதேபோல், துளசி இலையில் கஷாயம் செய்து சாப்பிடலாம். ஒரு டம்ளர் துளசி சாறை கால் டம்ளராக வரும் வரை கொதிக்க விட்டு, அதில் கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்தது பருகி வரலாம்.
ஆடாதோடை இலை குழந்தைகளுக்கு ஏற்பட்டு இருக்கும் சளியை வெளியேற்ற உதவுகிறது. அத்துடன், ரத்த தடுக்கும் இது உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப் போக்கு இருந்தால், அதனை சரி செய்யவும் இந்த ஆடாதோடை இலை உதவுகிறது. சளி, இருமல் இருப்பவர்களுக்கு ஆடாதோடை இலை சாறில் கொஞ்சம் தேன் கலந்து கொடுக்கலாம். ஆடாதோடை இலை சாறில் வெல்லம் சேர்த்து பாகு போல் தயார் செய்து, அதனை மழைக் காலத்திலும், குளிர் காலத்திலும் பருகி வரலாம்.