/indian-express-tamil/media/media_files/2025/04/28/7Hevuo8vpnlXcBRQbTSR.jpg)
சோற்றுக் காற்றாழை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஹெல்தி தமிழ்நாடு (Healthy Tamilnadu)என்ற யூடியூப் சேனலில் டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். Image Source: Facebook/Gurusamy Sivaraman
தினமும் 5-8 கிராம் சோற்றுக் கற்றாழையை சாப்பிட்டால் உடல் சூடு காணாமல் போகும். சோற்றுக் கற்றாழையை எப்படி சாப்பிட வேண்டும், சோற்றுக் காற்றாழை சாப்பிட்டால் என்னென்ன உடல் நலப் பிரச்னைகள் சரயாகும் என்பதை டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
சோற்றுக் காற்றாழை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஹெல்தி தமிழ்நாடு (Healthy Tamilnadu)என்ற யூடியூப் சேனலில் டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
சோற்றுக் காற்றாழை சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து டாக்டர் சிவராமன் கூறுகையில், “கற்றாழை ஒரு மிகச்சிறந்த மூலிகை, கற்றாழையின் மடலுக்கு உள்ளே இருக்கக்கூடிய சோறு பகுதி தான் சாப்பிடக்கூடியது. அதை ஒரு நாளைக்கு 5-8 கிராம் வரைக்கும் எடுக்கலாம். அந்த சோற்றுக் கற்றாழை உள்ளே இருக்கும் சோறு பனிக்கட்டி மாதிரி இருக்கும். இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மாற்று சிந்தனை, படிப்பு பேசுறவங்க நிறைய பேருக்கு நல்ல பொருளாக இருந்தால் காலம் பூரா சாப்பிடலாம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. எந்த ஒரு பொருளையும் 45 நாள் 90 நாள் எடுக்கலாம். அதற்கு பிறகு, 1 ஆண்டு கழித்து எடுத்துக்கொள்ளலாம்.
சிலர் கிரவுண்டில் 4-5 ரவுண்டு ஓடிவிட்டு போகும்போது, அருகம்புல் ஜூஸ், கற்றாழை ஜூஸ் எல்லாம் குடிப்பார்கள், அவர்களுக்கு நிறைய உளவியல் பிரச்னை இருக்கிறது. ஏனென்றால், அவர்களுக்கு தன்னை பற்றிய பயம் அதிகம் இருக்கிறது. ஏதோ நமக்கு வந்துவிடும் அதனால், நல்ல பொருள் எல்லாத்தையும், ஒரு படத்தில் ஜனகராஜ் சொல்வதைப் போல, எல்லாத்தையும் 100 கிராம் போட்டு ஒண்ணா கலக்கி குடிச்சிடுவார்கள். அப்படி நம்ம மனநிலை இருக்கிறது.
கருவேப்பிலை நல்ல பொருள், கொத்தமல்லி நல்ல பொருள் அதையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம், நல்ல பொருள் எல்லாத்தையும் ஒன்றாக குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு உடல் சூடு இருக்கிறது என்றால், பித்த உடம்பு இருக்கிறது என்றால், அவர்கள் ஒரு 45 நாள் 60 நாள் எடுத்துக்கலாம். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வலி ரொம்ப வருகிறது என்றால், அவர்கள் சோற்றுக் கற்றாழை எடுத்துக்கலாம். குடல் புண்கள் நிறைய இருக்கு வாய்ப்புண் நிறைய வருகிறது என்றால் அவர்கள் சோற்றுக் கற்றாழை எடுத்துக் கொள்ளலாம், அது நோயைப் பொருத்து இருக்கும். அதே நேரத்தில், சீதோஷ்ன நிலையைப் பொருத்து இருக்கும்.
சோற்றுக் கற்றாழையை டிசம்பர் மாதத்தில் எடுத்து சாப்பிடக்கூடாது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எடுக்கிறதுதான் சிறப்பானது. நான் அறிந்த வகையில சோற்றுக் கற்றாழையினால், ஹார்மோன் பிரச்சனை எதுவும் இல்லை. சோற்றுக் கற்றாழையை நன்றாகக் கழுவிய பிறகு சாப்பிட வேண்டும், சோற்றுக் கற்றாழையின் பிசுபிசுப்புடன் உள்ளே போனால், பேதி ஆயிடும், மலச்சிக்கல் இருந்தால் மலம் கழியக்கூடிய தன்மை வரும். அதை தவிர அதில், ஒரு பெரிய தீங்கு விளைவிக்க கூடிய பொருள் கிடையாது. அதே போல, அடிக்கடி சளி, தும்மல், மூக்கடைப்பு, ஆஸ்துமா இருந்தால் சோற்றுக் கற்றாழை சாப்பிடக்கூடாது.” என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.