ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ... சுகரை குறைக்கும் இந்தப் 'பூ'-வின் கஷாயம்: இப்படி செய்து குடிங்க: டாக்டர் சிவராமன்
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்று சித்தமருத்துவம் ஆவாரையின் பெருமையைக் கூறுகிறது. அதனால், சுகரை குறைக்கும் ஆவாரம் 'பூ'-வின் கஷாயம் செய்து குடியுங்கள் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்று சித்தமருத்துவம் ஆவாரையின் பெருமையைக் கூறுகிறது. அதனால், சுகரை குறைக்கும் ஆவாரம் 'பூ'-வின் கஷாயம் செய்து குடியுங்கள் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் வழங்கிய ஆலோசனைகளை Tamil Speech Box யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்று சித்தமருத்துவம் ஆவாரையின் பெருமையைக் கூறுகிறது. அதனால், சுகரை குறைக்கும் ஆவாரம் 'பூ'-வின் கஷாயம் செய்து குடியுங்கள் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் வழங்கிய ஆலோசனைகளை Tamil Speech Box யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் சிவராமன் கூறுகையில், “ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச் சாறு எடுத்து, ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து டடதேன் வேண்டும் என விரும்புபவர்கள் அரை ஸ்பூன் தேன் கலந்து காலையில் முதல் பானமாக குடித்துவிட வேண்டும். ட்தினமும் காபி, டீ வேண்டாம், ஒருநாள் இந்த இஞ்சி, எலுமிச்சைபழச் சாறு போட்டு குடிப்போம். ஒரு நாள் நல்ல சுக்குமல்லி காபி போட்டு குடிப்போம். ஒரு நாள் சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி என திரிகடுகம் காபி குடிப்போம்.
Advertisment
Advertisements
ஒருநாள் கரிசலாங்கண்ணி தேநீர் அருந்துவோம், கரிசாலை தியாகராஜன் என்று சித்த மருத்துவம் சொல்கிறது. வள்ளலார் முதல் தொழுது வணங்குகிறார்கள். இந்த கரிசலாங்கண்ணியில் கையான் என்று ஒரு தைலம் செய்வார்கள். கரிசாலை கற்பம் மூச்சை சரியாக்ககூடியது என்றும் ரத்தத்தில் உள்ள கிருமியை சரி செய்யும் என்று போகர் பாடலில் கூறப்பட்டுள்ளது” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
“சர்க்கரை வியாதிகாரர்களுக்கு சரி செய்ய ஆவாரை குடிநீர் குடிக்க வேண்டும். “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்று சித்த மருத்துவம் சொல்கிறது.” என்று ஆவாரையின் பயனை மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
அதனால், “காலை பானமாக இவற்றில் ஏதாவது ஒன்றை குடிக்க வேண்டும். இவை அமேசானில் ஆர்டர் போட்டால் கிடைகுமா என்று கேட்காதீர்கள். நாம் தான் இதற்காக மெனக்கெட வேண்டும். சில விஷயங்களை வீட்டில் செய்து பழகுங்கள்” என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.