கேரட்டை விட பல ஆயிரம் மடங்கு சத்து அதிகம்... இந்தக் கீரையில் இப்படி சூப் சாப்பிடுங்க: டாக்டர் சிவராமன்
நம்ம நாட்டில் விளையக்கூடிய இந்தக் கீரை கேரட்டைவிட பல ஆயிரம் மடங்கு கண்களுக்கு நல்லது தரக்கூடிய சத்துக்கள் கொண்டது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அதனால், இந்தக் கீரையில் இப்படி சூப் செய்து சாப்பிடுங்கள் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

டாக்டர் சிவராமன் கூறுகையில், “நம்ம நாட்டில் விளையக்கூடிய iஇந்த கீரை கேரட்டைவிட பல ஆயிரம் மடங்கு கண்களுக்கு நல்லது தரக்கூடிய சத்துக்கள் கொண்டது என்று கூறுகிறார். (Image source: YouTube/ @RithuFoodies)
நம்ம நாட்டில் விளையக்கூடிய இந்தக் கீரை கேரட்டைவிட பல ஆயிரம் மடங்கு கண்களுக்கு நல்லது தரக்கூடிய சத்துக்கள் கொண்டது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அதனால், இந்தக் கீரையில் இப்படி சூப் செய்து சாப்பிடுங்கள் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Advertisment
டாக்டர் சிவராமன் கூறுகையில், “நம்ம நாட்டில் விளையக்கூடிய முருங்கைக் கீரை கேரட்டைவிட பல ஆயிரம் மடங்கு கண்களுக்கு நல்லது தரக்கூடிய சத்துக்கள் கொண்டது என்று கூறுகிறார். மேலும், “முருங்கைக் கீரையை நன்றாக ஒரு சூப் மாதிரி போட்டு சாப்பிடலாம், முருங்கை கீரையை தண்ணீரோடு வேக வைத்து, அதில், சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, எல்லாம் சேர்த்து போட்டு அந்த சூப்பை காலை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால், நிறைய பேருக்கு ரத்தக் கொதிப்பு குறையும். முருங்கைக் கீரை சூப்பை ரத்தக் கொதிப்பு நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டும். முருங்கைக் கீரைக்கு இணையான ஒரு விலை உயர்ந்த காயைக் கூட நாம் தேட முடியாது. அவ்வளவு சிறப்பான கீரை முருங்கை கீரை.” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
ரிது ஃபூடிஸ் என்ற யூடியூப் சேனலில் முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்று வீடியோ வெளியிட்டுள்ளனர். அதன்படி, எப்படி முருங்கை கீரை சூப் செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
முருங்கை கீரை சூப் செய்முறை:
Advertisment
Advertisements
முருங்கை கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளுங்கள், பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முருங்கை கீரையைப் போடுங்கள், சின்ன வெங்காயம் 8 போடுங்கள், தக்காளி ஒன்றை கட் பண்ணி போடுங்கள், சிறிது அளவு உப்பு போடுங்கள். சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள்.
பிறகு, அதை வடிக்கட்டி சூப்பை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய முருங்கைக் கீரையை ஒரு மிக்ஸி ஜாரில் போடுங்கள் அதனுடன், இஞ்சி ஒரு துண்டு, வெள்ளைப் பூண்டு 8 பல்லு போடுங்கள், சீரகம் கொஞ்சம் போடுங்கள், தனியா கொஞ்சம் போடுங்கள் நன்றாக அரைத்து, ஏற்கெனவே வடிகட்டி வைத்துள்ள முருங்கைக் கீரை தண்ணீரில் கலந்துவிடுங்கள், சிறிது மஞ்சள் தூள் போடுங்கள், சிறிது மிளகு தூள் போடுங்கள், பிறகு, லேசாக சூடுபடுத்தினால் ஆரோக்கியமான முருங்கைக் கீரை சூப் தயார். உங்கள் வீட்டில் இப்படி முருங்கை கீரை சூப் செய்து பாருங்கள்.